search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர்-திருவண்ணாமலை மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி ரூ.9.76 கோடிக்கு மது விற்பனை
    X

    வேலூர்-திருவண்ணாமலை மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி ரூ.9.76 கோடிக்கு மது விற்பனை

    வேலூர்-திருவண்ணாமலை மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி ரூ.9.76 கோடிக்கு மது விற்பனையானது. ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் 9.86 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

    வேலூர்:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையின் போது டாஸ்மாக் மது விற்பனை ஜோராக நடக்கும். பண்டிகைகளின் போது தட்டுப்பாடின்றி ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் அதிகளவில் சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் விற்பனை வருவாய் இலக்கும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுகிறது. அதே போல் இந்த ஆண்டும் புத்தாண்டு பண்டிகையையொட்டி சில நாட்களுக்கு முன்பே ஒவ்வொரு கடைக்கும் அதிகளவில் டாஸ்மாக் சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டன.

    வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம் என 2 கோட்டங்களாக பிரிக்கப்பட்டு விற்பனை விவரம் கண்காணிக்கப்படுகிறது. வேலூர் கோட்டத்தில் 101 கடைகளும், அரக்கோணத்தில் 78 கடைகளும் உள்ளன.

    தீபாவளி பண்டிகையையொட்டி வேலூர் கோட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 5,750‘ஹாட்’ கேசுகளும், 3,450 பீர் கேசுகளும் விற்றுத்தீர்ந்தன. இதன் மூலம் ரூ.3.54 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதேபோல் அரக்கோணத்தில் 3,500 ‘ஹாட்’ கேசுகளும், 2,700 பீர் கேசுகளும் விற்று ரூ.2.70 கோடி விற்பனையானது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடந்த வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனை மூலம் மொத்தம் ரூ.6.24 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    கடந்த ஆண்டு புத்தாண்டுக்கு முந்தைய தினத்தன்று வேலூர் மாவட்டத்தில் ரூ.4.32 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்தாண்டு ரூ.6.24 கோடிக்கு விற்பனையானது.

    கடந்த ஆண்டை விட இந்தாண்டு ரூ.1.92 கோடி அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 176 டாஸ்மாக் கடைகள் உள்ளது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் மட்டும் பிராந்தி, விஸ்கி போன்றவை 5 ஆயிரத்து 668 பெட்டிகளும், பீர் 3 ஆயிரத்து 988 பெட்டிகளும் விற்பனை ஆனது. இதன் மூலம் ரூ.3 கோடியே 52 லட்சத்து 9 ஆயிரத்து 650 வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.

    ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் 9.86 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

    Next Story
    ×