search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
    X
    கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

    மத்திய அரசை கண்டித்து 6-ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்- பாலகிருஷ்ணன் பேட்டி

    மத்திய அரசை கண்டித்து வருகிற 6-ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    பெரம்பலூர்:

    மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் காந்தி சிலை முன்பு நடந்த கையெழுத்து இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் காலையில் ஒரு மசோதாவை தாக்கல் செய்து மாலையில் நிறைவேற்றிவருகிறது மோடி அரசு. இதன்படி மத்தியில் மோடி அரசு பதவி ஏற்ற ஒன்றரை மாதத்தில் எதிர்க்கட்சிகளை கலந்தா லோசிக்காமல் பாராளுமன்றத்தில் 22 மசோதக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இதனை கண்டித்து வருகிற 6-ந்தேதி அனைத்து தோழமை கட்சிகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்யும் சட்ட மசோதாக்களில் அ.தி. மு.க. அரசு இரட்டை வேடம் போடுகிறது. பதவிக்காக மத்திய பா.ஜ.க. அரசிடம் தமிழக நலன்களை விட்டு கொடுக்கும் அதிமுக வேலூர் எம்.பி. தேர்தலில் படு தோல்வியடையும். என்.ஐ.ஏ. அமைப்புக்கு முழு அதிகாரம் வழங்கி அதன் மூலம் அரசியல் எதிரிகளை ஒடுக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

    ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே மதம் என்ற மோடி அரசு சமஸ்கிருதத்தை திணிப்பதற்கு வழிவகை செய்து கொண்டிருக்கிறது. புதிய கல்விக்கொள்கையில் 3, 5, 8, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான முன் மாதிரித் தேர்வு நடைமுறைப்படுத்தினால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

    இந்த கல்விக்கொள்கை என்ற பெயரில் கைநாட்டு பேர்வழியாக மாற்ற மத்திய மோடி அரசு செயல்பட்டு வருகிறது. மும்மொழி கட்டாயம் படிக்க வேண்டும் என்று சொல்லும் அரசு மும்மொழி படித்தவுடன் கட்டாயம் அரசு வேலை கிடைக்கும் என்று உத்தரவாதம் தரமுடியுமா?

    மேலும் மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் தமிழக அரசை கண்டித்து வரும் காலங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது, மாவட்ட செயலாளர் மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×