search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணாமலை
    X
    அண்ணாமலை

    விவசாயிகள் தலைநிமிரவே புதிய வேளாண் சட்டங்கள்- அண்ணாமலை பேச்சு

    விவசாயிகள் தலைநிமிரவே புதிய வேளாண் சட்டங்கள் போடப்பட்டுள்ளது என்று பாரதீய ஜனதா மாநில துணை தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் பா.ஜனதா கட்சி சார்பில் புதிய வேளாண் சட்ட மசோதா விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தின் நன்மை குறித்து கடந்த 16-ந் தேதி முதல் இதுவரை ஆயிரம் இடங்களில் விவசாயிகளுக்கு எடுத்து கூறியுள்ளோம்.

    இப்போது விவசாயமும், விவசாயிகளும் இருக்கும் நிலையால் இளைஞர்கள் யாரும் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டுவதுமில்லை. அதற்கு அவர்கள் தயாராகவும் இல்லை. இந்த காலத்தில் விவசாயம் செய்பவர்களை கேவலமாக பார்க்கும் நிலை இருப்பதுடன், அவர்களுக்கு பெண் கொடுக்கவும் பலர் தயங்குகின்றனர்.

    இதை எல்லாம் மாற்றி, விவசாயிகள் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காகவே பிரதமர் மோடி புதிய வேளாண் சட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

    இதுதவிர மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி உள்பட பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. தற்போது உள்ள புதிய சட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களுக்கு தாங்களே விலையை தீர்மானித்து கொள்ளலாம்.

    அதனை யாரிடமும் வேண்டுமானாலும் விற்று கொள்ளலாம். இதன் மூலம் விவசாயிகள் பயனடைவார்கள். இந்த சட்டம் விவசாயிகளின் நன்மைக்காக போடப்பட்ட சட்டமாகும். எனவே இந்த சட்டத்தை நாங்கள் எப்போதும் மாற்ற மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×