search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்புமணி ராமதாஸ்
    X
    அன்புமணி ராமதாஸ்

    உள்ளாட்சி தேர்தல்- அன்புமணி ராமதாஸ் 3 நாட்கள் தேர்தல் பிரசாரம்

    பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், மத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்கிறார்.
    சென்னை:

    பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் 6 மற்றும் 9-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் பா.ம.க தனித்துப் போட்டியிடுகிறது.

    பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், மத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்கிறார்.

    1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆதரவு திரட்டுகிறார். 2-ந்தேதி( சனிக்கிழமை) ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பகுதிகளுக்கு சென்று ஓட்டு வேட்டை நடத்துகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×