search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய ஆடுகளம்
    X
    இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய ஆடுகளம்

    இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள், ஆடுகளம் பற்றியும் விமர்சனம்

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்ததற்கான காரணங்கள், ஆடுகளம் பற்றியும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
    மான்செஸ்டர்:

    இந்தியாவின் உலகக்கோப்பை கனவு கலைந்தது. அரை இறுதியில் நியூசிலாந்திடம் தோற்றதால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.

    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த மே மாதம் 30-ந்தேதி தொடங்கியது.

    இந்தப் போட்டியில் பங்கேற்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணி லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி அரை இறுதிக்கு முன்னேறியது.

    தென் ஆப்பிரிக்கா (6 விக்கெட்), ஆஸ்திரேலியா (36 ரன்), பாகிஸ்தான் (89 ரன்), ஆப்கானிஸ்தான் (11 ரன்), வெஸ்ட் இண்டீஸ் (125 ரன்), வங்காளதேசம் (28 ரன்), இலங்கை (7 விக்கெட்), ஆகிய 7 அணிகளை வீழ்த்தி இருந்தது. இங்கிலாந்திடம் மட்டும் தோற்றது.

    புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த இந்திய அணி அரை இறுதி ஆட்டத்தில் 4-வது இடத்தை பிடித்த நியூசிலாந்தை எதிர் கொண்டது. மான்சென்டரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    அந்த ஆட்டம் நேற்று மீண்டும் தொடர்ந்தது. நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 240 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    நியூசிலாந்து வீரர்களின் அனல்பறக்கும் பந்துவீச்சால் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமள என்று சரிந்தன 92 ரன்னில் 6 விக்கெட்டை இழந்தது.

    விக்கெட் சரிவால் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆதனால் 7-வது விக்கெட்டான டோனி-ஜடேஜா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

    நேரம் செல்ல செல்ல ஜடேஜா ஆட்டம் அதிரடியாக இருந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டது. டோனி வழக்கம்போல் விக்கெட் சரிவை தடுக்கும் விதமாக பொறுமையாக ஆடினார். இந்த ஜோடியின் ஆட்டத்தை பார்க்கும்போது வெற்றி கிடைத்துவிடும் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.

    ஆனால் 48-வது ஓவரில் ஜடேஜா ஆட்டம் இழந்தார். இது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அவர் 59 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 77 ரன் எடுத்தார். அவர் ஆட்டம் இழந்தபோது 13 பந்தில் 32 ரன் தேவைப்பட்டது.

    கடைசி 2 ஓவரில் 31 ரன் தேவைப்பட்டது. முதல் பந்தில் டோனி சிக்சர் அடித்தார். இதனால் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் 3-வது பந்தில் அவர் ரன் அவுட் ஆனது திருப்புமுனையாகும். மார்டின் குப்தில் மிகவும் அருமையாக ‘ரன் அவுட்’ செய்தார்.

    டோனியின் அவுட்டுடன் இந்தியாவின் வாய்ப்பு முடிந்தது. அவர் 72 பந்தில் 50 ரன் (1 பவுண்டரி, 1 சிக்சர்) அடித்தார்.

    இந்திய அணி 49.3 ஓவரில் 221 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் 18 ரன்னில் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது.

    இந்திய அணி மிகவும் முக்கியமான அரை இறுதியில் தோல்வியை தழுவியதற்கான காரணங்கள் வருமாறு:-

    அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மோசமாக ஆடியது முக்கிய காரணம் ஆகும். மேகம் மற்றும் ஈரப்பதம் காரணமாக ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் இருந்ததால் ரோகித்சர்மா, கேப்டன் விராட்கோலி, ராகுல் (தலா 1 ரன்) சொதப்பினர். 24 ரன்னில் 4 விக்கெட் விழுந்தது.

    அனுபவம் வாய்ந்த டோனியை முன்னதாக களம் இறக்காததும் 7-வது வீரராக ஆட வைத்தததும் தோல்விக்கு காரணம் ஆகும்.

    அதிரடி பேட்ஸ்மேன்களான ரி‌ஷப்பந்த், ஹர்திக் பாண்டியா, ஆகியோர் சுழற் பந்து வீரர் சான்ட்னர் பந்துவீச்சில் திணறினர். இருவரையும் தூக்கி ஆட வைத்தது. அவர் தனது திறமையான பந்து வீச்சால் வீழ்த்தினார்.

    டோனி-ஜடேஜா ஜோடி 7-வது விக்கெட்டுடன் 116 ரன் எடுத்தது. ஆனால் அவர்களை முன்னதாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். இதனால் கடைசி 3 ஓவரில் 37 ரன் என்ற கடுனமான நிலை ஏற்பட்டு நெருக்கடி உருவானது.

    நியூசிலாந்து அணியின் அபாரமான பீல்டிங்கும் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக இருந்தது. தினேஷ் கார்த்திக் கேட்ச் பிடிக்கப்பட்ட விதம், டோனி ரன் அவுட் ஆட்டத்தை மாற்றியது.

    ரோகித்சர்மா இந்த தொடரில் 4 முறை கேட்ச் விட்ட பிறகு 3 சதம், ஒரு அரைசதம் அடித்தார். நியூசிலாந்து விக்கெட் கீப்பர் லாதம் முதல் வாய்ப்பிலேயே அவரை கேட்ச் பிடித்து வெளியேற்றினர்.

    நேற்று முன்தினம் ஆட்டம் முழுமையாக நடந்து இருந்தால் இந்தியாவுக்கு சாதகமான நிலை ஏற்பட்டு இருக்கும்.

    இந்தியா அபாரமாக பந்துவீசி நியூசிலாந்தை கட்டுப்படுத்தி இருந்தது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு மறுநாள் நடத்தப்பட்டு இந்தியாவுக்கு பாதகமான நிலையை உருவாக்கிவிட்டது.

    மழை காரணமாக ஆடுகளத்தின் தன்மை நேற்று மாறியது. இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் இதில் சொதப்பிவிட்டனர்.

    இதற்கிடையே மான்செஸ்டர் ஆடுகளம் குறித்து முன்னாள் வீரர்கள் மார்க் டெய்லர், கிரேக் பவுலர் ஆகியோர் விமர்சித்து உள்ளனர். பந்துவீச்சு ஏற்ற வகையில் மெதுவான ‘பிட்ச்‘ அமைப்பதா? என்று அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×