என் மலர்

  செய்திகள்

  முன்னாள் கவுன்சிலர் மீது தாக்குதல்: இன்ஸ்பெக்டரை கண்டித்து தி.மு.க.வினர் மறியல்
  X

  முன்னாள் கவுன்சிலர் மீது தாக்குதல்: இன்ஸ்பெக்டரை கண்டித்து தி.மு.க.வினர் மறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னாள் கவுன்சிலர் மீது தாக்குதல் நடத்திய இன்ஸ்பெக்டரை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  திருவள்ளூர்:

  திருவள்ளூர், லட்சுமி புரத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் முன்னாள் தி.மு.க. கவுன்சிலர். நேற்று இரவு அவர் திருவள்ளூர் தபால் நிலையம் அருகே உள்ள டீ கடைக்கு வந்தார்.

  அப்போது அங்குள்ள செல்போன் டவரில் மதன் என்பவர் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருந்தது. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்லத்துரை மற்றும் போலீசார் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி வந்தனர்.

  அந்த நேரத்தில் சாலையை கடந்த முன்னாள் கவுன்சிலர் ஸ்ரீதரை இன்ஸ்பெக்டர் செல்லத்துரை கண்டித்து தாக்கியதாக தெரிகிறது.

  இதுபற்றி அறிந்ததும் திருவள்ளூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் தி.மு.க.வினர் 50-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டனர்.

  அவர்கள் தாக்குதல் நடத்திய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தலைமை தபால் நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
  Next Story
  ×