search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
    X
    ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

    தி.மு.க.வுக்கு அதிக இடம்: அமைச்சர்கள் சரியாக பணியாற்றாதது ஏன்? ஈபிஎஸ், ஓபிஎஸ் சரமாரி கேள்வி

    உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க அமைச்சர்கள் சரியாக பணியாற்றாதது ஏன் என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினர்.
    சென்னை:

    நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மற்றும் வர இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    சுமார் 4 மணிநேரம் நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு பிரச்சினை குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    அதன்பிறகு வர இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது, கள நிலவரம் பற்றி ஆலோசித்தனர்.

    பின்னர் ஒவ்வொரு அமைச்சரையும் தனித்தனியாக அழைத்து பேசினார்கள். அப்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை அமைச்சர்கள் ஈட்டித்தராதது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    பாராட்டத்தக்க அளவில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. எதிர்பார்த்ததைவிட கூடுதல் இடங்களில் வென்றுள்ளது. குறிப்பாக திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் அ.தி.மு.க பின்தங்கிய நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

    பல அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்களாகவும் இருக்கிறார்கள். சரியாக பணியாற்றாததால்தான் இந்த பின்னடைவை சந்தித்து இருப்பதாக சொல்லி அமைச்சர்களை எச்சரித்துள்ளார்கள்.

    அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    இதேபோல் அமைச்சர்கள் ஆளாளுக்கு கருத்துக்களை வெளியிடுவதும் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்து வதையும் சுட்டிக்காட்டினர்.

    குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, பெரியார் பற்றிய சர்ச்சை ஆகிய பிரச்சினைகளில் அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர்.

    இந்த மாதிரி முக்கிய பிரச்சினைகளில் தலைமையிடம் கலந்தாலோசித்து எச்சரிக்கையுடன் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

    சமீபகாலமாக அமைச்சர்களை தனித்தனியாக முதல்வர் அழைத்து கண்டித்தது இதுவே முதல்முறை. இதுபற்றி கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
    Next Story
    ×