என் மலர்
நீங்கள் தேடியது "டெஸ்ட் பதவிக்காலம்"
- SENA நாடுகளுக்கு எதிராக 10 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது.
- 2027 ஒருநாள் உலகக் கோப்பை முடியும் வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு விவிஎஸ் லக்ஷ்மணை கொண்டு வர பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றதிலிருந்தே டிரஸ்ஸிங் ரூம் உட்பட இந்திய அணியில் ஒரு குழப்பம் நிலவி வருகிறது. இதுபோட்டிகளிலும் வெளிபடுகிறது. மேலும் கௌதம் கம்பீரின் அணித்தேர்வு குறித்தும் ஒவ்வொரு போட்டியிலும் கேள்வி எழுகிறது. ஐசிசி மற்றும் ஏசிசி போட்டிகளில் கௌதம் கம்பீரின் தேர்வுகள் கைக்கொடுத்தாலும், SENA நாடுகளுக்கு எதிராக 10 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது. குறிப்பாக சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் ஒயிட்வாஷ் ஆனபிறகு இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீரின் எதிர்காலம் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில் டெஸ்ட் அணிக்கு மட்டும் புது பயிற்சியாளரை கொண்டுவர, பிசிசிஐ நிர்வாகிகள் சிலர் லக்ஷ்மணை அணுகியதாக தகவல் வெளியாகி உள்ளது. 2027 ஒருநாள் உலகக் கோப்பை முடியும் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் ஐந்து வாரங்களில் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் செயல்திறனைப் பொறுத்து அதை மீண்டும் பரிசீலிக்க வாய்ப்புகளும் உள்ளன.
இந்தியா டி20 உலகக் கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டால் அல்லது குறைந்தபட்சம் இறுதிப் போட்டியை எட்டினால், அவர் தடையின்றி தனது பணியைத் தொடர்வார். இருப்பினும், கம்பீர் டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றியைத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரம் டெஸ்ட் அணிக்கு பயிற்சியளிக்க லக்ஷ்மண் ஆர்வம் காட்டவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 2026 இல் இலங்கைக்கும், அக்டோபர்-நவம்பர் 2026 இல் நியூசிலாந்திற்கும் தலா இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக வெளிநாடு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இதைத் தொடர்ந்து, ஜனவரி-பிப்ரவரி 2027 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) சொந்த மண்ணில் விளையாடுகிறது.






