என் மலர்

  செய்திகள்

  காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
  X

  காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் திருச்சியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  கே.கே.நகர்:

  திருச்சி ஏர்போர்ட் டி.ஆர்.பி. நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் , தொழிலாளி. இவரது மகள் கண்மணி (வயது 21). இவர் கும்பகோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். கடந்த மாதம் கல்லூரி படிப்பு முடிந்ததையடுத்து வீட்டில் இருந்து வந்தார். தேர்வு முடிவுக்காகவும் காத்திருந்தார்.

  இந்நிலையில் கல்லூரி விடுதியில் தங்கி படித்த போது அங்கு தங்கியிருந்த மாணவர் ஒருவருடன் கண்மணிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையறிந்த கண்மணியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

  இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த கண்மணி இன்று அதிகாலை வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்த தகவல் அறிந்ததும் ஏர்போர்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர்.

  பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×