என் மலர்
செய்திகள்

உலகக்கோப்பை தொடருக்கு தயாராக ஐபிஎல் சரியான தளம்: இங்கிலாந்து கேப்டன் மோர்கன்
உலகக்கோப்பை தொடருக்கு தயாராக ஐபிஎல் சரியான தளம் என்று இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார். #IPL2019 #WorldCup2019
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. உலகக்கோப்பைக்கு முன் தற்போது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களைத் தவிர மற்ற நாட்டு வீரர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள்.
உலகக்கோப்பைக்கும் ஐபிஎல் தொடருக்கும் இடையில் குறைந்த நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. இதனால் வீரர்களின் வேலைப்பளு குறித்து அனைத்து நாடுகளும் கவலை அடைந்துள்ளது.
ஆனால் ஐபிஎல் தொடர் உலகக்கோப்பைக்கான சிறந்த தளம் என்று இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோர்கன் கூறுகையில் ‘‘மிகுந்த நெருக்கடியான சூழ்நிலையில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக விளையாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

சூழ்நிலைகள், அணியை வெற்றி நோக்கி அழைத்துச் செல்வது, நெருக்கடிகளை தனக்குள் எடுத்துக் கொண்டு விளையாடுவது உலகக்கோப்பைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவது உலகக்கோப்பைக்கு தயாராகுவதற்கான சிறந்த தளமாகும்’’ என்றார்.

Next Story