என் மலர்
விளையாட்டு
- முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 110 ரன்னில் சுருண்டது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 5 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 110 ரன்னில் சுருண்டது.
இந்நிலையில், மெல்போர்ன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் 2 கேட்ச் செய்தார். இதனால் டெஸ்டில் அவரது கேட்ச் எண்ணிக்கை 212 ஆக உயர்ந்தது.
இதன்மூலம் டெஸ்டில் அதிக கேட்ச் செய்த பீல்டர்களின் வரிசையில் 2-வது இடத்தில் இருந்த இந்தியாவின் ராகுல் டிராவிட்டை (210 கேட்ச்) பின்னுக்குத் தள்ளினார். முதலிடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (214) உள்ளார்.
- இந்தியாவின் ஷபாலி வர்மா 79 ரன்கள் குவித்தார்.
- இந்திய அணி டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது.
திருவனந்தபுரம்:
இந்தியா, இலங்கை மகளிர் அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 13.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு இது 77வது வெற்றியாக அமைந்தது. இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார் ஹர்மன்பிரீத்.
ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் 76 வெற்றிகள் பெற்று முன்னிலையில் இருந்தார். தற்போது அந்த சாதனையை ஹர்மன்பிரீத் கவுர் முறியடித்துள்ளார்.
- முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 112 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 13.2 ஓவரில் 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
திருவனந்தபுரம்:
இந்தியா, இலங்கை மகளிர் அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 13.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்திய அணியின் தீப்தி சர்மா இந்தப் போட்டியில் 3 விக்கெட் எடுத்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் சாதனையை சமன் செய்தார் தீப்தி சர்மா. இதுவரை 131 போட்டிகளில் விளையாடியுள்ள தீப்தி சர்மா 151 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 112 ரன்கள் எடுத்தது.
திருவனந்தபுரம்:
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் இரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டும், தீப்தி சர்மா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 113 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 42 பந்தில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், இந்திய பெண்கள் அணி 13.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இந்திய அணி 3-0 என கைப்பற்றியது.
- 60 பந்தில் 106 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும்.
விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சண்டிகர் அணிக்கெதிராக டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ரிங்கு சிங் அபாரமாக விளையாடி 60 பந்தில் 106 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். முந்தைய ஆட்டத்தில் அரைசதம் அடித்திருந்தார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும்.
ஜுயல் 118 பந்தில் 134 ரன்கள் குவிக்க, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜுரல் 57 பந்தில் 67 ரன்கள் அடிக்க உத்தர பிரதுசம் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 367 ரன்கள் குவித்தது.
பின்னர் 368 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சண்டிகர் 29.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 140 ரன்னில் சுருண்டது. இதனால் உத்தர பிரதேசம் 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
லெக் ஸ்பின்னர் ஜீஷன் அன்சாரி 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கிட்டத்தட்ட 49 வீரர்கள் அறிமுகமாகி உள்ளனர்.
- இந்திய அணிக்காக ஹர்ஷித் ராணா 3 வடிவ கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.
2025-ம் ஆண்டு பல கிரிக்கெட் வீரர்களுக்கு அந்த நாட்டின் அணியில் விளையாட வாய்ப்பு வழங்கியது. குறிப்பாக இந்திய கிரிக்கெட்டில் பல இளம் வீரர்கள் அறிமுகமானார்கள். அதில் அபிமன்யு ஈஸ்வரன், நிதிஷ் குமார் ரெட்டி, சாய் சுதர்சன், ஹர்சித் ரானா, ஆகாஷ் தீப், மற்றும் தமிழ்நாட்டின் நாராயணன் ஜெகதீசன் போன்றோர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வாய்ப்புப் பெற்றனர். இந்திய அணிக்காக ஹர்ஷித் ராணா 3 வடிவ கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.
இவர்களில் சிலர் அணியில் இடம் பிடித்து சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக, ஐ.சி.சி. விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் கூட சில இளம் வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றன.
டெஸ்ட் கிரிக்கெட் அறிமுக வீரர்கள் (2025)2025-ம் ஆண்டில் சுமார் 49 வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்கள்.
பியூ வெப்ஸ்டர் (ஆஸ்திரேலியா) 2025 தொடக்கத்தில் அறிமுகம்
க்வேனா மபாகா (தென்னாப்பிரிக்கா) 2025 தொடக்கத்தில் அறிமுகம்
ஃபரீத் அகமது (ஆப்கானிஸ்தான்) 2025 தொடக்கத்தில் அறிமுகம்
இஸ்மத் ஆலம் (வங்கதேசம்) 2025 தொடக்கத்தில் அறிமுகம்
ரியாஸ் ஹாசன் (ஆப்கானிஸ்தான்) 2025 தொடக்கத்தில் அறிமுகம்
கெவ்லான் ஆண்டர்சன் (வெஸ்ட் இண்டீஸ்) ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் அறிமுகம்
ஹாரிஸ் ரவூஃப் (பாகிஸ்தான்) இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகம்
ஜாஹித் மெஹ்மூத் (பாகிஸ்தான்) இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகம்
சவுத் ஷகீல் (பாகிஸ்தான்) இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகம்
முகமது அலி (பாகிஸ்தான்) இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகம்
ஹர்ஷித் ராணா (இந்தியா) ஆஸ்திரேலியாவில் அறிமுகம்
சாய் சுதர்சன் (இந்தியா) இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அறிமுகம்
அன்ஷுல் காம்போஜ் (இந்தியா) இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அறிமுகம்
ஒருநாள் கிரிக்கெட்டில் 9 வீரர்கள் அறிமுகமானார்கள்.
ஜெய்ஸ்வால் (இந்தியா)
ஹர்ஷித் ராணா (இந்தியா) இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகம்
வருண் சக்கரவர்த்தி (இந்தியா) 2025-ல் அறிமுகம்
நிதிஷ் குமார் ரெட்டி (இந்தியா) ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகம்
மேத்யூ ப்ரீட்ஸ்கே (தென்னாப்பிரிக்கா) நியூசிலாந்துக்கு எதிராக 150 ரன்கள் அடித்து அறிமுகம்
மேட் ரென்ஷா (ஆஸ்திரேலியா) இந்தியாவுக்கு எதிராக அறிமுகம்
ஓவன் (ஆஸ்திரேலியா) இந்தியாவுக்கு எதிராக அறிமுகம்
டெவால்ட் பிரெவிஸ் (தென்னாப்பிரிக்கா) ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகம்
டி20 கிரிக்கெட்டில் 7 வீரர்கள் அறிமுகமானார்கள்.
ஹர்ஷித் ராணா (இந்தியா) இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகம்
அபிஷேக் சர்மா (இந்தியா) ஜிம்பாப்வேக்கு எதிராக அறிமுகம்
அமீர் ஜங்கூ (வெஸ்ட் இண்டீஸ்) யூஏஇ சுற்றுப்பயணத்தில் அறிமுகம்
அக்கீம் அகஸ்டே (வெஸ்ட் இண்டீஸ்) யூஏஇ சுற்றுப்பயணத்தில் அறிமுகம்
ரமோன் சிம்மண்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) யூஏஇ சுற்றுப்பயணத்தில் அறிமுகம்
கரிமா கோர் (வெஸ்ட் இண்டீஸ்) யூஏஇ சுற்றுப்பயணத்தில் அறிமுகம்
வைஷ்ணவி சர்மா இந்தியா (பெண்கள்) இலங்கைக்கு எதிராக அறிமுகம்
- கம்பீர், அகார்கர் வந்த பிறகு இந்திய வீரர்கள் தேர்வு குறித்து பல எதிர்மறையாக கருத்துக்கள் வந்தது.
- தொடக்க வீரராக 3 சதங்கள் விளாசிய சாம்சனை நீக்கி விட்டு சுப்மன் கில்லை களமிறங்கினார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகார்கர் உள்ளனர். இருவரும் வந்த பிறகு இந்திய வீரர்கள் தேர்வு குறித்து பல எதிர்மறையாக கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்து வருகிறது.
ஒருநாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டது. 3 வடிவ கிரிக்கெட்டுக்கும் ஒரே கேப்டன் தான் இருக்க வேண்டும் என கூறி டி20 அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். தொடக்க வீரராக 3 சதங்கள் விளாசிய சாம்சனை நீக்கி விட்டு சுப்மன் கில் களமிறங்கினார். இப்படி பல மாற்றங்களை தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளில் திறமையான வீரர்கள் இருந்தும் குறிப்பிட்ட வீரர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் கருத்து வெளியாகி வந்தது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு இருந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சுப்மன் கில் அந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அஜித் அகார்கர், கவுதம் கம்பீர் திருந்தி விட்டார்களாக என ரசிகர்கள் கேள்வி எழுப்பி பல்வேறு கருத்துகளை கூறி வந்தனர்.
ஆனால் இதற்கெல்லாம் அவர்கள் காரணம் இல்லை. தேர்வுக்குழுவில் இருந்த அந்த இரண்டு பேர் முக்கிய காரணமாக இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதன்படி தேர்வுக்குழுவில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களாக ஆர்பி சிங், ஓஜா இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் தான் சமீபத்தில் இந்திய அணியில் ஏற்பட்ட மாற்றத்துக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளனர். டி20 அணியில் கில் வேண்டாம் என்றும் சஞ்சு சாம்சனே தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.
இதுமட்டுமில்லாமல் கில்லை ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக ஒருநாள் போட்டியின் கேப்டனாக ரோகித் சர்மாவை மீண்டும் நியமிக்க அவரிடம் ஆர்பி சிங் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதற்கு ரோகித் சர்மாவிடம் எந்தவொரு பதிலும் வரவில்லை என தெரிகிறது.
அவர் இதற்கு சரி என்றால் 2027-ம் ஆண்டு நடக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும்.
அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பையுடன் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அந்த இடத்திற்கு ஓஜா அல்லது ஆர்பி சிங் ஆகிய இருவரில் ஒருவர்தான் அடுத்த தேர்வுக்குழு தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி அமெட் பல்கலைக் கழக வளாகத்தில் தொடங்கியது.
- அமெட் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்,வேந்தர் டாக்டர் நாசே. ஜெ.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
அகில இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு மற்றும் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அமெட் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி அமெட் பல்கலைக் கழக வளாகத்தில் தொடங்கியது.
இந்தப் போட்டியை அமெட் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்,வேந்தர் டாக்டர் நாசே. ஜெ.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இப் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 90 பல்கலைக்கழகங்களில் இருந்து 450 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அமெட் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்சுசீலா ராமச்சந் திரன், இணை வேந்தர் ராஜேஷ் ராமச்சந்திரன், துணை வேந்தர் வி. ராஜேந்திரன், கூடுதல் பதிவாளர் மற்றும் போட்டியின் செயலாளர் ராம்குமார் கலந்து கொண்டனர்.
- சில உள்ளூர் அணிகளுக்கு மத்தியில் தரத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது.
- அதாவது வானத்திற்கும் பூமிக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது.
சென்னை:
33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 38 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் அருணாசலபிரதேச அணிக்கு எதிராக பீகார் அணி 6 விக்கெட்டுக்கு 574 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இப்போட்டியில் வைபவ் சூரியவன்ஷி 84 பந்தில் 190 ரன்கள் எடுத்தார். மேலும் ஆயுஷ் லோஹருகா, சகிபுல் கானி ஆகியோரும் சதம் அடித்தனர்.
இந்த நிலையில் உள்ளூர் அணிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்து உள்ளார்.
சில உள்ளூர் அணிகளுக்கு மத்தியில் தரத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. இது அணிகளுக்கு இடையே சரியான போட்டி உருவாகும் வாய்ப்பை முழுமையாக நீக்குகிறது. வைபவ் சூர்யவன்ஷிக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
ஆனால் நான் மீண்டும் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். சில அணிகளிடையே தரத்தில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. அதாவது வானத்திற்கும் பூமிக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. இது ஒருதலைப்பட்சமாக மாறி எந்தவித போட்டியும் இல்லாமல் போகிறது. இது ஒரு சிறந்த சூழ்நிலை அல்ல.
வைபவ் சூர்யவன்ஷி என்ன செய்ய வேண்டுமோ அதை அவர் செய்கிறார். ஆனால் அருணாச்சலப்பிர தேசம் போன்ற அணிகள் நல்ல அணிகளாக வளர்வதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிரிக்கெட் வாரியத்தின் பொதுநிதி ரூ. 7,988 கோடியில் இருந்து ரூ.11, 346 கோடியாக அதிகரித்து உள்ளது.
- 2025-26-ம் நிதியாண்டில் ரூ.8,693 கோடி வருமானத்தை இலக்கு வைத்துள்ளது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளுக்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் மற்றும் 2025-26 நிதியாண்டிற்கான கிரிக்கெட் வாரியத்தின் வரைவு வரவு செலவுத் திட்டத்தை இணை செயலாளர் பிரப்தேஜ் சிங் பாட்டியா சமர்ப்பித்தார்.
இதில் கிரிக்கெட் வாரியத்தின் பொதுநிதி ரூ. 7,988 கோடியில் இருந்து ரூ.11, 346 கோடியாக அதிகரித்து உள்ளது. இதன்மூலம் பொது நிதியில் ரூ.3,358 கோடி உயர்ந்து இருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து கிரிக்கெட் வாரியத்தில் டிரீம்11 தனது ரூ.358 கோடி ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.
மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருவாய் குறைபாடும் இருந்தது. இந்த பற்றாக்குறையை புதிய ஒப்பந்தங்கள் மூலம் கிரிக்கெட் வாரியம் ஈடுசெய்தது.
இந்த வளர்ச்சிக்கு வலுவான வருவாய் ஆதாரங்களும் கவனமான நிதி நிர்வாகமும் காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2025-26-ம் நிதியாண்டில் ரூ.8,693 கோடி வருமானத்தை இலக்கு வைத்துள்ளது.
வருமான வரிச் செலுத்துதலுக்காக ரூ.3,320கோடியும், எதிர்பாராத செலவினங்களுக்காக ரூ.1,000 கோடியும், நிலுவை வழக்குச் செலவுகளுக்காக சுமார் ரூ.160 கோடியும் கிரிக்கெட் வாரியம் ஒதுக்கியுள்ளதாக பிரப்தேஜ் சிங் பாட்டியா தெரிவித்தார்.
- டி20 உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர வாய்ப்பில்லை.
- டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் கழற்றி விடப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனாக சுப்மன் கில் விளையாடி வருகிறார். சூர்யகுமார் யாதவுக்கு அடுத்து டி20 அணிக்கும் அவரை கேப்டனாக நியமிக்க டி20 அணியில் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய கில், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இதனால் ஜனவரி மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் அதனை தொடர்ந்து வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் கழற்றி விடப்பட்டார்.
டி20 உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர வாய்ப்பில்லை. இதனால் அடுத்த டி20 அணியின் கேப்டனாக அக்ஷர் படேல் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஏனெனில் அவர் தான் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் மற்றும் டி20 உலககோப்பை அணிக்கான தொடரில் துணை கேப்டன். அதனால் அடுத்த கேப்டனாக அவர்தான் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அடுத்த இந்திய டி20 அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட உள்ளார் என பிசிசிஐ-யின் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ரோகித் சர்மாவுக்கு பிறகு அவர் தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கபட உள்ள நிலையில் காயம் காரணமாக அவர் கேப்டனாக நியமிக்கபடவில்லை. பும்ரா காயத்தால் அடிக்கடி வெளியேறுவதால் அவரை கேப்டனாக நியமிக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவு செய்து கில்லுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
தற்போது பும்ரா தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடுவதில்லை. குறிப்பாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் அதிக அளவில் பங்கேற்பதில்லை. உலககோப்பைக்காக டி20 தொடரில் மட்டும் அதிக அளவில் பங்கேற்கிறார். மேலும் பும்ரா அனுபவம் வாய்ந்த வீரர் என்பதால் அவரை டி20 அணிக்கு கேப்டனாக நியமித்து பார்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
- முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 152 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 29.5 ஓவர்களே தாக்கு பிடித்தது.
மெல்போர்ன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தொடங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் இப்போட்டி பாக்சிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.
இந்த டெஸ்ட் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செயதார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இங்கிலாந்தின் ஜோஷ் டங், அட்கின்சனின் அபார பந்துவீச்சில் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் 45.2 ஓவர்களில் 152 ரன்னுக்கு ஆஸ்திரேலியா ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக மைக்கேல் நெசர் 35 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 5 விக்கெட் வீழ்த்தினார். அட்கின்சன் 2 விக்கெட்டும், ஸ்டோக்ஸ், கார்சே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 16 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. கிராலி 5, டக்கெட் 2, பெத்தெல் 1, ரூட் 0 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனையடுத்து ஹாரி ப்ரூக்- பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. ப்ரூக் 41 ரன்னில் அவுட் ஆனார்.
அதனை தொடர்ந்து ஸ்மித் 2, வில் ஜக் 5, ஸ்டோக்ஸ் 16, கார்ஸ் 4, ஜோஸ் டங் 1 என வரிசை கட்டினர். 29.5 ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்த இங்கிலாந்து அணி 110 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் நெசர் 4 விக்கெட்டும், போலண்ட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 42 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஒரு ஓவர் மட்டுமே வீசப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா 4 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.






