என் மலர்

  செய்திகள்

  மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகை
  X

  மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று மதியம் 1.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.
  கோவை:

  தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.

  அவருக்கு விமான நிலையத்தில் கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

  பின்னர் சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்குகிறார்.

  இன்று மாலை சூலூர் தொகுதிக்கு செல்கிறார். அந்த தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு திறந்த வேனில் நின்றபடி நன்றி கூறுகிறார்

  இரவில் மீண்டும் கோவை வந்து ஓட்டலில் தங்குகிறார்.

  நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மறைந்த தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கள் மு. ராமநாதன், க.ரா.சுப்பையன் ஆகியேர் உருவ படத்திறப்பு கோவை அவினாசி ரோடு லட்சுமி மில் சந்திப்பு அருகே உள்ள மீனாட்சி ஹாலில் நடக்கிறது.

  இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இருவரது உருவப்படத்தை திறந்து வைத்து பேசுகிறார்.

  நாளை (புதன்கிழமை) மாலை பொள்ளாச்சி வடக்கிபாளையம் பிரிவில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் மற்றும் கருணாநிதி பிறந்த நாள் கூட்டம் நடைபெறுகிறது.

  இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டத்தில் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி,ஈரோடு, கரூர் ஆகிய 7 தொகுதி எம்.பி.க்கள் கலந்து கொள்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதன் பின்னர் மு.க.ஸ்டாலின் முதல் தடவையாக கோவை வருவதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தி.மு.க. நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
  Next Story
  ×