என் மலர்

  செய்திகள்

  யுவராஜ் தந்தை, எம்எஸ் டோனி
  X
  யுவராஜ் தந்தை, எம்எஸ் டோனி

  தன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகக்கோப்பையை தன்னை தவிர எந்த இந்திய அணி கேப்டனும் பெறக்கூடாது என்பது தான் டோனியின் எண்ணம் என யுவராஜ் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் எம்.எஸ்.டோனி, ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவ்வாறு எந்த அறிவிப்பும் வராத நிலையில், இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

  இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் செல்லும் அணியில் டோனி இடம்பெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதே சமயம் இந்திய அணியில் டோனி இடம் பிடித்தாலும், ரிஷப் பந்த்  தான் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும், சொல்லப்படுகிறது.

  இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் தோல்வி குறித்து டோனியைக் குற்றம் சாட்டியுள்ளார்.

  டோனி வேண்டுமென்றுதான் நியூசிலாந்து அணியின் டார்கெட்டை கடக்க அணிக்கு உதவவில்லை. இந்திய அணியில் தன்னைத்தவிர, மற்ற எந்த கேப்டனும், உலகக் கோப்பையைப் பெற்று, பெருமையை சம்பாதித்துவிடக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம். டோனி தனது வாய்ப்புகளை வேண்டுமென்று பயன்படுத்தாமல் மறுத்து விட்டார் என கூறி உள்ளார்.

  ஆனால், டோனி மீது யோகராஜ் குற்றம் சாட்டுவது முதன்முறையில்லை. ஏற்கனவே பலமுறை டோனியின் மீதான தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். 
  Next Story
  ×