என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மதுரை அமர்வு உத்தரவிட்டது.
- டி.எஸ்.பி. விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமாரை கடந்த 2025 ஜூன் 27-ந் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர். அதில் ஜூன் 28-ந் தேதி அவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மதுரை அமர்வு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் தங்களுக்கு ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. தரப்பில், அஜித் குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. வழக்கு பதியப்பட்டுள்ள 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி நகை திருட்டு புகார் அளிக்கப்பட்டது உண்மையா? என கேள்வி எழுப்பினர். அதற்கு சி.பி.ஐ. தரப்பில், அது உண்மை இல்லை. அறிக்கையே தயாராகி வருகிறது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? அவர் தானே காரணம்? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து இதற்கு என்ன காரணம்? முன்விரோதம் ஏதும் இருந்ததா? என கேள்வி எழுப்பினார். முன்விரோதம் எதுவும் இல்லை. டி.எஸ்.பி. விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, "யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனது பதறுகிறது. ஒன்றுமில்லா விசயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள்" என குறிப்பிட்டு வழக்கை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- வருகிற 20-ந்தேதி நீலாங்கரையில் கட்சியின் தலைமை அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.
- வருகிற 28-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளார்.
ம.தி.மு.க.வில் இருந்து விலகிய மல்லை சத்யா திராவிட வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். தற்போது மாவட்டம் வாரியாக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். சட்டசபை தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்தார்.
இந்த நிலையில் கட்சிக்கு புதிதாக அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டு வருகிற 20-ந்தேதி நீலாங்கரையில் கட்சியின் தலைமை அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் மல்லை சத்யா தி.மு.க. கூட்டணியில் சேர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இருந்தாலும் கூட அதில் சேர்ந்து களப்பணி ஆற்றவே அவர் விரும்புவதாக தெரிகிறது. வருகிற 28-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளார். எழும்பூரில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திராவிட வெற்றிக்கழகம் தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதற்கான முடிவை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
- மதம் மற்றும் தேசப்பற்று என்று காரணம் காட்டி தங்கள் இடத்தை மீண்டும் தக்கவைத்து கொள்ள தவிக்கிறார்கள்.
- எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்கள்.
தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் விரோதிகளின் கடைசி ஆயுதம் "தேசப்பற்று". பலநூறு ஆண்டுகள் கல்வி, வேலைவாய்ப்பு முதல் சமூக, சமுதாய கட்டமைப்பில் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு சனாதான கும்பல் வர்ணாசிரமம் முதல் குல கல்வி வரை எம் அப்பாவி மக்களை உண்டு கொழுத்து கிடந்தார்கள்.
அவர்களுக்கு சுயமரியாதை, சமூக நீதி விழிப்புணர்வு ஏற்பட்டதும் மதம் மற்றும் தேசப்பற்று என்று காரணம் காட்டி தங்கள் இடத்தை மீண்டும் தக்கவைத்து கொள்ள தவிக்கிறார்கள். எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்கள். அதைத்தான் இப்போது பா.ஜ.க. செய்கிறது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- பஸ்சை அந்தியூர் புதுப்பாளையம் பகுதி சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டினார்.
- அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக தனியார் மருத்துவமனையில் ராஜாவை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையத்திலிருந்து இன்று காலை 9.10 மணியளவில் மேட்டூர் நோக்கி அரசு பஸ் கிளம்பியது. பஸ்சை அந்தியூர் புதுப்பாளையம் பகுதி சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டினார். சக்திவேல் நடத்துநராக இருந்தார். பஸ் 35 பயணிகளுடன் கிளம்பியது.
இந்நிலையில் அண்ணா மடுவு பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவர் ராஜாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக இதற்கு மேல் பஸ்சை இயக்க முடியாது என உணர்ந்த ராஜா பஸ்சை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே நிறுத்தினார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி அதிகமானதால் அலறினார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக அந்த தனியார் மருத்துவமனையில் ராஜாவை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நல்ல வேலையாக நெஞ்சு வலி ஏற்பட்டவுடன் ராஜா பஸ்சை சாமர்த்தியமாக ஓரமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் பஸ்ஸில் இருந்த 35 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து அந்தியூர் பணிமனை மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து வேறு பஸ் வரவழைக்க பயணிகள் பத்திரமாக ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- சேலம்-கோவை மெயின் ரோட்டில் இதற்காக 25 ஏக்கர் நிலத்தில் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
- மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் இன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். வேலூருக்கு இந்த மாதம் 2-வது வாரத்தில் நடிகர் விஜய் வருகை தர உள்ளதாக கூறி அங்கு கட்சி நிர்வாகிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சேலத்தில் வருகிற (13-ந்தேதி) விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அக்கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இதையடுத்து சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று இரவு மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி இன்ஸ்பெக்டர் வேலுதேவனிடம் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் கூறும் போது, சேலத்தில் ஏற்கனவே விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்தோம். ஆனால் சில காரணங்களால் பொதுக்கூட்டம் நடத்த முடியாமல் போனது. இந்த முறை வருகிற (13-ந்தேதி) மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள ஒரு திறந்தவெளி இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேச உள்ளார். அதற்கான முன்னேற்பாடு பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறோம் என்றார். சேலம்-கோவை மெயின் ரோட்டில் இதற்காக 25 ஏக்கர் நிலத்தில் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் இன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.
இதற்கிடையே சேலம் மாநகர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள மேலும் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.
புறநகர் பகுதியில் மகுடஞ்சாவடி பகுதியிலும், மாநகர் பகுதியில் சீலநாயக்கன்பட்டி பகுதியிலும் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. எந்த இடத்திற்கு அனுமதி கொடுக்கப்படுகிறதோ, அந்த இடத்தில் பணிகளை தொடங்க நிர்வாகிகள் திட்டமிட்டு உள்ளனர்.
- நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்கள் கலந்து கொண்டு எழுச்சி உரை ஆற்றுகிறார்கள்.
- இது மாற்றத்திற்கான இயக்கம் என மார்தட்டிக் கொண்டு என் வழி, தனி வழி என சீமான் செயல்பட்டு வருகிறார்.
எப்போதும் நாங்கள் தனிக்காட்டு ராஜா என்பது போல 2026 சட்டமன்ற தேர்தல் களத்தையும் தனித்து சந்திப்போம் என அறைகூவல் விடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தலுக்கான வெற்றிக்கு தீவிரமாக செயலாற்றி வருகிறார்.
இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு அடித்தளமாக மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு என்ற மாநில அளவிலான மாநாட்டினை திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலம்பட்டி புதூரில் அக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த மாநாடு வருகிற பிப்ரவரி 21-ந்தேதி நடைபெறுகிறது. சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்படுகிறது.
இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்கள் கலந்து கொண்டு எழுச்சி உரை ஆற்றுகிறார்கள். மேலும் இந்த மாநாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதி வேட்பாளர்களையும் சீமான் அறிமுகம் செய்கிறார். 117 ஆண் வேட்பாளர்கள், 117 பெண் வேட்பாளர்கள் மற்றும் சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் திருநங்கை வேட்பாளர் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட உள்ளனர்.
மாநாடு பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 9.30 மணிக்கு நிறைவு பெறுகிறது. தற்போது விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக்கழக தாக்கத்தால் அவரது வாக்கு வங்கியில் சேதாரம் ஏற்படும் என பலரும் ஆருடம் தெரிவித்து வரும் சூழலில் தமக்கான வாக்கு வங்கியில் எந்த சேதாரமும் ஏற்படுத்த விடமாட்டோம். இது மாற்றத்திற்கான இயக்கம் என மார்தட்டிக் கொண்டு என் வழி, தனி வழி என சீமான் செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் மதுரையில் மாடுகளின் மாநாடு, சென்னையில் மரங்களின் மாநாடு, தர்மபுரியில் மலைகளின் மாநாடு, கல்லணை திருக்காட்டுப் பள்ளியில் நீர் மாநாடு போன்றவற்றை நடத்தி அரசியல் அரங்கை அதிரடித்தார். இது போன்ற மாநாடுகளை சிலர் கேலி செய்தாலும் இது அவருடைய வாக்கு வங்கியை பல தளத்திலும் விரிவாக்கும் முயற்சி என்பதை விவரம் அறிந்தவர்கள் உணர்ந்துள்ளனர்.
இந்தநிலையில் திருச்சி ஆலம்பட்டி புதூர் மாநாட்டுக்கான கால் கோள்விழா இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு மாநாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
- தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி தான் பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது.
- சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் விவகாரம் என்பது முடிந்து போன கதை.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 2-ம் கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலை தொங்கி காட்சியளித்து கொண்டிருப்பதாக விமர்சித்தார். மேலும் அவர் கூறுகையில்,
* 2 மாதங்களுக்கு முன்னர் அ.தி.மு.க. கூட்டணி குறித்து பலரும் கிண்டல் செய்தனர்.
* தற்போது தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி தான் பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது.
* தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமை வகிக்கும்.
* நாட்டை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள அதிமுகவும் தேசிய அளவிலான கட்சி.
* கரூர் சம்பவம் நடந்து 75 நாட்கள் கடந்து வீட்டை விட்டு வெளியே வந்தவர் விஜய்.
* நாட்டில் என்ன நடக்கிறது என்றே த.வெ.க. தலைவர் விஜய்க்கு தெரியவில்லை. பொதுவெளியில் வந்தால் தான் நாட்டில் என்ன நடக்கிறது என தெரியும்.
* ஒரு கட்சியின் தலைவருக்கு நாட்டில் என்ன நடக்கிறது எனத் தெரிந்திருக்க வேண்டும்.
* அ.தி.மு.க. ஆட்சியை எப்படி ஊழல் ஆட்சி என விஜய் கூற முடியும்?
* விஜய் மக்களையும் பார்க்கவில்லை, தொலைக்காட்சியையும் பார்க்கவில்லை.
* விஜய் நேரில் செய்தியாளர்களை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும், அப்போதுதான் தமிழ்நாட்டில் உண்மை நிலவரம் அவருக்கு தெரியும்.
* ஊழல் வழக்கில் சிறை சென்ற செங்கோட்டையனை அருகில் வைத்துக்கொண்டு ஊழல் குறித்து விஜய் பேசுகிறார்.
* சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் விவகாரம் என்பது முடிந்து போன கதை.
* சசிகலா விவகாரம் குறித்து ஏற்கனவே பலமுறை தெளிவுப்படுத்தி விட்டேன்.
* ஜெயலலிதாவின் ஆன்மா துரத்தியதால் தான் மனோஜ் பாண்டியன் தி.மு.க.விற்கு சென்று விட்டார்.
* எங்கள் மீது குறை கூற ஒன்றும் இல்லை, எந்த தவறும் செய்யாத அதிமுக மீது குறைகளை முதல்வர் தேடிக்கொண்டிருக்கிறார்.
* பொம்மை முதல்வர், திறமையற்ற முதல்வர் என மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
- ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
- ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 2-ம் கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-
* முதியோர் உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.
* ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
* ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
* ஜல்லிக்கட்டின் போது படுகாயமடைந்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
* மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்வி கடனை ரத்து செய்யப்படும்.
* மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
* சிறுபான்மையின மக்கள் சுய தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றார்.
- வழக்கமாக சொல்லும் திருக்குறள் கூட மத்திய பட்ஜெட்டில் இல்லை.
- தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு கூட பட்ஜெட்டில் நிதி இல்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.254.29 கோடி மதிப்பிலான 29 திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்யும் 'என் கனவு என் எதிர்காலம்' திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். ரூ.390 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என எதுவுமில்லை.
* வழக்கமாக சொல்லும் திருக்குறள் கூட மத்திய பட்ஜெட்டில் இல்லை.
* தமிழ்நாட்டின் மீதும், தமிழர்கள் மீதும் பா.ஜ.க.விற்கு அவ்வளவு வெறுப்பு
* தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு கூட பட்ஜெட்டில் நிதி இல்லை.
* தேர்தல் முடிவு தெரிந்து விட்டதால் நிதியை ஒதுக்க பா.ஜ.க. மறுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முடக்க சிலர் உச்சநீதிமன்றம் வரை சென்றார்கள்.
- விதிகளை தளர்த்தி 16,94,000 பேருக்கு கூடுதலாக மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.254.29 கோடி மதிப்பிலான 29 திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்யும் 'என் கனவு என் எதிர்காலம்' திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். ரூ.390 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* சோழர் காலத்திலும் பல்லவர் காலத்திலும் வர்த்தக நகராக இருந்த சிறப்புக்குரிய நகரம் திண்டிவனம்.
* சென்னையின் நுழைவு வாயிலாக இருப்பது திண்டிவனம்.
* தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத பல திட்டங்களை அறிவித்து நிறைவேற்றி வருகிறோம்.
* உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் மூலம் பெறப்பட்ட 4.5 லட்சம் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்பட்டது.
* மக்களின் தேவைகளை உன்னிப்பாக கவனித்து விரைவாக நிறைவேற்றி வருகிறோம்.
* மக்களின் தேவையை கண்டறிந்து அவர்கள் இடத்திற்கே சென்று தீர்வு காணப்படுகிறது.
* உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முடக்க சிலர் உச்சநீதிமன்றம் வரை சென்றார்கள். அவர்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது.
* பல தடைகளை தாண்டி உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இன்று வெற்றி பெற்றுள்ளது.
* உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் இதுவரை 10,000 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
* விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்தது மட்டுமின்றி சொல்லாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* முதல்வரின் முகவரி திட்டத்தின் வாயிலாக 1.49 கோடி மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளோம்.
* அரசு சேவைகள் மக்களுக்கு தடையின்றி, விரைவாக கிடைக்க வேண்டும்.
* மக்களின் குறைகள், தேவைகளை உன்னிப்பாக கவனித்து நிறைவேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு.
* உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஊரக பகுதிகளில் 15 துறைகளும் நகரப்பகுதிகளில் 13 துறை சார்ந்த முகாம்கள் நடத்தப்பட்டது.
* ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு, குடும்ப அட்டை, சொத்துவரி பெயர் மாற்றுதல், பட்டா கேட்டு அதிக மனுக்கள் வந்தது.
* பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காண்பதில் நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் 40 நாட்களில் தீர்வு காணப்பட்டது.
* விதிகளை தளர்த்தி 16,94,000 பேருக்கு கூடுதலாக மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெல்லையப்பர் கோவிலில் சமபந்தி விருந்தில் சுமார் 900 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
- என்னுடன் அமர்ந்திருந்த பெண் வீட்டிற்கு உணவு வேண்டும் என கேட்டார்.
நெல்லையப்பர் கோவில் சமபந்தியில் நரிக்குறவர் சிறுவர்கள் அனுமதிக்கப்படவில்லை என புகார் எழுந்ததையடுத்து, தவறான தகவலை திட்டமிட்டு பரப்புவதாக நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
* அண்ணா நினைவு நாள் சமபந்தியில் நரிக்குறவரின சிறுவர்கள் விரட்டியடிப்பு என திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது.
* நெல்லையப்பர் கோவிலில் சமபந்தி விருந்தில் சுமார் 900 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. நானே நேரில் ஆய்வு செய்தேன்.
* பிற்பகல் 1.20 மணிக்கு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
* சமூக நீதி கடைபிடிக்கப்பட்டு அனைவருக்கும் சமமான உணவு வழங்கப்பட்டது.
* தானும் சபாநாயகரும் அங்கு இருந்தவர்களுடன் அமர்ந்து சமபந்தி உணவை அருந்தினோம்.
* என்னுடன் அமர்ந்திருந்த பெண் வீட்டிற்கு உணவு வேண்டும் என கேட்டார். அவருக்கும் பார்சல் செய்து கொடுத்தோம்.
* வதந்தி பரப்பும் நபர் உணவு தீர்ந்த பின்னர் குழந்தைகளை அழைத்து வந்தார்.
* முறையாக கோவில் ஊழியர் அவரிடம் உணவு இல்லை என்பதை எடுத்துரைத்தார்.
* அரசியல் தூண்டுதலின் பேரில் குறிப்பிட்ட நபர் வேண்டுமென்றே வதந்தி பரப்பு வருகிறார்.
* சமூக நீதிக்கு இழுக்கு ஏற்படுத்தும் எந்த செயலும் நெல்லையப்பர் கோவிலில் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெளிநாடுகளில் இருந்து 3 லட்சம் பேர் த.வெ.க.வுக்கு வாக்கு அளிக்க உள்ளனர்.
- தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விஜய் யாரை கை காட்டுகிறாரோ அவர்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்கள்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த வெள்ளாங்கோவில் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் புதிய அலுவலகத்தை நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் செங்கோ டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* த.வெ.க.தலைவர் விஜய்யின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது .
* அனைத்து இல்லங்களிலும் த.வெ.க.வின் குரல் ஒலித்துகொண்டு இருக்கிறது.
* 3-ம் ஆண்டு விழாவில் விஜய் சிறப்பாக உரையாற்றினார். அவருடைய இலக்கு தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதுதான். தமிழகத்தில் ஏற்கனவே இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆண்டு உள்ளன. இந்த முறை மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்.
* வெளிநாடுகளில் இருந்து 3 லட்சம் பேர் த.வெ.க.வுக்கு வாக்கு அளிக்க உள்ளனர்.
* தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விஜய் யாரை கை காட்டுகிறாரோ அவர்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்கள்.
* ராசிபுரம் கூட்டத்தில் அ.தி.மு.க கூட்டத்தில் அவர்களே த.வெ.க கொடியை பிடித்து விட்டு த.வெ.க.வினர் வந்தனர் என தவறாக கூறியுள்ளனர்.
* வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க சார்பில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிடுவதற்காக நாளை மறுநாள் விருப்ப மனு அளிக்க உள்ளேன்.
* முருகன் பக்தி பாடலை பாடி வேல்முருகன் ஆட கூறியதால் விஜய் நடனம் ஆடினார். அதை விமர்சனம் செய்கிறார்கள். நயினார் நாகேந்திரன், எஸ்.பி.வேலுமணி சலங்கை கட்டி ஆடவில்லை.
* எப்போதும் விஜயுடன் தான் இருப்பேன். 2 நாட்களில் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகும்.
* ஆட்சிக்கு வந்தபிறகு பட்ஜெட் குறித்து பேசுகிறோம்.
* திண்டுக்கல் சீனிவாசன், விஜய் கருப்பு பணம் வாங்குவது குறித்து ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். வாய் இருக்கிறது என்பதற்காக எது வேண்டுமானாலும் பேசக்கூடாது.
* அவர்கள் யாரிடம் அடிமையாக இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
* த.வெ.க.தனித்துப் போட்டியிடுவது குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மவுனம் வெற்றிக்கு அறிகுறி என்றார்.
இதனிடையே, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் த.வெ.க.வால் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி சரியாது, தி.மு.க.விற்கு தான் பாதிப்பு என்று சொல்லி உள்ளார். அதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு,
2026 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். தேர்தல் முடிவுக்கு பிறகு யார் எங்களை கண்டு அச்சப்படுகிறார்கள். யாருக்கு நாங்கள் போட்டி. யாருடைய வாக்கு வங்கி சரிகிறது என்பது தெரியவரும், என்றார்.






