என் மலர்
விளையாட்டு
- டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது.
திருவனந்தபுரம்:
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 3-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான நான்காவது டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகள் அதிரடியில் மிரட்டினர். இருவரும் அரை சதம் கடந்தனர்.
ஸ்மிருதி மந்தனா 48 பந்தில் 80 ரன்னும், ஷபாலி வர்மா 46 பந்தில் 79 ரன்னும் குவித்தனர். ரிச்சா கோஷ்16 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து, 222 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. கேப்டன் சமாரி அடப்பட்டு 52 ரன்னும், ஹாசினி பெராரா 33 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இலங்கை பெண்கள் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இந்திய அணி 4-0 என கைப்பற்றியது.
- பிக் பாஷ் தொடரில் விளையாடும்போது காயம் அடைந்த ஷாஹீன் அப்ரிடி சேர்க்கப்படவில்லை.
- 23 வயதான விக்கெட் கீப்பர் புதுமுகமாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணி ஜனவரி மாதம் தொடக்கத்தில் இலங்கை சென்று மூன்று போட்டிகள் கொண்டி டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கிய பேட்ஸ்மேன்களான பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பிக் பாஷ் தொடரில் விளையாடும்போது காயம் அடைந்த ஷாஹீன் அப்ரிடியும் அணியில் சேர்க்கப்படவில்லை.
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து காயம் காரணமாக விளையாடாமல் இருந்து ஷதாப் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 23 வயதான புதுமுக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கவாஜா நஃபே அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரிவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடைபெற இருக்கிறது. இதனால் உலகக்கோப்பைக்கு தயாராக பாகிஸ்தானுக்கு இந்த தொடர் நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.
இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் அணி:-
சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்துல் சமாத், அப்ரார் அகமது, பஹீம் அஷ்ரப், பஹர் சமான், கவாஜா நஃபே (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, சஹிப்சதா பர்ஹான் (விக்கெட் கீப்பர்), சைம் ஆயுப், சதாப் கான், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), உஸ்மான் தரிக்.
- முதலில் விளையாடிய பூடான் 127 ரன்கள் சேர்த்தது.
- பின்னர் மியான்மர் 45 ரன்னில் சுருண்டது.
பூடான்- மியான்மர் மகளிர் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய பூடான் 127 ரன்கள் அடித்தது. பின்னர் 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மியான்மர் களம் இறங்கியது.
ஆனால் பூடான் வீராங்கனை சோனம் யஷே பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 9.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 45 ரன்னில் சுருண்டது மியான்மர். இதனால் பூடான் 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பூனம் யஷே 4 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட் கைப்பிற்றினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார். 4 ஓவர்களில் ஒரு ஓவர் மெய்டனாகவும் வீசினார்.
கடந்த 2023ம் ஆண்டு சீனாவுக்கு எதிராக மலேசியாவைச் சேர்ந்த சியாஸ்ருல் இத்ருஸ் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
- பஹ்ரைனின் தேசிய தினத்தன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணிக்காக ராஜ்புத் பங்கேற்றார்.
- இது ஒரு தவறான புரிதல்
பஹ்ரைனில் தனியார் போட்டியில் இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக பாகிஸ்தானிய சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தை காலவரையின்றி தடைசெய்து பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது. இம்மாத தொடக்கத்தில் பஹ்ரைனின் தேசிய தினத்தன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணிக்காக ராஜ்புத் பங்கேற்றார். இந்தியாவிற்காக அவர் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், PKF இந்த தடையை விதித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பின் அவசர பொதுக்குழு கூட்டத்தில், அவர் சம்மேளனத்தின் மூன்று வெவ்வேறு விதிகளை மீறியதாக தெரிவிக்கப்பட்டது. பஹ்ரைனில் நடந்த GCC கோப்பை போட்டியில், அவர் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடியதுடன், வெற்றிக்குப் பிறகு இந்தியத் தேசியக் கொடியைத் தன் தோளில் சுற்றியபடி காணப்பட்டதை கூட்டமைப்பு தீவிரமாகக் கவனத்தில் கொண்டுள்ளதாக அதன் செயலாளர் ராணா சர்வார் தெரிவித்துள்ளார்.

என்ஓசி பெறாமல் போட்டிகளில் பங்கேற்றதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இதை எதிர்த்து ஒழுங்குமுறைக் குழுவின் முன் மேல்முறையீடு செய்ய அவருக்கு உரிமை உள்ளது எனவும் ராணா சர்மா தெரிவித்தார். ஆனால் தான் விளையாடப் போகும் அணி இந்திய அணி என்பது தனக்குத் தெரியாது என்றும், இது ஒரு தவறான புரிதல் என்றும் உபைதுல்லா ராஜ்புத் கூறியுள்ளார்.
"கடைசிவரை அவர்கள் அணிக்கு இந்திய அணியின் பெயர் சூட்டியது எனக்குத் தெரியாது, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பெயர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று நான் ஏற்பாட்டாளர்களிடம் கூறினேன். கடந்த காலங்களில் தனியார் போட்டிகளில், இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒரு தனியார் அணிக்காக ஒன்றாக விளையாடியுள்ளனர், ஆனால் ஒருபோதும் இந்தியா அல்லது பாகிஸ்தான் என்ற பெயரில் விளையாடியதில்லை" என தெரிவித்துள்ளார்.
- SENA நாடுகளுக்கு எதிராக 10 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது.
- 2027 ஒருநாள் உலகக் கோப்பை முடியும் வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு விவிஎஸ் லக்ஷ்மணை கொண்டு வர பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றதிலிருந்தே டிரஸ்ஸிங் ரூம் உட்பட இந்திய அணியில் ஒரு குழப்பம் நிலவி வருகிறது. இதுபோட்டிகளிலும் வெளிபடுகிறது. மேலும் கௌதம் கம்பீரின் அணித்தேர்வு குறித்தும் ஒவ்வொரு போட்டியிலும் கேள்வி எழுகிறது. ஐசிசி மற்றும் ஏசிசி போட்டிகளில் கௌதம் கம்பீரின் தேர்வுகள் கைக்கொடுத்தாலும், SENA நாடுகளுக்கு எதிராக 10 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது. குறிப்பாக சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் ஒயிட்வாஷ் ஆனபிறகு இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீரின் எதிர்காலம் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில் டெஸ்ட் அணிக்கு மட்டும் புது பயிற்சியாளரை கொண்டுவர, பிசிசிஐ நிர்வாகிகள் சிலர் லக்ஷ்மணை அணுகியதாக தகவல் வெளியாகி உள்ளது. 2027 ஒருநாள் உலகக் கோப்பை முடியும் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் ஐந்து வாரங்களில் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் செயல்திறனைப் பொறுத்து அதை மீண்டும் பரிசீலிக்க வாய்ப்புகளும் உள்ளன.
இந்தியா டி20 உலகக் கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டால் அல்லது குறைந்தபட்சம் இறுதிப் போட்டியை எட்டினால், அவர் தடையின்றி தனது பணியைத் தொடர்வார். இருப்பினும், கம்பீர் டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றியைத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரம் டெஸ்ட் அணிக்கு பயிற்சியளிக்க லக்ஷ்மண் ஆர்வம் காட்டவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 2026 இல் இலங்கைக்கும், அக்டோபர்-நவம்பர் 2026 இல் நியூசிலாந்திற்கும் தலா இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக வெளிநாடு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இதைத் தொடர்ந்து, ஜனவரி-பிப்ரவரி 2027 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) சொந்த மண்ணில் விளையாடுகிறது.
- ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது போட்டி மெல்போர்னில் நடைபெற்றது.
- இதில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.
மெல்போர்ன்:
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் 3-1 என உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கூறியதாவது:
இங்கிலாந்து அணியினர் மிகவும் சிறப்பாக விளையாடினர். இது சவாலான ஒரு போட்டி. இன்னும் 50-60 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்.
இன்றைய தினம் (நேற்று) பந்து கொஞ்சம் மென்மையானதும் நாங்கள் நினைத்த மாதிரி அது செல்லவில்லை.
அவர்கள் தொடக்கம் முதலே மிகவும் ஆக்ரோஷமாக ஆடியதால் பந்து மேலும் மென்மையாக மாறியது.
அதிலிருந்து ஆடுகளம் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பந்து வீச்சாளர்களுக்கு பெரிய அளவில் உதவவில்லை என தெரிவித்தார்.
- இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றியுள்ளது.
- இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
திருவனந்தபுரம்:
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது.
முதல் 3 ஆட்டங்களின் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று 3-0 என தொடரைக் கைப்பற்றி உள்ளது.
இந்திய அணி முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 3வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இலங்கையை வீழ்த்தியது.
இந்நிலையில், இந்தியா-இலங்கை மகளிர் அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தன் பயணத்தை தொடர முயற்சிக்கும்.
ஆனால் தொடரை இழந்துள்ள இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற தீவிரம் காட்டும்.
- தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் விஜயவாடாவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் தன்வி பத்ரி அரையிறுதியில் வென்றார்.
விஜயவாடா:
87-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தன்வி பத்ரி, சுருதி முன்டாடா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தன்வி பத்ரி 18-21, 21-12, 21-15 என்ற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- துபாயில் இன்று கண்காட்சி போட்டி நடைபெற உள்ளது.
- இதில் அரினா சபலென்கா, ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோசுடன் மோதுகிறார்.
துபாய்:
அடுத்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் 12-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை மெல்போர்னில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடருக்காக நம்பர் 1 வீராங்கனையான பெரலாசைச் சேர்ந்த அரினா சபலென்கா தயாராகி வருகிறார். கடந்த 2023, 24-ம் ஆண்டுகளில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற அவர், 2025 இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீசிடம் தோல்வி அடைந்தார்.
மூன்றாவது முறையாக பட்டம் வெல்லும் இலக்குடன் அவர் ஆஸ்திரேலியா புறப்படுகிறார்.
இதற்கிடையே, துபாயில் இன்று நடைபெறும் கண்காட்சி போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா, ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் மோதுகிறார்.
துபாயில் உள்ள கோகோ-கோலா அரீனா அரங்கில் இந்திய நேரப்படி இன்று இரவு 9.15 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெற உள்ளது.
- உலக கோப்பை தொடருக்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி விளையாடுகிறது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யவன்ஷி செயல்படுவார்.
மும்பை:
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 6 வரை நடக்கவுள்ளது. இந்த தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறுகிறது.
இந்நிலையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடுகிறது. இந்த தொடரில் வைபவ் சூர்யவன்ஷி கேப்டனாகவும் ஆரோன் ஜார்ஜ் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஏனெனில் ஆயுஷ் மாத்ரே மற்றும் விஹான் மல்ஹோத்ரா காயம் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தவறவிடுகின்றனர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பெனோனியில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
U19 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:-
ஆயுஷ் மத்ரே (கேப்டன்), விஹான் மல்ஹோத்ரா (துணை கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ், வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்எஸ் அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலன் ஏ படேல், மொஹமத் சிங் ஏனான், டிஹில், குமார், டெனில், ஹெனில்.
- ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி 2 நாளில் முடிந்தது.
- இந்த போட்டியில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது ஆஷஸ் டெஸ்ட் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 42 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது. இதனால், ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. இரண்டே நாளில் போட்டி முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், இரண்டே நாளில் இந்த போட்டி முடிவுக்கு வந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.60.59கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியும் 2 நாளில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
- 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை ஆடியது.
- ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட ஆஷஸ் தொடரில் 4-வது டெஸ்ட் மெல்போர்னில் நேற்று தொடங்கியது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 152 ரன்னில் ஆல் அவுட் ஆனது. மிச்சேல் நேசர் அதிகபட்சமாக 35 ரன் எடுத்தார். ஜோஸ் டங் 5 விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 110 ரன்னில் சுருண்டது. ஹாரி புரூக் அதிகபட்சமாக 41 ரன் எடுத்தார். மிச்சேல் நேசர் 4 விக்கெட்டும், போலண்டு 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
42 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்து இருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.
இங்கிலாந்து வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் சரிந்தன. மதிய உணவு இடைவேளைக்குள் 88 ரன்னில் 6 விக்கெட்டை பறி கொடுத்தது.

ஸ்காட் போலண்டு (6 ரன்), ஜேக் வெதரால்ட் (5), லபு ஷேன் (8), டிராவிஸ் ஹெட் (46), உஸ்மான் கவா ஜா (10), அலெக்ஸ் கேரி (4) ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.
அதை தொடர்ந்து விக்கெட்டுகள் எளிதில் விழுந்தன. ஆஸ்திரேலிய அணி 34.3 ஓவர்களில் 132 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்துக்கு 175 ரன் இலக்காக இருந்தது.
கேமரூன் கிரீன் 19 ரன்னிலும், நேசர், ஸ்டார்க் ரன் எதுவும் எடுக்காமலும், ரிச் சர்ட்சன் 7 ரன்னிலும் அவுட் ஆனார்கள். கேப்டன் ஸ்டீவ் சுமித் 24 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கார்ஸ் 4 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும், ஜோஸ் டங் 2 விக்கெட்டும், அட்கின்சன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
175 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர் பென்டக்கெட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 7-வது ஓவரில் தொடக்க ஜோடி சரிந்தது. டக்கெட் 26 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சர், 34 ரன் எடுத்து ஸ்டார்க் பந்தில் பெவிலியன் திரும்பினார். 2-வது விக்கெட்டுக்கு கிராவ்லியுடன் கார்ஸ் ஜோடி சேர்ந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. போட்டியின் இறுதிவரை 18 ரன்களுடன் ஹாரி புரூக் மற்றும் 3 ரன்களுடன் ஸ்மித் களத்தில் இருந்தனர்.

2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சிட்னியில் நடந்த ஐந்தாவது டெஸ்டில் வெற்றி பெற்ற பிறகு, சொந்த மண்ணிலிருந்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். 5468 நாட்கள், அதாவது 15 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக இது கருதப்படுகிறது.
ஆஷஸ் தொடரின் முதல் மற்றும் 4-வது போட்டிகள் 2 நாட்களில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.






