search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச் ராஜா
    X
    எச் ராஜா

    அத்திவரதரை தரிசிக்க வருவதை தவிர்க்க கூறுவதா? - தமிழக அரசுக்கு எச்.ராஜா கண்டனம்

    அத்திவரதரை தரிசிக்க கர்ப்பிணிகள், உடல்நலக்குறைவு உள்ளோர், முதியவர்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறி உள்ள தமிழக அரசுக்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
    மதுரை:

    பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று மதுரை வந்தார். மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய கல்வி கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா கருத்தை வெளியிட்டுள்ளார். அது அவருக்குரிய கருத்தாக தெரியவில்லை. யாரோ சொல்லிக் கொடுத்து பேசியதாக தெரிகிறது.

    மேலும் ரஜினியும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அது அவரது தனிப்பட்ட வி‌ஷயம்.

    ஏழை மாணவர்கள் தரமான கல்வி பெற வேண்டும் என்பதற்காக தான் தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது. 20 மாணவர்கள் உள்ள பள்ளிகள் மூடப்படுவதாக கூறுவது பொய்யான தகவல்.

    மும்மொழி கொள்கை, தேசிய கல்விக்கொள்கை புதிதானவை அல்ல, ஏற்கனவே அமல்படுத்தப்பட்டவை தான். அப்போது யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மோடியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் இதனை எதிர்க்கின்றனர்.

    தேசிய கல்விக்கொள்கையை மாற்றம் செய்ய அரசு தயாராக உள்ளது. இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசியல் நடத்தி வருகிறது. ஏழைகளின் விரோதி தி.மு.க.

    மும்மொழி கொள்கையில் இந்தி, ஆங்கிலத்தை தவிர தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. தேசிய கல்விக்கொள்கையை உண்மையான தமிழ் அபிமானிகள் எதிர்க்க மாட்டார்கள்.

    கூட்ட நெரிசல் காரணமாக அத்திவரதரை தரிசிக்க கர்ப்பிணிகள், உடல்நலக்குறைவு உள்ளோர், முதியவர்கள் தவிர்க்க வேண்டும் என கலெக்டர் அறிவிப்பு விடுத்திருந்தார். இது கண்டிக்கத்தக்கது.

    அத்தி வரதர்

    அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டியது அரசின் கடமை.

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அறத்தை அழிக்கும் துறையாக செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா இறப்புக்கு பின் திராவிட இயக்கங்கள் பொய்யான கருத்துக்களை மக்களிடம் பரப்பி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×