search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன் ராதாகிருஷ்ணன்
    X
    பொன் ராதாகிருஷ்ணன்

    மது இல்லாத தீபாவளியை கொண்டாட பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை

    தீபாவளி பண்டிகையை மது இல்லாத பண்டிகையாக கொண்டாட வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    தஞ்சை:

    தஞ்சையில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.600 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை எந்த அரசு செய்தாலும் ஏற்க முடியாது. காந்தியடிகளின் 150-வது பிறந்த நாள் கொண்டாடும் வேளையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை மது இல்லாத பண்டிகையாக கொண்டாட வேண்டும். தீபாவளி பண்டிகை மற்றும் அதற்கு முதல் நாள் கடைகளை மூட வேண்டும். இதே போல் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் பண்டிகையையும் மது இல்லாத பண்டிகையாக கொண்டாட வேண்டும். எனவே மக்களும் மதுவை புறக்கணிக்க வேண்டும்.

    தீபாவளி

    மது, மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயம். தேவைப்படும்போது இந்தியா முழுவதும் மதுவிலக்கை மத்திய அரசு கொண்டு வர நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×