search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொழிப்போர் தியாகிகள் தினம்"

    • மொழிப்போர் தியாகிகள் தின பொதுக்கூட்டம் நடந்துது.
    • இந்த நாட்டில் தமிழர்களுக்காகவும், தமிழ் மொழியை காப்பாற்று வதற்காகவும் பலர் தியாகங்கள் செய்துள்ளனர்

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையம் முன்பு தி.மு.க. சார்பில் மொழிப் போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் முகமது யாசின் தலைமை தாங்கினார். வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, தமிழர்களுக்கு உரிமையை பெற்றுக்கொடுத்த தினமான ஜனவரி 25 மொழிப்போர் தியாகி தினமாக அறிவித்த வர் கலைஞர் கருணா நிதி. இந்த நாட்டில் தமிழர்களுக்காகவும், தமிழ் மொழியை காப்பாற்று வதற்காகவும் பலர் தியாகங்கள் செய்துள்ளனர் என்றார்.

    கூட்டத்தில் சோழ வந்தான் தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடேசன், வல்லாள பட்டி சேர்மன் குமரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திர பிரபு, ராஜராஜன், பாலகிருஷ்ணன், பழனி, வல்லாளபபட்டி பேரூர் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ் காக்க தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து உயிரை கொடுத்த வீரமறவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாள் இந்நாள்.
    • தியாக வரலாற்றை மீண்டும் மீண்டும் சொல்வது நமது தமிழர் இனம் தாழ்ந்துவிட கூடாது என்பதற்காகத் தான்.

    திருவள்ளூரில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

    வீழ்ச்சியுற்றிருந்த தமிழினம் பகுத்தறிவு கருத்துக்களால் இன, மான, மொழி உணர்ச்சி பெற்று வீறுகொண்டு எழுந்த வீர வரலாற்றை ஒவ்வொரு தமிழரும் நினைவு கூற கூடிய நாள் தான் இந்த வீரவணக்க நாள்.

    ஆங்கில ஆட்சியின் பிடியில் இருந்து நாம் விடுதலை பெறுவதற்கு முன்பாகவே இந்திய ஆதிக்கத்தை நிறுவ முயன்றவர்களை எதிர்த்து தமிழ் காக்க தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து உயிரை விலையென கொடுத்த வீரமறவர்களுக்கு வீர வணக்கம்  செலுத்துகிற நாள் இந்த நாள்.

    தமிழ்நாடு இதுவரை பல்வேறு மொழிப்போர் களங்களை சந்தித்திருக்கிறது. 1938 முதல் 1940 வரை முதல் களம். 1948 முதல் 1950 இரண்டாம் களம், 1953 முதல் 1956 வரை மூன்றாம் களம், 1959 முதல் 1961 வரை நான்காம் களம், 1986 ஐந்தாம் களம் இந்த தியாக வரலாற்றை மீண்டும் மீண்டும் சொல்வது நமது தமிழர் இனம் தாழ்ந்துவிட கூடாது என்பதற்காக தான். ஒரு நல்ல காரியத்திற்காகவும் நாட்டிற்காகவும் வாழ்ந்து தமிழுக்காக உயிரீந்தவர்கள் தான் இந்த மொழிப்போர் தியாகிகள்.

    மத்தியில் ஆளும் பாஜக அரசு, இந்தி மொழியை திணிக்க தொடர்ந்து முயற்சி செய்கிறது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே உணவு, ஒரே பண்பாடு என்ற வரிசையில் ஒரே மொழியை வைத்து மற்ற தேசிய இன மக்களின் மொழிகளை அழிக்க பார்க்கிறார்கள். 

    இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

    ×