search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்காலில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: 2 பேர் கைது
    X

    காரைக்காலில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: 2 பேர் கைது

    காரைக்காலில் மாணவி வாயைப்பொத்தி பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் நெடுங்காட்டை அடுத்துள்ள புத்தக்குடி கிராமம், கன்னிக்கோவில் தெருவை சேர்ந்த 14 வயது சிறுமி கோட்டுச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    அவளது பெற்றோர் அருகிலுள்ள கிராமம் ஒன்றில் ஒரு வீட்டில் கூலிவேலை செய்து வந்தனர். இரவு சிறுமியின் பெற்றோர் வேலை செய்யும் வீட்டில் தங்கி விட்டனர்.

    இதனால் அந்த மாணவி தனது தாத்தா, பாட்டியுடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள். நள்ளிரவு 1 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த விசு என்கிற நடராஜன் (25) மற்றும் பாண்டியன் (30) ஆகிய 2 பேரும் நைசாக வீட்டினுள் நுழைந்து மாணவியின் வாயைப்பொத்தி அவளை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் நெடுங்காடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நடராஜன், பாண்டியன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×