என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • கூட்டணி குறித்து பொது வெளியில் பேசக் கூடாது.
    • காங்கிரஸ் தலைமை 5 நபர் குழுவை தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நியமித்து உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிக தொகுதிகள் வேண்டும் என்று கேட்பதுடன், ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் விஜய் தலைமையிலான த.வெ.க. கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆனால் கூட்டணி விவகாரம் பற்றி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியும் முடிவு செய்வார்கள் என்றும் மற்றவர்கள் சொல்வது அவரவர் சொந்த கருத்து என்றும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறி இருந்தார்.

    இந்த நிலையில் டெல்லியில் தமிழக காங்கிரசாருடன் ராகுல்காந்தி, கார்கே உள்ளிட்ட தலைவர்கள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். கூட்டணி தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். இதில் பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகள் தி.மு.க.வுடன் கூட்டணி தொடர வேண்டும் என்றே வலியுறுத்தி பேசி உள்ளனர்.

    அதுமட்டுமின்றி தி.மு.க. வுடன் கூட்டணியை தொடர ராகுல்காந்தி திட்டவட்டமாக முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கூட்டணி குறித்து பொது வெளியில் பேசக் கூடாது. சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிரக் கூடாது என்றும் நிர்வாகிகளிடம் அவர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

    இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தி.மு.க. செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி இதுவரை தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையோ அல்லது தேசிய காங்கிரஸ் தலைவரோ, தி.மு.க.வை விட்டு வேறு கட்சியில் பேசவில்லை என்றும், தி.மு.க.வுடன்தான் இருக்கிறோம் என்றும் பேசுகிறார்கள்.

    காங்கிரஸ் தலைமை 5 நபர் குழுவை தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நியமித்து உள்ளது. எனவே மேலிடம் தௌிவாக உள்ளது. இங்கு லோக்கலில் சில பேர் வேறுவிதமாக பேசுகிறார்களே தவிர, காங்கிரஸ் அதிகாரப்பூர்வமான தலைமை தி.மு.க.வுடன் இருப்பதை இதுவரை உறுதி செய்துள்ளது.

    அதில் எந்த மாற்றமும் அவர்கள் சொல்லவில்லை. இந்த கூட்டணி அப்படியே தொடர்கிறது.

    கே: காங்கிரசில் ஒரு சிலர், விஜய் கட்சியுடன் போகலாம் என்று பேசுகிறார்களே?

    ப: அப்படி பேசுபவர்கள் தலைவர்கள் இல்லை. இஷ்டத்துக்கு அவர்கள் கருத்தை சொல்கிறார்கள். எங்கு சொல்ல வேண்டுமோ அங்கு சொல்லாமல் பொது வெளியில் பேசுவதுதான் குழப்பத்தை உண்டாக்குகிறது. அதை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்றார். 

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • ஓசூரைச் சுற்றியுள்ள வான்பகுதி ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் கட்டுப்பாட்டில் உள்ளது.
    • விவசாய நிலங்களை விட்டுத்தர முடியாது என அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஓசூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான வான்வெளி அனுமதியை வழங்க முடியாது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஓசூரைச் சுற்றியுள்ள வான்பகுதி ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ராணுவ மற்றும் சோதனை விமானங்கள் பறப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, ஒருபுறம் மத்திய அரசின் நிராகரிப்பு இருந்தாலும், மறுபுறம் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் உள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர்.

    விவசாய நிலங்களை விட்டுத்தர முடியாது என அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    • சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
    • இது வரும் ஜனவரி 30-ஆம் தேதி நள்ளிரவு வரை தொடரும்.

    இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை (ஜனவரி 26, 2026) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இன்று (ஜனவரி 18) முதல் இந்தச் சிறப்புப் பாதுகாப்பு நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    அதன்படி, விமான நிலையத்தின் வெளிப்பகுதி முதல் விமானங்கள் நிற்கும் பகுதி வரை ஐந்து அடுக்கு பாதுகாப்பு முறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது வரும் ஜனவரி 30-ஆம் தேதி நள்ளிரவு வரை தொடரும்.

    குடியரசு தினத்திற்கு முந்தைய தினங்களான ஜனவரி 24, 25 மற்றும் ஜனவரி 26 ஆகிய மூன்று நாட்களில் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு, ஏழு அடுக்கு பாதுகாப்பாக உயர்த்தப்படும்.

    பாதுகாப்புச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் சிரமத்தைத் தவிர்க்க முன்னதாகவே விமான நிலையம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

    • இந்த மருந்தை வைத்திருப்பவர்கள் அதை முறையாக அழிக்க அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    • மருந்தின் வினியோகத்தைத் தடுக்க தமிழ்நாட்டில் உள்ள மருந்து கடைகள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பீகார் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 'அல்மாண்ட் கிட்' சிரப்பில் எதிலீன் கிளைகால் என்ற உயிர்க்கொல்லி நச்சு வேதிப்பொருள் கலப்படமானது கண்டறியப்பட்டு உள்ளது. 'அல்மாண்ட் கிட் சிரப்' மருந்தை உட்கொண்டால் கடுமையான உடல்நலக்கேடுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த மருந்தை வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் உட்கொள்வதற்கு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தடை செய்துள்ளது.

    மேற்கூறிய மருந்தில் உள்ள எதிலீன் கிளைக்கால் என்ற நச்சு வேதிப்பொருள் சிறுநீரக செயலிழப்பு, மூளை, நுரையீரல் போன்ற வேறு உறுப்புகளையும் பாதிப்படையச் செய்து இறப்பை ஏற்படுத்தக்கூடும்.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சில்லரை விற்பனையாளர்கள், வினியோகஸ்தர்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் மருந்தகங்கள் இந்த மருந்தை உடனடியாக விற்பனையில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இந்த மருந்து வினியோகிக்கப்பட்டாலோ அல்லது விற்பனை செய்யப்பட்டாலோ உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். நுகர்வோர்கள் மருந்துகள் வாங்கும்போது பேட்ச் எண்களை (ஏ.எல்.24002) சரிபார்த்து அதன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

    இந்த மருந்தை வைத்திருப்பவர்கள் அதை முறையாக அழிக்க அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இம்மருந்தின் வினியோகத்தைத் தடுக்க தமிழ்நாட்டில் உள்ள மருந்து கடைகள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஏதேனும் விளக்கங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் புகார்களுக்கு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்தின் 9445865400 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மருந்து குழந்தைகளுக்கு சளி மற்றும் ஒவ்வாமைக்கு மருந்தாக பயன்படுத்தக்கூடியது ஆகும்.

    • 2014 இல் மோடி அவர்கள் எவ்வளவோ வாக்குறுதிகளை வாரி வழங்கினார்.
    • தேர்தல் தொடர்பான அவருடைய வாக்குறுதிகள் வெளிப்படுத்துகின்றன.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலத் தலைவர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2014 இல் மோடி அவர்கள் எவ்வளவோ வாக்குறுதிகளை வாரி வழங்கினார். அதில் முக்கியமானது "ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன்" என்றது.

    ஆட்சியைப் பிடிக்க ஆயிரம் பொய் சொல்லலாம் என்ற மோடியின் தந்திரத்தை எடப்பாடி பழனிச்சாமியும் பின்பற்றத் தொடங்கிவிட்டார் என்பதை தான் தேர்தல் தொடர்பான அவருடைய வாக்குறுதிகள் வெளிப்படுத்துகின்றன.

    தமிழக மக்களே, எடப்பாடி பழனிசாமி இப்போது மோடியுடன் சேர்ந்து வருகிறார் உஷார்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்த மாற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
    • சென்னை கடற்கரையில் இருந்து மாலை 3.52 மணிக்கு ஏ.சி.மின்சார ரெயில் (49005) புறப்பட்டு மாலை 4.47 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் 2 ஏ.சி.மின்சார ரெயில் சேவையின் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த மாற்றம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன் விவரம் வருமாறு:-

    தாம்பரத்தில் இருந்து மதியம் 2.25 மணிக்கு ஏ.சி.மின்சார ரெயில் (வண்டி எண்.49004) புறப்பட்டு மதியம் 3.20 மணிக்கு கடற்கரை வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை கடற்கரையில் இருந்து மாலை 3.52 மணிக்கு ஏ.சி.மின்சார ரெயில் (49005) புறப்பட்டு மாலை 4.47 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • திருப்பதி நகர், சுந்தர விநாயகர் கோவில் தெரு, ராதாகிருஷ்ணன் நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (19.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    வியாசர்பாடி: செட்டிமேடு, காத்தகோழி, சங்கீதா நகர், ஜெயராஜ் நகர், பாய் நகர், மகாவீர் எஸ்டேட், குமார் ராஜன் நகர், திருப்பதி நகர், சுந்தர விநாயகர் கோவில் தெரு, ராதாகிருஷ்ணன் நகர், கே.வி.டி., தனலட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், சந்தோஷ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    • சுமார் 97.37 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
    • காலக்கெடு முடிந்துவிட்டால், அடுத்த திருத்தப் பணி வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

    தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்புத் திருத்தப் பணிகளின்போது (SIR), போலிப் பெயர்கள், இரட்டைப் பதிவுகள் மற்றும் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டு சுமார் 97.37 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

    நீக்கப்பட்ட இவ்வளவு பெரிய எண்ணிக்கையில், இதுவரை 12.80 லட்சம் பேர் மட்டுமே மீண்டும் பெயர் சேர்க்க அல்லது புதிய பதிவுகளுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

    உயிரிழந்த வாக்காளர்களைத் தவிர்த்துப் பார்த்தால், இன்னும் சுமார் 53.65 லட்சம் பேர் தங்கள் பெயர்களை மீண்டும் பதிவு செய்யாமல் உள்ளனர். இவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்காவிட்டால், வரும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும்.

    இன்று (ஜனவரி 18) பெயர் சேர்க்கை, முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான கடைசி நாள். காலக்கெடு முடிந்துவிட்டால், அடுத்த திருத்தப் பணி வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

    அதனால், வாக்காளர்கள் தங்களின் வாக்கு உரிமையை காப்பாற்றிக் கொள்ள இன்றே தங்களின் வாக்கு மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
    • சில முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது.

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு சில முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் இருப்பதால் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • துரைமுருகனுக்கு ஏற்பட்ட உடல்நலம் பாதிப்பு கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு.

    சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வழக்கமான மருத்துவ பரிசோதனையின்போது துரைமுருகனுக்கு ஏற்பட்ட உடல்நலம் பாதிப்பு கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

    விஜய் சேதுபதி பெரும் நிதி உதவி அளித்தார்.

    நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சமூக ஆர்வலர் வீரராகவன் ஆகியோர் இணைந்து முன்னெடுத்து வரும் "வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம்" (VVVSI) இளைஞர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

    புதுச்சேரியைச் சேர்ந்த வீரராகவன் என்பவர் ஒரு மத்திய அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். 2016-ஆம் ஆண்டு முதல் பகுதி நேரமாக வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் தகவல்களைப் பகிர்ந்து வந்தார்.

    விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வீரராகவன் பங்கேற்றபோது, அவரது சேவையைக் கண்டு வியந்த விஜய் சேதுபதி, "நீங்கள் வேலையை விட்டுவிட்டு முழுநேரமாக இதைச் செய்யுங்கள், உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன்" என்று வாக்குறுதி அளித்தார்.

    வாக்கு கொடுத்தபடியே, இந்த இயக்கம் ஒரு முழுமையான அலுவலகமாகச் செயல்பட விஜய் சேதுபதி பெரும் நிதி உதவி அளித்தார்.

    விஜய் சேதுபதி புதுச்சேரியில் இதற்கான பிரத்யேக அலுவலகத்தை அமைத்துக் கொடுத்து தொடங்கி வைத்தார்.

    அங்கு பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வீரராகவன் ஆகியோருக்கான மாதாந்திரச் சம்பளத்தைத் தனது சொந்தப் பணத்திலிருந்து விஜய் சேதுபதியே வழங்கி வருகிறார்.

    ×