search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன்
    X
    இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன்

    இங்கிலாந்தின் ஆக்ரோ‌ஷம் நீடிக்கும் - கேப்டன் மார்கன் நம்பிக்கை

    நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து அணி தொடர்ந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
    செஸ்டர்-லீ- ஸ்டீட்:

    உலககோப்பை போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அரைஇறுதிக்கு முன்னேறியது.

    செஸ்டர்-லீ- ஸ்டீட் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 305 ரன் குவித்தது.

    பேர்ஸ்டோவ் 9-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 99 பந்தில் 106 ரன்னும் (15 பவுண்டரி, 1 சிக்சர்), ஜேசன்ராய் 60 ரன்னும் (8 பவுண்டரி), கேப்டன் மோர்கன் 42 ரன்னும் எடுத்தனர். போல்ட், ஹென்றி, ஜேம்ஸ் நீசம் தலா 2 விக்கெட்டும், சான்ட்னெர், சவுத்தி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி இங்கிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணி 45 ஓவர்களில் 186 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து 119 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    டாம் லாதம் அதிகபட்சமாக 57 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். மார்க்வுட் 34 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். வோக்ஸ், ஆர்ச்சர், பிளன்கெட், ஆதில் ரஷீத், பென்ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    இங்கிலாந்து அணி பெற்ற 6-வது வெற்றியாகும். இதன்மூலம் 12 புள்ளியுடன் அந்த அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

    இந்த வெற்றி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் கூறியதாவது:-

    எங்கள் அணி வீரர்களின் ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது. தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பேர்ஸ்டோவ் சதம் வெற்றிக்கரமான ஆட்டமாகும்.

    25-வது ஓவருக்கு பிறகு ஆடுகளத்தின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் எடுத்த ரன்களால் 305 ரன்னை குவிக்க முடிந்தது.

    இந்த ஆடுகளத்தில் 280 முதல் 300 ரன்கள் நல்ல ஸ்கோராகும். இங்கிலாந்தில் உள்ள அனைத்து ஆடுகளங்களும் நேரம் செல்ல செல்ல மெதுவாக இருக்கிறது. இதனால் பேட்ஸ்மேன்களுக்கு மிடில் ஓவர்களில் ரன் எடுப்பது சவாலானதே. இதனால் முதலில் பேட்டிங் செய்யவே நாங்கள் தொடர்ந்து விரும்புகிறோம்.

    கடந்த 2 ஆட்டங்களிலும் நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்.

    இனிவரும் ஆட்டங்களிலும் எங்களது ஆக்ரோ‌ஷம் நீடிக்கும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    நியூசிலாந்து அணி 3-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது:-

    தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோற்றது நல்ல சூழ்நிலை இல்லை. நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்துவது அவசியமாகும். 306 ரன் இலக்கு என்பது கடினமானதே. எங்களது பந்து வீச்சு நேர்த்தியாக இல்லை.

    இங்கிலாந்து அணி எங்களை அனைத்து துறைகளிலும் வெளியேற்றிவிட்டது. அந்த அணி வெற்றிக்கு தகுதியானது. எங்களது பேட்டிங்கும் மோசமாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×