என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கட்சியை கலைத்து விடுகிறேன்: பா.ஜ.க.-விற்கு சீமான் சவால்
- தைரியம் இருந்தால் தனித்து நின்று போட்டியிட்டு காட்டுங்கள்.
- கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை கூட்டி காட்டக்கூடாது.
சென்னை:
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாளான இன்று சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த சீமான், தைரியம் இருந்தால் தனித்து நின்று போட்டியிட்டு காட்டுங்கள். ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு தனியாக நீங்கள் பெற்ற வாக்குகள் எத்தனை என்று பார்ப்போம். நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளை பாஜக பெற்று இருந்தால் நான் கட்சியை கலைத்துவிட்டு போய் விடுகிறேன். யார் பெரிய கட்சி என்று தெரிந்து விடும் இல்லையா. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை கூட்டி காட்டக்கூடாது. தனியாக நீங்கள் எவ்வளவு வாக்கு பெற்று இருக்கிறீர்கள் என்பதை காட்ட வேண்டும் என்று பாஜகவிற்கு சவால் விட்டுள்ளார்.