என் மலர்

  நீங்கள் தேடியது "Nick Kyrgios"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முன்னணி வீரரான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
  • ஆஸ்திரேலியா வீரர் நிக் கிர்கியோஸ் காலிறுதியில் சிலி வீரர் காரினை தோற்கடித்தார்.

  லண்டன்:

  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

  இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், அமெரிக்காவின் டெய்லர் பிட்சுடன் மோதினார்.

  ஆரம்பம் முதலே இருவரும் ஆக்ரோஷமாக ஆடினர். இதனால் முதல் மற்றும் 3வது செட்டை டெய்லரும், 2வது மற்றும் 4வது செட்டை நடாலும் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை நடால் போராடி வென்றார்.

  இறுதியில் 3-6, 7-5, 3-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற நடால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

  மற்றொரு காலிறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸ், சிலியின் காரினுடன் மோதினார். இதில் 6-4, 6-3, 7-6 என்ற நேர் செட்களில் கிர்கியோஸ் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

  நாளை நடைபெற உள்ள அரையிறுதியில் கிர்கியோஸ் முன்னணி வீரரான ரபேல் நடாலை எதிர்கொள்கிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உலகின் முன்னணி வீரரான ரபேல் நடால் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
  • ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ் 4வது சுற்றில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

  லண்டன்:

  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

  இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், நெதர்லாந்தின் வான் டெ சாண்ட்சல்புடன் மோதினார். இதில் 6-4, 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற நடால் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

  மற்றொரு சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ், அமெரிக்காவின் பிராண்டன் நகஷிமாவுடன் மோதினார். இதில் 4-6, 6-4, 7-6, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் கிர்கியோஸ்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரரான நிக் கிர்ஜியோஸ் முழங்கை காயத்தால் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். #FrenchOpen
  செம்மண் தரையில் நடைபெறும் ஒரே கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்ச் ஓபன் பிரான்சில் நேற்று தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரரான நிக் கிர்ஜியோஸ் பங்கேற்று விளையாட இருந்தார். கடைசி நேரத்தில் முழங்கை காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.

  கடந்த சில வாரங்களாக கிர்ஜியோஸ் முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இந்த காயம் இன்னும் சரியாகவில்லை என உணர்ந்ததால் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார்.  போட்டியில் இருந்து வெளியேறிய கிர்ஜியோஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மன்னிகவும் ரசிகர்களே, நான் விளையாடுவதற்கு தயாரானேன். ஆனால், குறுகிய நேரம் மட்டுமே இங்கே வர முடிந்தது. துரதிருஷ்டவசமாக நான் பிரெஞ்ச் ஓபனில் இருந்து வெளியேறியுள்ளேன்.

  செம்மண் தரையில் ஐந்து செட் கொண்ட இந்த போட்டியில் விளையாடினால் காயம் வீரியம் அடைந்து விடும் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்தனர்’’ என்று தெரிவித்துள்ளார்.
  ×