search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்- மயிலாடுதுறையில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்

    தமிழகம் முழுவதும் வருகிற 25-ந்தேதி தி.மு.க. சார்பில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் மயிலாடுதுறையில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
    சென்னை:

    வருகிற 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

    இதுகுறித்து தி.மு.க. மாணவரணி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தாய்மொழியாம் தமிழ்மொழியை காத்திட மொழிப் போர்களத்தில் தங்களையே இழந்து தன்னுயிர் நீத்த தன்மான வீரர்களின் நினைவை ஏந்தி வீரவணக்கம் கூறும் நாள் ஜனவரி 25.

    தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் இயக்க முன்னோடிகள், சான்றோர்கள் நடத்திய மொழிப்போர், உலகையே திரும்பி பார்க்க வைத்த வீரவரலாறு.

    இன்று தமிழ் விரோத ஆட்சி நடைபெறுகிறது. இதை மக்கள் மன்றத்தில் வீரவணக்க நாளில் சொல்வோம். இன்றுள்ள மத்திய பா.ஜனதா அரசு பதவி ஏற்ற காலத்தில் இருந்து சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழி திணிப்பை தமிழகத்தின் துறை தோறும் புகுத்துவதில் வேகமாக இயங்குகிறது.

    இதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து, போராட்டங்களை அறிவித்ததும் இந்தி திணிப்பை வாபஸ் வாங்குவதும் நடைபெறுகிறது.

    நம் தாய்மொழியாம் தமிழுக்கு கேடு விளைவிப்போரின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் காவல் அரணாக, உழைப்பின் சிகரமாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். அவரது ஆணைக்கு இணங்க தியாக மலர்களின் வீரவணக்க நாளில் மக்கள் முன் முழங்குவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வருகிற 25-ந்தேதி தி.மு.க. சார்பில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பேசுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முக்கிய நிர்வாகிகள் பேசும் இடங்களின் விவரம் வருமாறு:-

    தி.மு.க. தலைவர் முக.ஸ்டாலின் மயிலாடுதுறையில் நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதில் நிவேதா முருகன், என்.கவுதமன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மதுராந்தகத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் ஜெகத்ரட்சகன் எம்.பி. க.சுந்தர் எம்.எல்.ஏ. ஆகியோரும் பேசுகிறார்கள். தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தாம்பரத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் தா.மோ. அன்பரசு எம்.எல்.ஏ.வும் பேசுகிறார்.

    சென்னை தெற்கு மாவட்டத்தில் ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசுகிறார்கள். திருப்பூரில் வி.பி.துரைசாமி, புதுச்சேரி தெற்கில் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பேசுகிறார்கள்.

    மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. திருச்செந்தூரில் நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார். இதில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பேசுகிறார்கள்.

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆவடியில் பேசுகிறார். இதில் ஆவடி நாசர், இறையன்பன் குத்தூஸ், பூவை ஜெரால்டு ஆகியோரும் பேசுகிறார்கள்.

    அ.ராஜா எம்.பி. கோவையில் பேசுகிறார். பொன்முடி எம்.எல்.ஏ. ராணிப்பேட்டையிலும், திருச்சி சிவா எம்.பி. பழனியிலும் பேசுகிறார்கள். தயாநிதிமாறன் சென்னை மேற்கில் பேசுகிறார். இதில் ஜெ.அன்பழகன் பங்கேற்கிறார். சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் பொன்.முத்துராமலிங்கம் பேசுகிறார். இதில் சேகர்பாபு எம்.எல்.ஏ., நெல்லை மணி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    இதேபோல் தமிழகம் முழுவதும் பேசும் முக்கிய தி.மு..க நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×