search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி பஸ்நிலையத்தில் ரூ.18½ லட்சம் பழைய ரூபாய்  நோட்டுகளுடன் 2 வாலிபர்கள் கைது
    X

    தூத்துக்குடி பஸ்நிலையத்தில் ரூ.18½ லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளுடன் 2 வாலிபர்கள் கைது

    தூத்துக்குடி பஸ்நிலையத்தில் ரூ.18½ லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளுடன் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதிய பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த 6 பேர் கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓடியது.

    உடனே போலீசார் அவர்களை விரட்டி பிடிக்க முய்னறது. இதில் 2 வாலிபர்கள் சிக்கினர். மற்ற 4 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    பிடிப்பட்ட வாலிபர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் ரூ.18 லட்சத்து 60 ஆயிரம் இருந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் ஆவுடையானூர் பகுதியைச் சேர்ந்த செந்தாமரைக்கண்ணன் (வயது 31), ராஜேஷ் (29) என்பதும், தப்பி ஓடியவர்கள் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ், ராமர், வைத்தியராஜ், கோவில்பட்டியைச் சேர்ந்த சங்கர் என்பதும் தெரியவந்தது.

    அவர்கள் பாவூர்சத்திரத்தில் இருந்து பழையரூபாய் நோட்டுகளை கொண்டு வந்த புரோக்கர்கள் மூலம் தூத்துக்குடியில் மாற்ற இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து செந்தாமரைக்கண்ணன், ராஜேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகள்18 லட்சத்து 60 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 4 பேர் கும்பலை போலீசார் நெல்லை-தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×