என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • காமராசர் நிலையில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
    • கூட்டணியில் இருந்து மம்தா ஏற்கனவே வெளியேறிவிட்டார்.

    இந்தியா கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பொறுத்தமான தலைவர் என முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மணி சங்கர் அய்யர் தெரிவித்திருந்தார். மேலும் நேருவுக்கு பின் பிரதமராகும் வாய்ப்பைப் பெற்றவர் காமராசர். ஆனால் காமராசர் தனக்கு ஆங்கிலம், ஹிந்தி தெரியாது என மறுத்தார். இன்று ஸ்டாலினும் அதேபோன்ற சூழலில்தான் இருக்கிறார் என நினைக்கிறேன்.

    நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி வருவதற், கூட்டணியை ஒருங்கிணைக்க ஒரு ஆளுமை தேவை. ஸ்டாலின் வெற்று அரசியல் முழக்கங்களை எழுப்பிவருபவர் அல்ல. கடந்த சில வருடங்களாக அவர் பேசிவரும் ஒவ்வொரு தத்துவமும் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது. நாட்டின் முக்கியமான பிரச்சனைகளையே பேசுகிறார். எனவே ராகுல் பிரதமராக ஸ்டாலினால் துணைநிற்க முடியும். அவர் திறமையானவர். அந்தத் திறன் ஸ்டாலினிடம் மட்டும்தான் உள்ளது. ராகுல் காந்தியின் பிரதமர் பதவிக்கு அவர் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டார். எனவும் தெரிவித்தார்.

    மேலும் இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் இந்தியா கூட்டணியின் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்மொழிந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 

    "இந்தியா கூட்டணியிலேயே வலுவாக இருப்பது திமுகதான். ஏனெனில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது. காங்கிரஸிற்கு 10 உறுப்பினர்களை தந்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் காங்கிரஸிற்கு இந்த வலு இல்லை. அதனால் மு.க.ஸ்டாலின் வெளியேறிவிட்டால் இந்தியா கூட்டணி என்பது எழுத்தில் மட்டும்தான் இருக்கும். வேறு எந்த வலுவான தலைவர்களும் அந்த அணியில் இருக்கமாட்டார்கள். கூட்டணியில் இருந்து மம்தா ஏற்கனவே வெளியேறிவிட்டார். கூட்டணியில் இருந்தால்கூட சிலர் தனித்தே தேர்தலை சந்திக்கின்றனர்.

    இந்த சூழலில் ஸ்டாலினும் வெளியேறிவிட்டால், இந்தியா கூட்டணி எங்கு இருக்கும்? இந்தக் கூட்டணியில் தற்போது வலுவாக இருப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். என தெரிவித்தார்.

    • விளம்பர வெளிச்சத்தில் காலத்தை கடத்தும் விடியல் அரசு தேசிய அரசியலுக்கு வழித்தேடப்போகிறதாம்.
    • கையில் குறிப்பு இல்லாமல் மேடையில் ஒரு நிமிடம் கூட பேசத்தெரியாதவர் இந்திய தலைவர்களுக்கு ஆலோசனை.

    இந்தியா கூட்டணிக்கு தேசிய அளவில் மு.க.ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜியை தலைவராக்க வேண்டும் என்று உத்தவ் சிவசேனா கட்சியின் சாம்னா நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து விமர்சித்த தவெக பரப்புரை செயலாளர நாஞ்சில் சம்பத்," இந்தியா கூட்டணிக்கு ஸ்டாலின் தலைமையேற்க வேண்டுமென சிலர் பிதற்றுவதை கேட்டால் ரத்தக்கண்ணீர் தான் வருகிறது" என்றார்.

    இதுகுறித்து நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தலைமை தகுதிக்கு ஒரு தராசு வேண்டாமா?

    இண்டி (I.N.D.I.A) கூட்டணிக்கு அண்ணன் ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும் என்று சிலர் பிதற்றுகிறார்கள். இதைக் கேட்கும்போது எனக்கு சிரிப்பு வரவில்லை, நாட்டின் கதியை நினைத்து ரத்தக் கண்ணீர் தான் வருகிறது!

    தமிழகத்தின் திசையெங்கும் திராவிட மாடல் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, திக்கெட்டும் வெறும் விளம்பர வெளிச்சத்திலேயே காலத்தைக் கடத்தும் ஒரு விடியல் அரசு, இப்போது தேசிய அரசியலுக்கு வழி தேடப் போகிறதாம்! கதர் சட்டையை குறைத்து மதிப்பிடுகிறார்களா?

    மதிப்பிற்குரிய முதல்வர் அவர்கள், கையில் குறிப்பு எடுத்துத் தராமல் மேடையில் ஒரு நிமிடம் கூட பேசத் தெரியாதவர். அகில இந்தியத் தலைவர்களுக்கு ஆலோசனைக் கூறப் போகிறாராம். பீகாரில் பரப்புரை தாக்கத்தை நாடு பார்த்ததே. தமிழ்நாட்டிலேயே விடிவெள்ளி எப்போது வரும் என்று மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் தேசிய அளவில் டார்ச் அடிக்கப் போவதாகக் கிளம்பிவிட்டார்கள்.

    கொள்கைக் குன்றாக, மக்களின் நாடித்துடிப்பை அறிந்த தலைவர் விஜய் அவர்கள் களமிறங்கிய பிறகு, பலருக்குக் கை, கால் நடுக்கம் எடுக்கத் தொடங்கிவிட்டது. அதிலிருந்து தப்பிக்கவே 'தேசியத் தலைமை' என்கிற பொருந்தா பட்டத்தை சூட்டி, இவரை இங்கிருந்து அனுப்பிவிட சிலர் துடிக்கிறார்கள் போலிருக்கிறது.

    தலைமை என்பது பெறுவது அல்ல; அது தகுதியால் தானாக சேர வேண்டிய இடம். இங்கே பலருக்கு தகுதியே தட்டுப்பாடாக இருக்கும்போது, தலைமைக்கு ஆசைப்படுவது 'ஆகாசத் தாமரைக்கு' ஆசைப்படுவது போன்றது! சரிதான், தாமரை அவர்களுக்கு பிடித்த ஒன்று தானே..

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மகேசின் சிறுநீரகம், கண்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகளை தானம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • நகரின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் ஆவரைகுளம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(வயது 23). கபடி வீரரான இவருக்கும், குமரி மாவட்டம் மருங்கூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடந்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் (16-ந்தேதி) மதியம் மகேஷ் காவல்கிணறு பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது அவர் மூளைச்சாவு அடைந்தார்.

    இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்கு அவரது மனைவியும் சம்மதம் தெரிவித்தார். மகேசின் சிறுநீரகம், கண்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகளை தானம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதற்கான நடவடிக்கையில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவினர் ஈடுபட்டனர். இன்று காலையில் மகேசின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கண்கள், கல்லீரல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. அவற்றை 5 பேருக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதற்காக தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சுகள் மூலமாக அவற்றை கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். மகேசன் ஒரு சிறுநீரகம் திருச்சியில் உள்ள ஆஸ்பத்திரிக்கும், மற்றொரு சிறுநீரகம் காரைக்குடியில் உள்ள ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டன. இதேபோல் கல்லீரலும் திருச்சியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. கண்கள் நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மகேசின் உடல் உறுப்புகளுடன் ஆம்புலன்சுகள் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து நாகர்கோவில் நகரில் போக்குவரத்தை சரி செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதற்காக நகரின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் ஆம்புலன்சுகள் வந்தபோது மற்ற வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர்.

    இதனால் உடல் உறுப்புகளை கொண்டு சென்ற ஆம்புலன்சுகள், எந்தவொரு நெரிசலிலும் சிக்காமல் நாகர்கோவில் நகரை சில நிமிடங்களில் கடந்து சென்றது. பின்பு சிறிது நேரத்தில் மகேசின் உடல், அவர்களது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    அவர்கள் கூறுகையில், "மகேஷ் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய நாங்கள் முடிவு செய்தோம். அவரது உறுப்புகளை கொண்டு சிலர் உயிர் வாழ்வார்கள் என்ற நல்லெண்ணத்துடன் இந்த முடிவை எடுத்தோம். அதன் அடிப்படையில் அவரது கிட்னி, கல்லீரல், கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது" என்று கண்ணீர் மல்க கூறினார்கள். 

    • கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் வன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    • வனப்பகுதிகள் மற்றும் கிராமப்புற எல்லைகள் வழியாக நடைபெறும் கடத்தலை தடுக்க வனத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

    கோவை:

    தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் சில நாட்களில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சம்பந்தப்பட்ட மாநிலங்களில் நிர்வாக மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    தேர்தல் காலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் உருவாகாமல் தடுக்கவும், சட்டவிரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், தமிழகமும் கேரளாவும் இணைந்து எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்கினார். கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் வன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதேபோல கேரளாவில் இருந்து பாலக்காடு மாவட்ட கலெக்டர் மாதவி குட்டி, போலீஸ் அதிகாரி அஜித்குமார், திருச்சூர் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, எர்ணாகுளம் மாவட்டத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரியங்கா, இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேசன், போலீஸ் சூப்பிரண்டு சாபு மேத்யூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தேர்தல் காலங்களில் அதிகரிக்கும் பணப் பரிமாற்றங்கள், சட்டவிரோதமாக பணம் மற்றும் பொருட்கள் கடத்தல், போதைப்பொருள் நகர்வு போன்றவற்றை தடுக்க ஒருங்கிணைந்த கண்காணிப்பு அவசியம் என கருத்து தெரிவிக்கப்பட்டது.

    சோதனைச் சாவடிகள் அதிகரித்தல், வாகன சோதனைகளை தீவிரப்படுத்தல், இரவு நேர கண்காணிப்பை பலப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    மேலும், வனப்பகுதிகள் மற்றும் கிராமப்புற எல்லைகள் வழியாக நடைபெறும் கடத்தலை தடுக்க வனத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

    எல்லைப்பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு கூடுதல் பணியாளர்கள் நியமித்தல், பறக்கும் படைகளை அமைத்தல், முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    தேர்தல் ஆணையம் அறிவிக்கும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    சட்டமன்றத் தேர்தல் நேர்மையாகவும் அமைதியாகவும் நடைபெறுவதற்கு இரு மாநிலங்களின் இணைந்த நடவடிக்கை முக்கியம் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    • வலிமையான - உண்மையான கூட்டாட்சி இந்தியாவைக் கட்டமைப்போம்.
    • மாநில சுயாட்சிக் கருத்தியலின் தேவையை இந்தியா முழுக்கக் கொண்டு சேர்ப்போம்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களையும் உரிமைகளையும் பெற்றுத்தந்து, வலிமையான - உண்மையான கூட்டாட்சி இந்தியாவைக் கட்டமைப்போம்!

    மாநில சுயாட்சிக் கருத்தியலின் தேவையை இந்தியா முழுக்கக் கொண்டு சேர்த்து, எண்ணங்களால் ஒன்றிணைத்து, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வோம்!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • நமது சாதனைத் திட்டங்களால் பெண்கள் - வெல்லும் தமிழ்ப் பெண்களாக உயர்ந்துள்ளனர்.
    • ஸ்டாலினின் மகளிர் படை என இப்பரப்புரை சிறப்பிட அமைந்திட வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு பெண்களுக்கான 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' - 'விடியல் பயணம்' - 'தோழி விடுதிகள்' - 'புதுமை பெண் திட்டம்' உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மகளிருக்கான ஆட்சியென நடைபெற்று வருகிறது. நமது சாதனைத் திட்டங்களால் பெண்கள் - வெல்லும் தமிழ்ப் பெண்களாக உயர்ந்துள்ளனர். பெண்கள் பயனாளிகள் மட்டுமல்ல, மாநில வளர்ச்சியின் பங்குதாரர்கள் என்ற சீரிய சிந்தனையுடன் செயலாற்றும் 'திராவிட மாடல் அரசு' நிறைவேற்றியுள்ள நலத் திட்டங்களையும் - 'பெண்களின் முன்னேற்றமே தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றம்' எனும் கொள்கை உறுதியுடன் பெண்களுக்கான எண்ணற்ற பல திட்டங்களையும் - சாதனைகளையும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மகளிரிடம் எடுத்து சென்று சேர்ப்பதே இப்பரப்புரையின் நோக்கமாக இருக்க வேண்டும்.

    இப்பரப்புரையை, வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளும் விதமாக தி.மு.கழகத்தின் சார்பில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாவட்டச் செயலாளர்களால் வழங்கப்பட்டுள்ள பட்டியலின் அடிப்படையில், 10 மகளிரை கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் சார்பில் ஒரு உறுப்பினர் வீதம் தேர்வு செய்யப்பட்டு தொகுதி அளவிலான பயிற்சிக் கூட்டங்களை நடத்திட வேண்டும். "வெல்லும் தமிழ்ப் பெண்கள்"பரப்புரைக்கான சட்டமன்றத் தொகுதி வாரியான பயிற்சிக் கூட்டத்தை வரும் பிப்ரவரி 20, 21 மற்றும் 22-ஆம் தேதிகளுக்குள் அனைத்து தொகுதிகளிலும் நடத்தி முடித்திட வேண்டும்.

    இப்பயிற்சியை, சட்டமன்றத் தொகுதி மகளிர் அணி பொறுப்பாளர்கள் வழங்குவர். பயிற்சிக் கூட்டத்தில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரை பற்றிய முழு பயிற்சியும் வாக்குச்சாவடி அளவிலான மகளிர் குழு பொறுப்பாளர்களுக்கு அளிக்கப்படும். அதன் பிறகு அவர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள இதர உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்து பரப்புரையைத் தொடங்கிட வேண்டும்.

    தேர்தலை காரணமாக வைத்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தையே முடக்குவதற்கான ஒன்றிய பா.ஜ.க. - அடிமை அ.தி.மு.க.வின் சூழ்ச்சிகளை முறியடித்து, " நீ ஆயிரம் ரூபாயை நிறுத்த முயற்சித்தால், நான் என் மக்களுக்கு ரூபாய் ஐந்தாயிரமாக தருவேன்" என சூளுரைத்து பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான தொகையினை முன்பணமாக ரூ.3000/-, கோடைக் கால சிறப்புத் தொகுப்பு ரூ.2,000/- என மொத்தம் ரூ.5000/-த்தினை தமிழ்நாட்டு பெண்களுக்கு வழங்கிய திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் வீடு வீடாக எடுத்துச் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, 'திராவிடமாடல் 2.0' ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.2,000/-மாக உயர்த்தி வழங்கப்படும் என்ற எனது உறுதிமொழியையும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தடையின்றி தொடர, கழக ஆட்சி தொடர்வது அவசியம் என்பதையும் மகளிர்க்கு உணர்த்திட வேண்டும்.

    வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் "வெல்லும் தமிழ்பெண்கள் - வீடு வீடாகப் பரப்புரை" தொடங்கி, உலக மகளிர் தினமான மார்ச்-8ஆம் தேதிக்குள் அனைத்து வீடுகளையும் சென்றடையும் வகையில் சிறப்பாக நடத்திட வேண்டும்.

    கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கழகத்தின் வெற்றியை உறுதி செய்து மீண்டும் தி.மு.கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திட புறப்பட்டுவிட்டது இந்த ஸ்டாலினின் மகளிர் படை என இப்பரப்புரை சிறப்பிட அமைந்திட வேண்டும்.

    வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மண்டல பொறுப்பாளர்கள் - பொறுப்பு அமைச்சர்கள் - மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் செய்துதர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனைத்து நிரந்தர, தற்காலிக மற்றும் வெளிமுகமை தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம்.
    • 20 முக்கிய இடங்களில் ஸ்மார்ட் பார்க்கிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம் செயல்படுத்தப்படும்.

    சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி, மருத்துவம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 90 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

    கடந்த ஆண்டு 62 அறிவிப்புகள் மட்டுமே வெளியிட்ட நிலையில் நடப்பாண்டில் 90 அறிவிப்புகளை சென்னை மேயர் பிரியா அறிவித்தார்.

    இதில், கோடை காலம் முழுவதும் தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

    அனைத்து நிரந்தர, தற்காலிக மற்றும் வெளிமுகமை தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 50 விளையாட்டு திடல்களை ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை மாநகராட்சியில் மெரினா, பெசன்ட் நகர், வண்ணாரப்படே்டை உள்ளிட்ட 20 முக்கிய இடங்களில் ஸ்மார்ட் பார்க்கிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம் செயல்படுத்தப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் உள்ளன.
    • எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சம்மேளன தலைவர் தன்ராஜ் தலைமை வகித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு லாரிக்கு தகுதி சான்று (எப்சி) பெறுவதற்கு ரூ. 850 ஆக இருந்த கட்டணத்தை மத்திய அரசு ரூ.28,200 ஆக உயர்த்தி உள்ளது. இதை அமல்படுத்துவதும், நிறுத்தி வைப்பதும் மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ளது. பல மாநிலங்களில் இந்த கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அபரிதமான எப்.சி. கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி தமிழக அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம். சுமார் 3 மாதங்களாகியும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.

    அதன் காரணமாக தமிழகம் முழுவதும் 1 லட்சம் லாரிகள் தகுதி சான்று பெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சரக்கு ஆட்டோ, வேன் (எல்சிவி) உள்ளிட்ட லட்சக்கணக்கான வாகனங்கள் தகுதி சான்று செய்யாமல் ஓட்ட முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் உள்ளன. இந்த தொழிலை நம்பி சுமார் 1.5 கோடி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் தொடர்ந்து எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். அதன்படி எப்.சி. கட்டணத்தை ரத்து செய்யக்கோரி வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் காலவரையற்ற போராட்டம் தொடங்கும். சுமார் 20 லட்சம் வாகனங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும். வெளி மாநில லாரிகள் உள்ளிட்ட அனைத்து லாரிகளும் தமிழகத்தில் இயங்காது. ஏற்கனவே இக்கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை, கும்பகோணம், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் கடந்த 16-ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கினால் அத்தியாவசிய பொருட்களான முட்டை, கோழி தீவனம், காய்கறிகள் மற்றும் இரும்பு தளவாட சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நேற்று பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும்.

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    20-ந்தேதி தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 20-ந்தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    21-ந்தேதி குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • மற்ற கட்சிகள் மாநாடு போன்று எங்கள் மாநாடு இருக்காது.
    • தமிழகத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி வரப்போகிறது.

    திருச்சி:

    திருச்சி திண்டுக்கல் ரோடு ஆலம்பட்டி புதூரில் வருகிற 21-ந்தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டு பணிகளை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த மாநாடு மாற்றத்தை விரும்பும் மக்களுக்கான மாநாடாக நடத்தப்பட உள்ளது. இது தமிழக இன அரசியல் வரலாற்றில் ஒரு பாய்ச்சலாகவும், ஒரு படிநிலை முன்னேற்றமாகவும், மாறுதலாகவும் அமையும். உயிரினங்கள் வாழ்வதற்கு ஐந்து பஞ்சபூதங்களும் அவசியம் வேண்டும். ஆனால் இன்றைக்கு உலக நாடுகள் நீரற்ற நிலமாக மாறி வருகின்றன.

    தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் நிலத்தடியில் நீர் இல்லை என இந்த அரசாங்கம் சொல்கிறது. செய்தி சொல்வதற்கு இந்த அரசு தேவையில்லை. அதனை சீர் செய்வதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் ஆறு மாவட்டங்களில் தண்ணீரில் யுரேனியம் கலந்து தாய்ப்பாலில் அது கலந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    ஆகவே தான் நாங்கள் இந்த நிலம், நீர், மரம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில் மாநாடு நடத்தியுள்ளோம். நாம் வழிபடுவதற்கு இங்கு ஒரு கோடி தெய்வங்கள் உள்ளன. ஆனால் நாம் வாழ்வதற்கு ஒரே ஒரு பூமி மட்டும் தான் இருக்கிறது. வருகிற 21-ந்தேதி நடைபெறும் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளோம். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். நான் போட்டியிடும் தொகுதியையும் அன்று அறிவிப்பேன்.

    இடைக்கால பட்ஜெட் குறித்து கேட்கிறீர்கள். தமிழ்நாட்டில் 10¼ லட்சம் கோடி கடனை வாங்கியுள்ளார்கள். இங்கு கடன் வளர்ச்சி தான் ஏற்பட்டுள்ளது. ஆகவே தான் இந்த ஆட்சி முறையை மாற்ற வேண்டும் எனச் சொல்கிறோம்.

    மற்ற கட்சிகள் மாநாடு போன்று எங்கள் மாநாடு இருக்காது. எங்கள் மாநாட்டில் தேர்தல் அறிக்கை என்பது கிடையாது. எங்கள் ஆட்சி எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான மாநாடாக தான் இருக்கப்போகிறது. மாற்றத்தை விரும்பும் மாநாடாக இருக்கப்போகிறது. இந்த பூமியை காக்க போவது யார் என்பதை உணர்த்துவதற்கான மாநாடாக இருக்கப் போகிறது.

    அன்று முதல் எங்கள் தேர்தல் பயணத்தை தொடங்க போகிறோம். தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி இருக்கும்போது ஒரே நாளில் ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கி மகளிர் உரிமை தொகை மற்றும் கூடுதலாக கோடைகால தொகை கொடுத்தது மிக பெரிய கொடுமையாக பார்க்கிறேன். தமிழகத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி வரப்போகிறது. மக்கள் சந்திப்பு பயணத்தை தற்போது நிர்வாகிகள் சந்திப்பு பயணம் என்று விஜய் மாற்றி உள்ளார் என்பதை எப்படி பார்க்கிறீர்கள்? என கேட்கிறீர்கள்.

    தம்பியை குறை சொல்வது என் வேலையில்லை. என்னுடைய வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன். அதை நீங்கள் என் தம்பியிடம் தான் கேட்க வேண்டும். இந்தியா கூட்டணி வலிமையாக இருப்பதற்கு முக்கிய காரணம் ஸ்டாலின்தான். அவர் இல்லை என்றால் இந்தியா கூட்டணி இல்லை. அவர் கொடுத்தது தான் காங்கிரஸ் 10 தொகுதி. அவர் விலகிவிட்டால் இந்தியா கூட்டணி கிடையாது. அதனால் தான் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஸ்டாலினை ஆதரித்து வருகிறார்கள் என்றார். 

    • கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு 20 ரெயில் சேவையும், செங்கல்பட்டிற்கு 35 ரெயில்களும் இயக்கப்பட உள்ளன.
    • மின்சார ரெயில்கள் குறைக்கப்பட்டு இருப்பதால் தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் கூடுதலாக பஸ் சேவையை அதிகரிக்க வேண்டும்.

    சென்னை:

    எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 10, 11 நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டு வரும் மின்சார ரெயில்கள் 5 மற்றும் 6 எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடைக்கு மாற்றப்பட்டுள்ளது.

    வருகிற 20-ந்தேதி முதல் அனைத்து மின்சார ரெயில்களும் 5 மற்றும் 6 நடைமேடையில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    45 நாட்கள் புதிய கால அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இது பயணிகளுக்கு பல்வேறு வழிகளில் சிரமங்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

    சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பயணிக்கும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருதப்படுகிறது. இந்த வழித்தடத்தில் தினமும் 320 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஆனால் தற்போது 164 மின்சார ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 160 ரெயில் சேவை குறைக்கப்பட்டு உள்ளது. இதுவரையில் இயக்கப்பட்டு வந்த மொத்த சேவையில் பாதி சேவை குறைக்கப்பட்டு இருப்பதால் பயணிகள் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

    கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு 20 ரெயில் சேவையும், செங்கல்பட்டிற்கு 35 ரெயில்களும் இயக்கப்பட உள்ளன. இது வழக்கமாக இயக்கப்படும் ரெயில் சேவையை விட மிக குறைவாகும். மின்சார ரெயில்கள் குறைக்கப்பட்டு இருப்பதால் தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் கூடுதலாக பஸ் சேவையை அதிகரிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய ஆயிரக்கணக்கான ஊழியர்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்பை சந்திக்க கூடும். எனவே இந்த 45 நாட்களும் பயணத்தை திட்டமிடுவது அவசியமாகும்.

    • சென்னை மற்றும் கோவையில் மல்டி லெவல் பார்க்கிங் அமைத்தும் சரியான பயன்பாடு இல்லை.
    • ஊட்டி கொடைக்கானலுக்கு இது அவசியம் என்றாலும் நிலத்தின் விலை அதிகமாக உள்ளது.

    ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைத்து தர வேண்டும் எனவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முன்பாக அதனை அமைத்து தர வேண்டும் என சட்டசபையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.

    அதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மற்றும் கோவையில் மல்டி லெவல் பார்க்கிங் அமைத்தும் சரியான பயன்பாடு இல்லை. ஊட்டி கொடைக்கானலுக்கு இது அவசியம் என்றாலும் நிலத்தின் விலை அதிகமாக உள்ளது. இருப்பினும் அவசியம் கருதி ஊட்டியில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×