என் மலர்

  செய்திகள்

  மு.க.ஸ்டாலின்
  X
  மு.க.ஸ்டாலின்

  கைது செய்யப்பட்ட தி.மு.க.வினரை விடுதலை செய்ய வேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட தி.மு.க.வினரை விடுதலை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
  சென்னை:

  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  “உள்ளாட்சி துறை அமைச்சரை எதிர்த்து விமர்சிப்பதற்காக, போராடுவதற்காக இனிமேலும் தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டால் நானே கோவைக்கு வந்து மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று எச்சரிக்க விரும்புகிறேன்” என்று ஏற்கனவே எச்சரித்துள்ளேன்.

  கொரோனா காலத்தில் போராட்டங்கள் வேண்டாம் என்றால், கோவையில் நடைபெறும் நடவடிக்கைகள் பொறுமையை சோதிப்பதாக அமைந்துள்ளன. எனவே தான் மக்கள் மன்றத்தில் இதனை கண்டிக்க தி.மு.க. முடிவெடுத்தது. ஜூன் 5-ம் தேதி(நேற்று) கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தத் திட்டமிட்டோம். மிக எழுச்சியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்துள்ளது. கொரோனா காலம் என்பதால் தனிமனித இடைவெளிவிட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

  ஆனாலும் போலீசார், ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்களை கைது செய்துள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பொய் வழக்குப் போட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதோடு, அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். இதே போக்கு தொடருமானால், வேலுமணியின் ரூ.3 ஆயிரம் கோடி ஊழலைப் பட்டியலிட்டு மாபெரும் போராட்டத்தைக் கோவையில் நடத்துவோம் என எச்சரிக்கிறேன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×