search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலகக்கோப்பை கிரிக்கெட்"

    • பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 5 விக்கெட்டுகளையும் ஹரிஸ் ரஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
    • பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய வார்னர் 163 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் களமிறங்கினர்.

    13 ரன்னில் வார்னருக்கு கேட்ச் செய்யப்பட்டது. முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி பின்னர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். பாகிஸ்தான் பந்து வீச்சை ஓட ஓட விரட்டினர். ருத்ரதாண்டவம் ஆடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இருவரும் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு இருந்த நிலையில் மார்ஷ் 121 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த ஸ்மித் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

    பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய வார்னர் 163 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பிறந்தது.

    அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொதப்பலாக விளையாடினர். இதனால் 400 ரன்கள் குவிக்க வேண்டிய ஆஸ்திரேலியா 367 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 5 விக்கெட்டுகளையும் ஹரிஸ் ரஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இதையடுத்து 368 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் அப்துல்லா ஷபீக் 64, இமாம் உல் ஹக் 71, பாபர் அசாம் 17, சவுத் ஷகீல் 34, முகமது ரிஸ்வான் 47, இப்திகார் அகமது 26, முகமது நவாஸ் 14 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதானல் 62 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    • ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    ஐதராபாத்:

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் பெரேரா ஆகியோர் களம் இறங்கினர்.

    இதில் பெரேரா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து நிசாங்காவுடன் குசல் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. அதிரடியாக ஆடிய நிசாங்கா 51 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

    இதையடுத்து மெண்டிஸ் உடன் சமரவிக்ரமா ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மெண்டிஸ் 77 பந்தில் 122 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய அசலங்கா 1 ரன், டி சில்வா 25 ரன், தசுன் ஷனகா 12 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய சமரவிக்ரமா சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்தது. குசல் மெண்டிஸ் 122 ரன்னும், சதீரா சமரவிக்ரமா ௧௦௮ ரன்னும் குவித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து 345 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாட தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபிக் மற்றும் இமாம்-உல்-ஹக் களமிறங்கினர். இதில் இமாம்-உல்-ஹக் 12 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

    இதையடுத்து முகமது ரிஸ்வானுடன் அப்துல்லா ஷபிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியின் ரன்வேகம் கணிசமாக உயர்ந்தது. சதம் விளாசிய அப்துல்லா ஷபிக், 113 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடி காட்டிய முகமது ரிஸ்வான் 131 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இறுதியாக பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது.
    • தென் ஆப்பிரிக்க அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 4-வது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் இலங்கை அணியும் மோதின. டெல்லியில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கம் முதலே அதிரடி காட்டிய தென் ஆப்பிரிக்க அணி ரன்மழை பொழிந்தது. குயிண்டன் டாக் (100 ரன்கள்), வாண்டர் உசேன் (108 ரன்கள்) ஏய்டென் மார்கரம் (106 ரன்கள்) ஆகியோர் சதம் அடித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் குவித்துள்ளது.

    இதையடுத்து 429 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் குசல் பெரேரா 7, குசல் மெண்டிஸ் 76, சதீர சமரவிக்ரம 23, தனஞ்ஜெயா டி சில்வா 11, சரித் அசலங்கா 79, தசுன் ஷனகா 68, கசுன் ராஜிதா 33, மதீஷா பதிரனா 5, தில்ஷான் மதுஷங்கா 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

    இந்நிலையில் இலங்கை அணி 44.5 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஓய்விலிருந்து திரும்பிய கேன் வில்லியம்சன் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெலிங்டன்:

    இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

    இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பீல்டிங் செய்கையில் காயமடைந்து ஓய்விலிருந்து திரும்பிய கேன் வில்லியம்சன் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் டிம் சவுதி , டிரென்ட் பவுல்ட் போன்ற திறமையான பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி பின்வருமாறு;-

    நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் பவுல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, வில் யங்.

    • இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 5ம் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது.
    • உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன.

    இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 5ம் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இன்று மதியம் 1.30 மணிக்கு இலங்கையின் கண்டியில் இந்த அறிவிப்பு வெளியாகும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் தேவை என்று முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #WorldCup2019
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் 24-ந்தேதியும், ஒரு நாள் தொடர் மார்ச் 2-ந்தேதியும் தொடங்குகிறது.

    உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி ஒரு நாள் தொடர் என்பதால் ஆஸ்திரேலிய தொடர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

    இந்த தொடருக்கான இந்திய அணியில் இருந்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார். 20 ஓவர் போட்டியில் இடம்பெற்ற அவர் ஒரு நாள் போட்டியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியில் நிலையாக விளையாடி வரும் அவர் நீக்கப்பட்டது அதிர்ச்சியான ஒன்றே.

    ஆஸ்திரேலிய தொடரில் நீக்கப்பட்டதால் அவர் உலகக் கோப்பை அணியிலும் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.

    இந்த நிலையில் உலக கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக் தேவை என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல், ரகானே, ரி‌ஷப் பந்த் என யாரையும் களம் இறக்க தேவையில்லை. தினேஷ் கார்த்திக்கை களம் இறக்கலாம். இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்து எனக்கு ஒரு கண்ணோட்டம் இருக்கிறது.

    என்னுடைய கணிப்பில் 13 வீரர்களுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும். அதில் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, அம்பதி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ், ஹர்த்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், சாஹல், பும்ரா, முகமது‌ ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு உண்டு.

    மற்ற வகையில் ராகுல், ரகானே, ரி‌ஷப் பந்ட் ஆகியோரை காட்டிலும் உலகக் கோப்பைக்கு தினேஷ் கார்த்திக் தேவை. அணியில் எப்போதும் நெகிழ்வு தன்மை இருக்க வேண்டும். தொடக்க வீரராக தினேஷ் கார்த்திக்கை மாற்றி களம் இறக்கும்போது நல்ல முடிவு கிடைக்கும். டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய அனுபவம் இருப்பதால் அவரால் ஒரு நாள் போட்டியில் ஜொலிக்க முடியும்.

    14-வது வீரராக விஜய் சங்கர் இருக்கலாம். ஏனென்றால் இங்கிலாந்து மைதானத்தில் பந்து நன்றாக ‘சுவிங்’ ஆகும். அப்போது ஹர்த்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகிய இரண்டு ஆல் ரவுண்டர்களுடன் களம் இறங்கலாம்.

    கலீல் அகமது, முகமது சிராஜ் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு பந்து வீசவில்லை. உமேஷ் யாதவை மாற்று வீரராக மட்டுமே வைத்து இருக்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் வெல்லும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    தினேஷ் கார்த்திக் நிலை குறித்து முன்னாள் வீரரும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியதாவது:-

    இந்திய அணி நிர்வாகம் தினேஷ் கார்த்திக்கை 20 ஓவர் வீரராக மட்டுமே பார்க்க தொடங்கி விட்டது என்பது புரிந்துவிட்டது. அவருக்கு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைப்பதும், வாய்ப்புக்கான கதவுகள் திறப்பதும் என்னை பொறுத்தவரை இல்லை. அதற்காக அவரின் ரசிகர்களிடம் வருத்தத்தை தெரிவிக்கிறேன்.

    நியூசிலாந்தில் அம்பதி ராயுடு பொறுமையாக, நிதானமாக ஆடிய விதம் கார்த்திக்கை விட சிறப்பாக இருந்தது என்று நிர்வாகம் கருதலாம். நீண்ட நேரம் விளையாடும் போட்டியில் தினேஷ் கார்த்திக் நிலைத்து ஆடும் பொறுமையில்லை என்று கருதுகிறார்கள்.

    டோனி, ரிசப் பந்த் ஆகியோருடன் ஒப்பிடுகையில் தினேஷ் கார்த்திக், டோனியை காட்டிலும் கீப்பிங்கில் சற்று குறைவாகவும், ரி‌ஷப் பந்த்-ஐ காட்டிலும் சற்று சிறப்பாகவும் செயல்படுகிறார்.

    ஆனால் ரி‌ஷப் பந்த் சமீப காலமாக பேட்டிங் செய்யும் விதம் தேர்வாளர்களை கவர்ந்துள்ளது. நம்பிக்கை அளித்துள்ளது. நான் ரி‌ஷப் பந்த் ஆதரவாளர் இல்லை. ஆனால் அவர் ஒரு நாள் போட்டியில் தனக்கான இடத்தை தக்க வைக்க முயன்று வருகிறார்.

    பல போட்டிகளில் தனக்கு கிடைத்த வாய்ப்பை தினேஷ் கார்த்திக் சரியாக பயன்படுத்தியும் தேர்வு செய்யவில்லை எனும்போது அவரது ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிந்துவிட்டது என்றே கருதுகிறேன். 20 ஓவர் வீரராக மட்டுமே அவர் தொடர முடியும் என்று கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.

    இவ்வாறு சஞ்சய் மஞ்ரேக்கர் கூறினார்.
    2019 உலகக்கோப்பைக்கான எங்கள் அணியின் கேப்டனாக சர்பிராஸ் அகமதுதான் இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்றது. அப்போது தென்ஆப்பிரிக்க வீரர் பெலுக்வாயோவுக்கு எதிராக இனவெறியை தூண்டும் வகையில் சர்பிராஸ் அகமது பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.

    இதுகுறித்து விசாரணை நடத்திய ஐசிசி சர்பிராஸ் அகமதுக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடைவிதித்தது. இதனால் உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்பிராஸ் அகமது செயல்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால், நான்தான் கேப்டனாக இருப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த சர்பிராஸ் அகமது, இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் சர்பிராஸ் அகமதுதான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கான தயார் திட்டத்தில் சர்பிராஸ் அகமதும் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளார். சிறந்த தலைவர், சிறந்த வீரர் என்பதை நிரூபித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை அவர் தலைமையில்தான் பாகிஸ்தான் வென்றது. ஐசிசி டி20 தரவரிசையிலும் பாகிஸ்தான் முதல் இடத்தை பிடித்துள்ளது. உலகக்கோப்பை தொடருக்குப் பின் மறுமதிப்பீடு செய்யும் வரை அவர்தான் கேப்டனாக இருப்பார்’’ என்றார்.
    இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 2019 உலகக் கோப்பையை வெல்லும் திறமை பாகிஸ்தான் அணிக்கு உள்ளது என்று சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார். #WorldCup
    பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான சோயிப் மாலிக் இடம்பிடித்து விளையாடி வருகிறார். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 2019 உலக்கோப்பையை வெல்லும் திறமை பாகிஸ்தானிடம் உள்ளது என்று சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சோயிப் மாலிக் கூறுகையில் ‘‘உலகக்கோப்பையை வென்று கையில் ஏந்தும் திறமை எங்களிடம் உள்ளது. ஆனால், திறமை மட்டும் இருந்தால் எதையும் வெல்ல முடியாது. சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும்.

    உலகக் கோப்பையை வெல்லும் அளவிற்கான தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளோம். நினைவுகூரத்தக்க 2019 உலகக்கோப்பையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
    இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய ‘ஏ’ அணியில் ரகானே, ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளனர். #Rahane #RishabhPant
    இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக இந்தியா ‘ஏ’ அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் ரகானே சேர்க்கப்பட்டுள்ளார்.

    அதேபோல் கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். இருவரையும் டாப் ஆர்டர் வரிசையில் களமிறங்க இந்திய அணி நிர்வாகம் கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

    விரைவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிறது. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு நிச்சயம் இடமிருக்கும். இதில் எந்த சந்தேகமும் இருக்காது. அதேவேளையில் கேஎல் ராகுல் மாற்று தொடக்க பேட்ஸ்மேன் நிலையில் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.

    தற்போது இருவரும் பெண்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இதனால் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடவில்லை.

    ஒருவேளை வீரர்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் தயாராக இருக்க வேண்டும் என்பதால் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
    உலகக்கோப்பை தொடருக்கு சற்றுமுன் ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் பந்து வீச்சாளர்கள் வேலைப்பளு குறித்து டு பிளிசிஸ் கவலை தெரிவித்துள்ளார். #WorldCup2019
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிக அளவில பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.

    முன்னணி வீரர்களை ஒவ்வொரு அணிகளும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. பணம் அதிக அளவில் கிடைப்பதால் அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

    இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி, மே மாதம் 2-வது வாரத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நாடாளுமன்ற தேர்தல் இந்த வருடம் நடக்க இருப்பதால் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுமா? வெளிநாட்டில் நடத்தப்படுமா? என்ற கேள்வி ஏற்கனவே உள்ளது.

    இதற்கிடையில் இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் 30-ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதனால் ஆஸ்திரேலியா போன்ற முன்னணி நாடுகள் நட்சத்திர வீரர்களுக்கு ஐபில் தொடரில் பங்கேற்க வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளது. மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் தானாகவே ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.



    ஐபிஎல் தொடர் முடிவடைந்து இரண்டு வாரத்திற்குள் உலகக்கோப்பை தொடர் வருவதால் ஒவ்வொரு அணிகளும் தங்களது வேகப்பந்து வீச்சு குறித்து கவலை அடைந்துள்ளனர். இந்திய அணி கேப்டன் விராட் கோலி பும்ரா போன்ற பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தேவை என்று கூறி வருகிறார்.

    இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணி கேப்டனான டு பிளிசிஸ் லுங்கி நிகிடி, ரபாடா, கிறிஸ் மோரிஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
    ×