என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • மற்ற கட்சிகள் மாநாடு போன்று எங்கள் மாநாடு இருக்காது.
    • தமிழகத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி வரப்போகிறது.

    திருச்சி:

    திருச்சி திண்டுக்கல் ரோடு ஆலம்பட்டி புதூரில் வருகிற 21-ந்தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டு பணிகளை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த மாநாடு மாற்றத்தை விரும்பும் மக்களுக்கான மாநாடாக நடத்தப்பட உள்ளது. இது தமிழக இன அரசியல் வரலாற்றில் ஒரு பாய்ச்சலாகவும், ஒரு படிநிலை முன்னேற்றமாகவும், மாறுதலாகவும் அமையும். உயிரினங்கள் வாழ்வதற்கு ஐந்து பஞ்சபூதங்களும் அவசியம் வேண்டும். ஆனால் இன்றைக்கு உலக நாடுகள் நீரற்ற நிலமாக மாறி வருகின்றன.

    தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் நிலத்தடியில் நீர் இல்லை என இந்த அரசாங்கம் சொல்கிறது. செய்தி சொல்வதற்கு இந்த அரசு தேவையில்லை. அதனை சீர் செய்வதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் ஆறு மாவட்டங்களில் தண்ணீரில் யுரேனியம் கலந்து தாய்ப்பாலில் அது கலந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    ஆகவே தான் நாங்கள் இந்த நிலம், நீர், மரம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில் மாநாடு நடத்தியுள்ளோம். நாம் வழிபடுவதற்கு இங்கு ஒரு கோடி தெய்வங்கள் உள்ளன. ஆனால் நாம் வாழ்வதற்கு ஒரே ஒரு பூமி மட்டும் தான் இருக்கிறது. வருகிற 21-ந்தேதி நடைபெறும் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளோம். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். நான் போட்டியிடும் தொகுதியையும் அன்று அறிவிப்பேன்.

    இடைக்கால பட்ஜெட் குறித்து கேட்கிறீர்கள். தமிழ்நாட்டில் 10¼ லட்சம் கோடி கடனை வாங்கியுள்ளார்கள். இங்கு கடன் வளர்ச்சி தான் ஏற்பட்டுள்ளது. ஆகவே தான் இந்த ஆட்சி முறையை மாற்ற வேண்டும் எனச் சொல்கிறோம்.

    மற்ற கட்சிகள் மாநாடு போன்று எங்கள் மாநாடு இருக்காது. எங்கள் மாநாட்டில் தேர்தல் அறிக்கை என்பது கிடையாது. எங்கள் ஆட்சி எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான மாநாடாக தான் இருக்கப்போகிறது. மாற்றத்தை விரும்பும் மாநாடாக இருக்கப்போகிறது. இந்த பூமியை காக்க போவது யார் என்பதை உணர்த்துவதற்கான மாநாடாக இருக்கப் போகிறது.

    அன்று முதல் எங்கள் தேர்தல் பயணத்தை தொடங்க போகிறோம். தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி இருக்கும்போது ஒரே நாளில் ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கி மகளிர் உரிமை தொகை மற்றும் கூடுதலாக கோடைகால தொகை கொடுத்தது மிக பெரிய கொடுமையாக பார்க்கிறேன். தமிழகத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி வரப்போகிறது. மக்கள் சந்திப்பு பயணத்தை தற்போது நிர்வாகிகள் சந்திப்பு பயணம் என்று விஜய் மாற்றி உள்ளார் என்பதை எப்படி பார்க்கிறீர்கள்? என கேட்கிறீர்கள்.

    தம்பியை குறை சொல்வது என் வேலையில்லை. என்னுடைய வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன். அதை நீங்கள் என் தம்பியிடம் தான் கேட்க வேண்டும். இந்தியா கூட்டணி வலிமையாக இருப்பதற்கு முக்கிய காரணம் ஸ்டாலின்தான். அவர் இல்லை என்றால் இந்தியா கூட்டணி இல்லை. அவர் கொடுத்தது தான் காங்கிரஸ் 10 தொகுதி. அவர் விலகிவிட்டால் இந்தியா கூட்டணி கிடையாது. அதனால் தான் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஸ்டாலினை ஆதரித்து வருகிறார்கள் என்றார். 

    • கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு 20 ரெயில் சேவையும், செங்கல்பட்டிற்கு 35 ரெயில்களும் இயக்கப்பட உள்ளன.
    • மின்சார ரெயில்கள் குறைக்கப்பட்டு இருப்பதால் தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் கூடுதலாக பஸ் சேவையை அதிகரிக்க வேண்டும்.

    சென்னை:

    எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 10, 11 நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டு வரும் மின்சார ரெயில்கள் 5 மற்றும் 6 எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடைக்கு மாற்றப்பட்டுள்ளது.

    வருகிற 20-ந்தேதி முதல் அனைத்து மின்சார ரெயில்களும் 5 மற்றும் 6 நடைமேடையில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    45 நாட்கள் புதிய கால அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இது பயணிகளுக்கு பல்வேறு வழிகளில் சிரமங்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

    சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பயணிக்கும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருதப்படுகிறது. இந்த வழித்தடத்தில் தினமும் 320 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஆனால் தற்போது 164 மின்சார ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 160 ரெயில் சேவை குறைக்கப்பட்டு உள்ளது. இதுவரையில் இயக்கப்பட்டு வந்த மொத்த சேவையில் பாதி சேவை குறைக்கப்பட்டு இருப்பதால் பயணிகள் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

    கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு 20 ரெயில் சேவையும், செங்கல்பட்டிற்கு 35 ரெயில்களும் இயக்கப்பட உள்ளன. இது வழக்கமாக இயக்கப்படும் ரெயில் சேவையை விட மிக குறைவாகும். மின்சார ரெயில்கள் குறைக்கப்பட்டு இருப்பதால் தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் கூடுதலாக பஸ் சேவையை அதிகரிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய ஆயிரக்கணக்கான ஊழியர்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்பை சந்திக்க கூடும். எனவே இந்த 45 நாட்களும் பயணத்தை திட்டமிடுவது அவசியமாகும்.

    • சென்னை மற்றும் கோவையில் மல்டி லெவல் பார்க்கிங் அமைத்தும் சரியான பயன்பாடு இல்லை.
    • ஊட்டி கொடைக்கானலுக்கு இது அவசியம் என்றாலும் நிலத்தின் விலை அதிகமாக உள்ளது.

    ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைத்து தர வேண்டும் எனவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முன்பாக அதனை அமைத்து தர வேண்டும் என சட்டசபையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.

    அதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மற்றும் கோவையில் மல்டி லெவல் பார்க்கிங் அமைத்தும் சரியான பயன்பாடு இல்லை. ஊட்டி கொடைக்கானலுக்கு இது அவசியம் என்றாலும் நிலத்தின் விலை அதிகமாக உள்ளது. இருப்பினும் அவசியம் கருதி ஊட்டியில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பொதுமக்கள் பங்கேற்கும் சென்னை திட்டம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அறிமுகம் செய்யப்படும்.
    • சென்னை பக்கிங்காம் கால்வாய் வழித்தடத்தில் நகர்ப்புற பசுமையாக்கள் திட்டம் ரூ.45 கோடியில் மேம்படுத்தப்படும்.

    சென்னை மெரிாவில் கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் வே கார் வழித்தடம் அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

    மேலும் கூறிய அவர்,"சென்னை மாநகராட்சி பூங்காக்களில் மரங்கள் மூலம் பிராணவாயு உற்பத்தி செய்ய ஏதுவாக பசுமை சென்னை திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

    பொதுமக்கள் பங்கேற்கும் சென்னை திட்டம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அறிமுகம் செய்யப்படும்.

    சென்னை பக்கிங்காம் கால்வாய் வழித்தடத்தில் நகர்ப்புற பசுமையாக்கள் திட்டம் ரூ.45 கோடியில் மேம்படுத்தப்படும்.

    சென்னையில் அண்ணா நகர், தி.நகர், நுங்கம்பாக்கம் , அடையாறு போன்ற இடங்களில் மின் வாகன மின்னேற்ற நிலையம் அமைக்கப்படும்" என்றார்.

    • இந்த 10 தொகுதிகளும் தற்போது தி.மு.க.வுக்கும் சரி, அ.தி.மு.க.வுக்கும் சரி கவுரவ பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
    • கோவையில் அடுத்தடுத்து சில மாநாடுகளை நடத்தி தி.மு.க.வை பலப்படுத்த தலைமை திட்டமிட்டுள்ளது.

    கோவை:

    தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தற்போது கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரித்தல் ஆகிய பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    சட்டசபை தேர்தலை பொறுத்தவரை எப்போதுமே கொங்குமண்டல தொகுதிகளின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த பல தேர்தல்களில் அ.தி.மு.க., கொங்கு மண்டலங்களில் பெற்ற வெற்றியை கொண்டே அடுத்தடுத்து ஆட்சியை பிடித்தது. கடந்த தேர்தலில் மட்டும் இந்த சென்டிமெண்ட் பழிக்காமல் போனது.

    தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் கொங்கு மண்டல தலைநகராக விளங்கக் கூடிய கோவை மாவட்டத்தில் தி.மு.க.வால் ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் போனது. இதன்காரணமாக இந்த தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என முனைப்பில் கட்சி மேலிடம் காய்நகர்த்தி வருகிறது.

    இந்த 10 தொகுதிகளும் தற்போது தி.மு.க.வுக்கும் சரி, அ.தி.மு.க.வுக்கும் சரி கவுரவ பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இதனால் அ.தி.மு.க.வும் தொகுதிகளை பறிகொடுத்து விடக்கூடாது என்பதற்காக பல மாதங்களுக்கு முன்பே களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஊர், ஊராக நலத்திட்ட உதவிகள் வழங்குதல், தெருமுனை கூட்டங்கள் நடத்துதல் என பிரசாரங்களை தொடங்கி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொங்குமண்டல தி.மு.க. பொறுப்பாளராக செந்தில்பாலாஜி களமிறங்கி உள்ளார். ஏற்கனவே கோவை மாவட்டத்தை ஒட்டிய பல்லடத்தில் தி.மு.க. மகளிர் அணி மாநாட்டை பிரமாண்ட நடத்தி முடித்துள்ளார்.

    அதற்கடுத்து கோவையில் அடுத்தடுத்து சில மாநாடுகளை நடத்தி தி.மு.க.வை பலப்படுத்த தலைமை திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் மாநாட்டை கோவையில் நடத்த உள்ளது. ஒட்டுமொத்த கொங்கு மண்டல தொகுதிகளின் வெற்றியையும் குறிவைத்து இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.

    கோவை கருமத்தம்பட்டி கணியூர் டோல்கேட் அருகில் வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு என்ற பெயரில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றுகிறார்.

    இதுகுறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தலைமை கழக அனுமதியுடன் தி.மு.க. இளைஞர் அணிக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிளை-வார்டு-பாகங்களில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 28 மாவட்டங்கள் 91 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் நிர்வாகிகளை திருவண்ணாமலையிலும், தென் மண்டலத்துக்கு உட்பட்ட 20 கழக மாவட்டங்கள், 58 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த ஒரு லட்சம் நிர்வாகிகளை விருதுநகரிலும் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    இதைத்தொடர்ந்து இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணி அளவில் கோவை கருமத்தம்பட்டி கணியூர் டோல்கேட் அருகில் மேற்கு மண்டல தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது.

    இதில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த கழக மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், கிளை மற்றும் வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து வரலாறு படைத்திட அந்தந்த மாவட்ட கழக செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டசபை உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து இளைஞர் அணி நிர்வாகிகளை மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பிற்கு அழைத்து வரும் பொறுப்பினை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    22-ந்தேதி கோவையில் நடைபெற உள்ள மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த மாநாட்டை தொடர்ந்து தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டையும் கோவையில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அநேகமாக அந்த மாநாடு இந்த மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத முதல் வாரத்திலே இருக்கலாம் என கூறப்படுகிறது. வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என தெரிகிறது.

    • இலவச மடிக்கணினி, 7.5% இடஒதுக்கீடு, நீட் தேர்வு ரத்து விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி.
    • நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு என்ன சாதித்தது.

    சட்டசபையில் இலவச மடிக்கணினி, 7.5% இடஒதுக்கீடு, நீட் தேர்வு ரத்து விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக அவர் பேசுகையில்,

    * நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு என்ன சாதித்தது.

    * நீட் தேர்வை ரத்து செய்தீர்களா?

    * நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

    • ஆளுநர் மாளிகைக்கு முன்பாக எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. நடத்திய போராட்டத்தால் 7.5% இடஒதுக்கீடு சட்டமானது.
    • 7.5% இடஒதுக்கீட்டிற்காக நாங்கள் பேசினோம் என்ற ஆதாரத்தை காட்ட சொல்லுங்கள்.

    சட்டசபையில் 7.5% இடஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க. - அ.தி.மு.க. உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

    அவையில் கே.பி.முனுசாமி பேசுகையில், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் சேர 7.5% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆளுநர் மாளிகைக்கு முன்பாக எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. நடத்திய போராட்டத்தால் 7.5% இடஒதுக்கீடு சட்டமானது என்று கூறினார்.

    தளவாய் சுந்தரம், விஜயபாஸ்கர் உங்களுடைய இடத்திற்கு செல்லுங்கள் இல்லையென்றால் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

    நடவடிக்கை எடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் உண்மைக்கு புறம்பான கருத்தை அமைச்சர் சொல்கிறார்.

    7.5% இடஒதுக்கீட்டிற்காக நாங்கள் பேசினோம் என்ற ஆதாரத்தை காட்ட சொல்லுங்கள், அமைச்சர் தவறான கருத்தை பதிவு செய்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    • நெய்வாசலில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
    • தற்காலிகமாக கடை அமைத்திருந்த முதியவரின் டேபிள் உள்ளிட்டவற்றை காவலர் ஒருவர் சூறையாடினர்.

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நெய்வாசலில் அண்மையில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

    அப்போது தன்னுடைய அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்ற இடத்தில் தற்காலிகமாக கடை அமைத்திருந்த முதியவரின் டேபிள் உள்ளிட்டவற்றை காவலர் ஒருவர் சூறையாடினர்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், முதியவரின் கடையை எட்டி உதைத்து கீழே தள்ளிய காவலரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிய திருச்சி சரக ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • இளைய தலைமுறையை பாதுகாக்க வேண்டும், தமிழ் சமூகத்தை பாதுகாக்க வேண்டும்.
    • எங்களது கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் வைப்போம்.

    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்தார். பின்னர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. தி.மு.க. கூட்டணியில் தான் காங்கிரசும் உள்ளது. தி.மு.க. கூட்டணி மிகவும் கட்டுக்கோப்பாக உள்ளது. மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கான கோரிக்கை அல்ல, ஒட்டு மொத்தமாக மக்களின் கோரிக்கை. இந்தியா முழுவதும் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது. புள்ளி விவரங்கள் இந்த உண்மையை தெரிவிக்கிறது.

    தமிழகத்தில் மதுக்கடைகளை அடுத்தடுத்து படிப்படியாக குறைத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை எங்கள் கட்சி மாநாட்டில் வலியுறுத்தி வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இன்றும் உறுதியாக உள்ளோம். அது தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பது கவலை அளிக்கிறது. மறுபடியும் ஆளும் கட்சியான தி.மு.க.விற்கு இந்த கோரிக்கையை நினைவூட்டுகிறேன்.

    இளைய தலைமுறையை பாதுகாக்க வேண்டும், தமிழ் சமூகத்தை பாதுகாக்க வேண்டும். எனவே மது மற்றும் போதை பொருளை கட்டுப்படுத்துவதற்கும், முற்றிலுமாக ஒழிப்பதற்கும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முன்வர வேண்டும்.

    இந்த பட்ஜெட்டில் மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.1.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே கொடுத்த தொகையை மக்கள் செலுத்தவில்லை என கூறுகிறீர்கள். இது குறித்து அரசு தான் கவலைப்பட வேண்டும். இது நல்லெண்ணத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது. அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.

    கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி நிதி கொடுத்து இந்த ஒன்றிய அரசு தள்ளுபடி செய்துள்ளது. அதைப் பற்றி இந்த நாடு கவலைப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்பது பேச்சுவார்த்தையில் முடிவாகும். அவ்வாறு அவர்கள் கேட்பதால் கூட்டணி உடையாது.

    உழைக்கிறோம், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பது தவறு கிடையாது. தமிழக அரசியலுக்கு அது பொருந்தாது என முதல்வர் தெரிவித்திருக்கிறார். எப்படி பொருந்தி வராது என்பதை அவர் விளக்குவார். எங்களைப் போல காங்கிரஸ் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று கிடையாது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களது கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் வைப்போம். தி.மு.க. கூட்டணியில் பிரச்சனை இல்லை என்றார்.

    • விரைவாக செல்லவும், இயற்கை அழகை ரசித்தபடி செல்லவும் ரோப் காரில் பயணம் மேற்கொள்கின்றனர்.
    • ரோப்கார் சேவை வழக்கம் போல் இயக்கப்படும் என பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் சேவை மற்றும் மின் இழுவை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப் காரில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். விரைவாக செல்லவும், இயற்கை அழகை ரசித்தபடி செல்லவும் ரோப் காரில் பயணம் மேற்கொள்கின்றனர்.

    இந்நிலையில் ரோப் கார் பராமரிப்பு பணிக்காக தினமும் ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை ரோப்கார் சேவை வழக்கம் போல் இயக்கப்படும் என பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் திடீரென மின்னணு பழுது ஏற்பட்டதால் ரோப் கார் இன்று காலை இயக்கப்படவில்லை. இதனால் ரோப் கார் ஊழியர்கள் தொடர்ந்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    நீண்ட நேரம் காத்திருந்தும் ரோப்கார் இயக்க முடியாததால் பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரெயில் மூலமாக மலைக்கோவில் சென்று முருகனை தரிசனம் செய்யுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. முன்னறிவிப்பு இன்றி திடீரென ரோப்கார் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

    • அதிகாரம் ஓரிடத்தில் குவிந்து விடாமல் பரவலாக்கப்பட வேண்டும்.
    • பன்முக தன்மை கொண்ட இந்தியாவிற்கு கூட்டாட்சி தான் அடிப்படை.

    சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட சதிகளை முறியடிக்க ஒரே வழி மாநில சுயாட்சி தான்.

    * இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நாம் மாற்ற வேண்டும்.

    * முயன்றால் மீண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்த முடியும்.

    * அதிகாரம் ஓரிடத்தில் குவிந்து விடாமல் பரவலாக்கப்பட வேண்டும்.

    * இந்தியாவை முதிர்ச்சி அடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றுவதற்கான முயற்சியை நாம் தொடங்க வேண்டும்.

    * பன்முக தன்மை கொண்ட இந்தியாவிற்கு கூட்டாட்சி தான் அடிப்படை.

    * மாநிலங்கள் வளர்ந்தால் தான் நாடும் வளரும் என்பதை மத்திய அரசிற்கு உணர்த்துவோம்.

    * இது தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கை அல்ல. இந்திய மக்களின் வாழ்வியலுக்கும் வளர்ச்சிக்குமான கோரிக்கை என்று கூறினார்.

    இதையடுத்து மத்திய - மாநில அரசு உறவு குறித்து ஆய்வு செய்த உயர்நிலைக் குழு அறிக்கையை சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

    • அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு தன் வசம் வைத்துள்ளது.
    • மாநில அரசுகளை மத்திய அரசு ஒருபோதும் மதிப்பதில்லை.

    சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது தி.மு.க.

    * அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறது தமிழ்நாடு.

    * நிதி உரிமைக்காக தமிழ்நாடு இன்னமும் போராட வேண்டிய நிலைதான் உள்ளது.

    * அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு தன் வசம் வைத்துள்ளது.

    * அனைத்து மாநிலங்களும் சுயாட்சியை பெற்றிருக்க வேண்டும்.

    * மாநில சுயாட்சி கொள்கையை அரசியல் எல்லைகளை கடந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    * மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு அடிப்படை உரிமையை மத்திய அரசிடம் போராடி பெற வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளோம்.

    * மாநில அரசுகளை மத்திய அரசு ஒருபோதும் மதிப்பதில்லை.

    * அனைத்து அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு மத்திய அரசு ஏதேச்சதிகாரமாக செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×