search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அணிக்கு என்ன தேவை? அந்த தந்திரம் ‘லெஜண்ட்’ டோனிக்குதான் தெரியும் -விராட் கோலி
    X

    அணிக்கு என்ன தேவை? அந்த தந்திரம் ‘லெஜண்ட்’ டோனிக்குதான் தெரியும் -விராட் கோலி

    இந்திய அணிக்கு என்ன தேவை என்பது டோனிக்கு மட்டும்தான் சரியாக தெரியும் என விராட் கோலி பாராட்டி பேசியுள்ளார்.
    உலக கோப்பை தொடரின் 34-வது லீக் ஆட்டம் நேற்று மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது.  இதில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.  

    இதில் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். இது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

    அணிக்கு என்ன தேவை என்பது டோனிக்கு தெரியும். அதன்படிதான் மிடில் ஓவரில் ஆடி வருகிறார். சில நேரங்களில் ஆடாமல் இருக்கலாம். இது எல்லோருக்கும் நடக்கக்கூடிய ஒன்றுதான்.



    ஆனால், டோனி விளையாடவில்லை என்றால் மட்டும் எல்லாரும் விமர்சிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இந்த போட்டியில் அவர் சிறப்பாகவே செயல்பட்டார். கடைசி நேரத்தில் எப்படி ஆட வேண்டும்? அணிக்கு என்ன தேவை? என்கிற தத்துவம் அவருக்கு மட்டும்தான் சரியாக தெரியும்.

    அவரது அனுபவம் 10க்கு 8 முறை மிகச் சரியாகவே அமையும். இந்திய அணியில் சிறப்பாக விளையாட பலர் இருக்கிறார்கள். ஆனால், டோனிக்கு மட்டும்தான் ஒரு பிட்ச்சில் எந்த ஸ்கோர் சிறந்தது என்பது தெரியும்.

    இந்த பிட்ச்சில் 265 எடுத்தால் நன்றாக இருக்கும் என கூறினால், நாங்கள் 300 ரன்களுக்கு முயற்சி செய்யவும் மாட்டோம். 230க்குள் முடிக்கவும் மாட்டோம். அவர் சொன்னபடி முடிக்கவே முயற்சிப்போம்.

    அவர் எங்களுக்கு லெஜண்ட். இந்தியாவுக்கு பல போட்டிகளில் வெற்றியை தேடி தந்தவர். கடைசி இரண்டு போட்டிகள் நினைத்த மாதிரி வரவில்லை. ஆனாலும், வெற்றிப் பெற்றோம். வெஸ்ட் இண்டீசுடன் மோதும்போது கடைசி் ஓவரில் டோனி அடித்த 2 சிக்சர் மிக முக்கியமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.










    Next Story
    ×