என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • கண்டென்ட்டில் கிங் தி.மு.க.தான்.
    • 2019-ல் இருந்து தமிழ்நாட்டில் நடந்த எல்லா தேர்தல்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

    தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் சந்திப்பு இன்று சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது உரையாற்றிய அவர்,

    "இந்தியாவிலேயே பூத் அளவில் டிஜிட்டல் ஏஜெண்டுகளை வைத்திருக்கும் ஒரே அரசியல் இயக்கம் தி.மு.க.தான். ஆன்லைன் மட்டுமின்றி, ஆஃப்லைனிலும் கலக்கும் அணியாக தி.மு.க. ஐடி அணி இருக்கிறது. ஆன்லைனில் உங்கள் வேலை ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்வது மட்டுமில்லை. அஜந்தாவை செட் செய்வது. ஏனெனில் கண்டென்ட்டில் கிங் தி.மு.க.தான்.

    நம்மை களங்கப்படுத்தி, தமிழ்நாட்டிற்குள் நுழைய, சிதைக்க எதிரிகள் நினைக்கின்றனர். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் அவதூறுகள். அவதூறு பரப்புவோருக்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்காமல், ஆக்கப்பூர்வ பணிகளும் செய்ய வேண்டும்.

    டிஃபென்ஸ் மட்டுமே ஆடக்கூடாது. அவ்வப்போது அட்டாக் மோடிலும் செயலாற்ற வேண்டும். அடித்து ஆட வேண்டும். நிறைய திட்டங்களை மக்களுக்கு கொடுத்திருக்கிறோம். கடந்த மாதத்தில் மட்டுமே எவ்வளவோ பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அறிந்துகொள்ள என்னுடைய சமூக வலைதளப் பக்கம், திமுகவின் பக்கங்கள், அரசு சமூக வலைதளப் பக்கங்களை பின்தொடருங்கள். ஐடி விங்கின் வாட்ஸ் ஆப் சேனலை அனைவரையும் பின்தொடர வைய்யுங்கள். நம் சாதனைகள்தான் பேச்சுப் பொருளாக இருக்கவேண்டும். 

    தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்கி, அதில் குளிர்காய எதிரிகள் நினைக்கின்றனர். கடந்த ஐந்து மாதங்களில் பல திட்டங்களை போட்டனர். பொய் செய்திகளை பரப்ப முயன்ற திட்டங்கள் அம்பலப்பட்டு, அவமானப்பட்டு நிற்கின்றனர். பொய் செய்திகளை பரப்ப நிறைய ரைட் விங் கணக்குகளை பாஜக நடத்தி வருகிறது. அவர்கள் நம்மை குறித்து பொய் செய்தி பரப்பினால், உரிய ஆதாரத்தோடு உடனே பதிலடி தர வேண்டும்; இதை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பயம் இருக்கும். பொய் செய்திக்கு நூற்றுக்கணக்கில் தரும் பதிலடியால், அவர்கள் அதை நீக்கிவிட்டு ஓட வேண்டும். 

    காமெடியாக பதில் கூறுங்கள், கிண்டலாக பதிவிடுங்கள். ஆனால் எதுவாக இருந்தாலும் கூலாக, பொறுமையாக செய்யுங்கள். அவர்களக்கு வந்தால் ரத்தம், திமுகவிற்கு வந்தால் தக்காளி சட்னி என செய்தி சேனல்களும், தேர்தல் ஆணையமும் செயல்படுகிறது. நாம் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு சொல்லையும், எழுத்தையும் பொறுப்போடு உருவாக்குங்கள்.

    தோழமை கட்சியினருடன் சிண்டுமுடிக்கும் வேலையில் எதிர்க்கட்சியினர் ஈடுபடுவர். அவர்களின் சூழ்ச்சிக்கு நாம் இடம் தரக்கூடாது. திமுகவின் அதிகாரப்பூர்வ செய்திகளை மட்டும் நம்பி செயல்படுங்கள். மற்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள். களத்திலும், ஆன்லைனிலும் சரியாக செயல்பட்டால் நமது இலக்கை நாம் நிச்சயம் எட்ட முடியும். அதற்கான அடித்தளம்தான் இந்த ஆடுகளம் செயலி. 

    2019-ல் இருந்து தமிழ்நாட்டில் நடந்த எல்லா தேர்தல்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. யார் ஜெயிப்பார்கள் என எல்லோருக்கும் தெரியும். தி.மு.க.கூட்டணிதான் வெல்லும் என அனைவருக்கும் தெரியும். ஆனால் எத்தனை தொகுதிகள், எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்ற முடிவுகளுக்காகத்தான் காத்திருப்போம்.

    2026 தேர்தலும் அதே போலத்தான். திமுகவின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட ஒன்று. ஆனால் அது எவ்வளவு பெரிய வெற்றியாக அமையும் என்பதை நோக்கிதான் இந்த உழைப்பு. செயல்வீர ர்கள் எல்லாக் கட்சிகளிலும் இருப்பார்கள். ஆனால் கொள்கைக்கான அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாமல், இணையத்தில் களமாடும் தோழர்கள் தி.மு.க.வில் மட்டும்தான் உண்டு. ஆஃப்லைன், ஆன்லைன் இரண்டிலும் தி.மு.க.தான் சிங்கம் எனக் காட்டுவோம். வெல்வோம் ஒன்றாக' என தெரிவித்தார்.

    • திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.

    தமிழக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சந்திக்க உள்ளது. மேலும், இந்த மெகா கூட்டணியில் பா.ம.க., அ.ம.மு.க., ஐ.ஜே.கே., புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த மாதம் 23ந்தேதி முதலாவது பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் பிரதமர் மோடி பங்கேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன், டாக்டர் அன்புமணி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து, அடுத்தகட்டமாக பிரதமர் மோடி தமிழகத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்து, மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.

    அப்போது, திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, மார்ச் 7-ந்தேதி வேலூரில் நடக்கும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளில் பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    பிரதமர் மோடியின் மதுரை மற்றும் வேலுார் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மார்ச் 11-ந்தேதி திருச்சியில் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனை ஒருங்கிணைக்க பா.ஜ.க. சார்பில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திருச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டத்திற்கான இடம் குறித்து தேர்வு நடைபெற்றது. திருச்சியை அடுத்த மாத்தூர் சுற்றுச் சாலை பகுதி, திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலைய பகுதியில் உள்ள காலி மனை மற்றும் ஜி கார்னர் ரெயில்வே மைதானம் ஆகிய 3 இடங்கள் தேர்வாகியுள்ளது.

    இடம் தேர்வு தொடர்பாக மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், மூன்று இடங்களையும் பார்வையிட்டு மேல் இடத்திற்கு தெரிவித்துள்ளோம். அனேகமாக ஜி கார்னர் மைதானம் தேர்வு செய்யப்படலாம்.

    நாளை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சி வருகிறார். அதன் பின்னர் இடம் தேர்வு தொடர்பான ஆலோசனைக்கு பின்னர் எந்த இடம் என்பது இறுதி செய்யப்படும் என்றனர்.

    பிரதமர் மோடி, 10 நாட்களில் 3 முறை தமிழகம் வருவது, பா.ஜ.க. மட்டுமின்றி, கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தி உள்ளது. இதனால், தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

    • அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் இலவச தகன சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
    • ஈஷா வணிக நோக்கமின்றி சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறது.

    கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி மற்றும் ஈஷா அறக்கட்டளை இணைந்து செயல்படுத்தும் நவீன எரிவாயு மயானத்தில் தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் 'இலவச தகன சேவை' தொடங்கப்பட்டு உள்ளது.

    ஈஷா யோக மையத்தைச் சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளை சேர்ந்த மக்கள், அவர்களின் பகுதிக்கு அருகிலேயே ஒரு மயானத்தை அமைத்து தருமாறு அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதன் தொடர்ச்சியாக, ஈஷா அறக்கட்டளை பஞ்சாயத்து அனுமதியுடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட இதர அரசு துறைகளின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நவீன எரிவாயு மயானத்தை அமைத்தது.

    தற்போது இந்த நவீன எரிவாயு மயானம் முழுமையான செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதில் தொண்டாமுத்தூர் வட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் இலவச தகன சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த எரிவாயு மயானத்தை இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியுடன் ஈஷா அறக்கட்டளை இணைந்து செயல்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    சத்குருவின் வழிகாட்டுதலில் அனைத்து மக்களுக்கும் கண்ணியமான இறுதிச் சடங்குகள் மற்றும் எரியூட்டும் சேவைகளை வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் ஈஷா அறக்கட்டளை 2010-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள மயானங்களை இயக்கி பராமரித்து வருகிறது. 

    தற்போது சென்னை பெசன்ட் நகர், கோவை, நெய்வேலி, வேலூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் 30 மயானங்களை ஈஷா பராமரித்து வருகிறது.

    இந்த மயானங்களில் அழகான பூங்காவைப் போன்று பசுமையான சூழலை உருவாக்குவதல், மயானத்தை சுற்றி அடர் மரங்களை நட்டு பராமரித்தல், முறையான நடைபாதை வசதிகளை உருவாக்குதல், சுகாதாரமான முறையில் குளியல் மற்றும் கழிவறைகளை பராமரித்தல் மற்றும் அரசின் உதவியோடு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாத வகையில் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் எனப் பல்வேறு பணிகளை ஈஷா மேற்கொண்டு வருகிறது. இதை ஈஷா வணிக நோக்கமின்றி சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறது.

    மேலும், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஈஷா சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு மயானங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் இறுதிச் சடங்குகளை கண்ணியத்துடன் எந்தவித நிதிச்சுமையுமின்றி மேற்கொள்ள உதவும் வகையில் 'வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை' வழங்கும் திட்டத்தை அறிவித்தது.

    இத்திட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்குநூறாக இடிந்து விழும்.
    • ஒட்டுமொத்த ஊழலும் நீதிமன்றத்தால் வெளிப்படுத்தப்பட்டு, தமிழக மக்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்படும்.

    தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்களில் 10% வரை லஞ்சம் பெற்று ரூ.1,020 கோடி ஊழல் புரிந்த புகாரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் மீது வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திமுக அமைச்சர் நேரு அவர்கள், அரசு வேலையை விற்று ரூ.888 கோடி ஊழல் புரிந்த புகார் மீதும் கூடிய விரைவில் வழக்கு பதிந்து, உண்மை வெளிக்கொணரப்படும் என்னும் நம்பிக்கையை இந்த நீதிமன்ற உத்தரவு ஏற்படுத்துகிறது.

    மொத்தத்தில், மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சி, கமிஷனில் கொளுக்கும் #ALLFAIL திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்குநூறாக இடிந்து விழும் நாளுக்கான Countdown இன்றோடு தொடங்கிவிட்டது! கூடிய விரைவில்,

    திமுக உடன்பிறப்புகளின் ஒட்டுமொத்த ஊழலும் நீதிமன்றத்தால் வெளிப்படுத்தப்பட்டு, தமிழக மக்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்படும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.
    • சுமார் 33 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த அகரம்சேரி பகுதியில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பிப். 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். சுமார் 33 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதற்கிடையில், தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, தவெக தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தலைமையில் வருகிற 23-ந் தேதி அன்று நடைபெறவிருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது, தற்போது நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்வில் பங்கேற்க 4,900 நிர்வாகிகளுக்கு க்யூ ஆர் கோடு வசதியுடன் கூடிய நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த சீட்டுகள் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே நிர்வாகிகள் அரங்குக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இது முற்றிலும் கட்சி நிர்வாகிகளுக்கான சந்திப்பு என்பதால், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், உடல்நலக்குறைவு உள்ள வர்கள் மற்றும் நுழைவுச்சீட்டு இல்லாதவர்கள் நேரில் வருவதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    கட்சியின் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை கருதி அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற சட்டமன்ற தேர்தலில் எத்தனை இடங்கள் ம.தி.மு.க.வுக்கு என்பது முக்கியமல்ல.
    • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை.

    மதுரை:

    மதுரையில் ம.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-

    ம.தி.மு.க.வில் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் ம.தி.மு.க. தொண்டர்கள் ராணுவ உறுதி கொண்டவர்கள். கொண்ட லட்சியத்தில் உறுதியாக நடப்பவர்கள். எனவே ஒவ்வொரு கிராமங்களிலும் 10 பேர் ம.தி.மு.க.வினர் இருந்தாலும் அவர்கள் லட்சியம் மிக்க வீரர்களாக திகழ்வார்கள்.

    தி.மு.க. என்ற திராவிட இயக்கம் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். தென்னாட்டில் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரால் பாராட்டப்பட்ட இயக்கம் தி.மு.க. இந்த இயக்கம் வளர பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் பெரும் உதவியாக இருந்தார். அதுபோல தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வை வளர்க்க எனது கால் படாத இடமே இல்லை என்று சொல்லலாம்.

    அந்த அளவுக்கு தி.மு.க.வின் வளர்ச்சியில் எனக்கும் பங்கு இருக்கிறது. எனவே இந்த ஆட்சி தொடர வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாட்டில் தொடரும் வகையில் ம.தி.மு.க. கேடயமாக இருக்கும்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் எத்தனை இடங்கள் ம.தி.மு.க.வுக்கு என்பது முக்கியமல்ல. தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்பது தான் எங்களது லட்சியம். அதனை கொண்டு வர கேடயமாக ம.தி.மு.க. இருக்கும்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை. வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும். தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எனவே பொதுமக்கள் திடீரென முளைக்கும் நடிகர்கள் கலை துறையில் முகத்தை காட்டி உங்களை வசியம் செய்ய நினைப்பார்கள். அவர்களுக்கு பண்பாடு இல்லை, லட்சியம் இல்லை வேலு நாச்சியார் போன்ற வரலாற்று தலைவர்களை தங்களது லட்சிய தலைவர்களாக சொல்லுவார்கள். ஆனால் அவர்களுக்கு அந்த தலைவர்களின் வரலாறு தெரியாது. எனவே அவர்களை நம்பி மக்கள் ஏமாந்து விட வேண்டாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது
    • தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. கருத்து.

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.

    இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், "ஐந்து ஆண்டுகால தி.மு.க. ஆட்சி சிறப்பாக இருந்தது, இதற்கு வாழ்த்து தெரிவிக்க காலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தேன். தி.மு.க.வின் ஐந்து ஆண்டு கால ஆட்சி சிறப்பாக இருந்ததால், மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது. மக்கள் நினைப்பதை தான் எனது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்"

    தி.மு.க.வில் இணைவீர்களா என்று கேள்விக்கு பதில் அளித்த ஓ. பன்னீர்செல்வம், "பொறுத்து இருந்து பாருங்கள்" என்று தெரிவித்தார். தி.மு.க.வில் இணைவது பற்றிய கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காதது, ஓ. பன்னீர்செல்வம் தி.மு.க. ஆதரவு மனநிலையில் இருப்பதன் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.

    • சட்டசபையில் 2 நாட்களாக நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
    • தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும்.

    2026-27-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த 17-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சட்டசபையில் 2 நாட்களாக நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

    சட்டசபையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஐயப்பன் கூறியதாவது:

    வருகின்ற சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆசியோடும், புரட்சி தலைவி அம்மா ஆசியோடும் மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்று அவரை வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது
    • தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. கருத்து.

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.

    இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் சட்டமன்றத்தில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தது மற்றும் அவையில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தனது ஆதரவு எம்.எல்.ஏ. பேசியது குறித்து ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.

    சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், "ஐந்து ஆண்டுகால தி.மு.க. ஆட்சி சிறப்பாக இருந்தது, இதற்கு வாழ்த்து தெரிவிக்க காலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தேன். தி.மு.க.வின் ஐந்து ஆண்டு கால ஆட்சி சிறப்பாக இருந்ததால், மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது. மக்கள் நினைப்பதை தான் எனது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்," என்றார். 

    • 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கண்டிப்பாக வெற்றி பெறும்.
    • மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

    சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,

    * 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கண்டிப்பாக வெற்றி பெறும்.

    * தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி உறுதி.

    * மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.

    * மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 5% இஸ்லாமியர் இட ஒதுக்கீடு மகாராஷ்டிரத்தில் நடைமுறைக்கு வரவே இல்லை.
    • தமிழ்நாட்டில் மட்டும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை திமுக அரசு நடத்தவில்லை.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மகாராஷ்டிர மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான 5% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு விட்டதாக குற்றஞ்சாட்டி சமூகநீதிக் காவலர் வேடம் போட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாமல், வன்னியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10.50% உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு காரணமான மு.க.ஸ்டாலின் சமூகநீதி பேசுவது சாத்தான்கள் வேதம் ஓதுவதற்கு ஒப்பானது.

    சச்சார் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும். அதனடிப்படையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இன்னும் கேட்டால் சச்சார் குழு பரிந்துரைகள் வருவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர் போராட்டங்களை நடத்தி, அவர்களுக்கு 3.5% இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்த பெருமை பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு.

    ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 5% இஸ்லாமியர் இட ஒதுக்கீடு மகாராஷ்டிரத்தில் நடைமுறைக்கு வரவே இல்லை. அங்கும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்துகிறது. ஆனால், இல்லாத இட ஒதுக்கீட்டுக்காக போர் முழக்கம் எழுப்பும் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு செய்த துரோகத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்.

    ஐந்தாண்டுகளுக்கு முன் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தமது மைத்துனரின் ஆதரவில் செயல்பட்டு வரும் தமது சாதி சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற வைத்தார். இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வாதங்களை வலிமையாக வைக்காமல் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தார்.

    அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த 31.03.2022ஆம் நாள் ஆணையிட்டது. அதன்பின் இன்றுடன் 1423 நாள்களாகியும் இன்று வரை வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றவில்லை. இந்தியாவின் பல மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை திமுக அரசு நடத்தவில்லை.

    இப்படியாக எந்த வகையில் பார்த்தாலும் சமூகநீதிக்கு துரோகத்தை மட்டும் தான் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்திருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு சமூகநீதி பற்றி பேச எந்த உரிமையும் இல்லை. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மறுத்து துரோகம் செய்த திமுகவுக்கும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமலாக்கத் துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை.
    • வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    தமிழ் நாடு அமைச்சரவையில் இருந்து கே.என். நேரு நீக்கப்பட வேண்டும் என்று த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கபட நாடகத் தி.மு.க. அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது.

    ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு கைதேர்ந்தது. ஆகவே, அமலாக்கத் துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை.

    2026 தேர்தலில் வெல்லவே முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக ஏதாவது தில்லுமுல்லுகளையும் கூட்டணிக்காகத் தகிடுதத்தங்களையும் தாராளமாகவும் ஏராளமாகவும் செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் தி.மு.க. அரசின் உச்சியைப் பிடித்து உயர்நீதிமன்றம் உலுக்கியுள்ளது.

    நகராட்சித் துறை அமைச்சரின் ஊழல் குறித்து அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்காகத் தந்துள்ள ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது. எனவே, உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    ஊழல் மலிந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்கவே முடியாத ஆகப் பெரிய அவமானங்களில் இதுவும் ஒன்று. இதுவரை தனது அரசின் ஊழல்களுக்குப் பரிகாரமே தேடாத தி.மு.க. அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    ஏற்கெனவே டாஸ்மாக்கில் 1000 கோடி அளவிலான ஊழல். இப்போது நகராட்சித் துறையில் 1020 கோடி ஊழல். அமலாக்கத் துறை அவிழ்த்துவிடும் தி.மு.க. அரசின் ஊழல்கள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளன. மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த தி.மு.க. அரசை, வருகிற தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர்," என குறிப்பிட்டுள்ளார்.

    ×