என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சுசீந்திரம் அருகே செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் தற்கொலை
Byமாலை மலர்19 Feb 2019 12:05 PM GMT (Updated: 19 Feb 2019 12:07 PM GMT)
சுசீந்திரம் அருகே பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்.ஜி.ஓ.காலனி:
சுசீந்திரத்தை அடுத்த வண்டி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் அஜய் (வயது 18). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துவந்துள்ளார். இந்த நிலையில் அஜய் தனது பெற்றோரிடம் புதிய செல்போன் ஒன்று வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுக்கவில்லை. இதில் அஜய் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்தார்.
கடந்த 11-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஜய் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். வீடு திரும்பிய பெற்றோர் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அஜயை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அஜய் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் கண்ணன் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரசாந்த் குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Next Story
×