search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    ஆத்தூர்-கரிய கோவிலில் கன மழை

    ஆத்தூர் பகுதியின் கன மழை பெய்ததால் அந்த பகுதியில் உள்ள முட்டல் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவியது. இதனால் 50 ஆண்டு பழமை வாய்ந்த தென்னை, பாக்கு மரங்கள் கருகின.

    தென்மேற்கு பருவ மழை தொடங்கி 1 மாதத்திற்கு மேலாகியும் தமிழகத்தில் போதுமான மழை பெய்யாததால் விவசாயிகள் தவித்து வந்தனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஆத்தூர், கருமந்துறை பகுதியில் இன்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழையாக கொட்டி தீர்த்தது.

    இதனால் ஆத்தூர், கரியகோவில் பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல தேங்கியது. ஆத்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு பிறகு பெய்த கன மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் ஆத்தூர் பகுதியின் கன மழை பெய்ததால் அந்த பகுதியில் உள்ள முட்டல் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

    ஆத்தூரில் அதிக பட்சமாக 55 மி.மீ. மழை பெய்துள்ளது. கரியகோவிலில் 45 மி.மீ. மழையும், ஆனைமடுவில் 5 மி.மீ. மழையும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 105.4 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    Next Story
    ×