search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பை கால்பந்து காலிறுதி - முதல் பாதியில் ரஷியா, குரோஷியா 1 - 1 என சமனிலை
    X

    உலக கோப்பை கால்பந்து காலிறுதி - முதல் பாதியில் ரஷியா, குரோஷியா 1 - 1 என சமனிலை

    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நான்காவது காலிறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் ரஷியா, குரோஷியா அணிகள் 1-1 என சமனிலை வகிக்கிறது. #WorldCup2018 #RUSCRO
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று முன்தினம் காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய நான்காவது காலிறுதி ஆட்டத்தில் ரஷியா - குரோஷியா அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் ரஷியா வீரர் டெனிஸ் செரிஷேவ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ரஷியா அணி 1-0 என முன்னிலை வகித்தது.



    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்டத்தின் 39 வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஆண்ட்ரே கிரிமாண்டிக் ஒரு கோல் அடித்தார். 

    இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் ரஷியா, குரோஷியா அணிகள் 1-1 என சமனிலை வகித்தன. #WorldCup2018 #FifaWorldCup2018 #RUSCRO #CRORUS #RussiavCroatia
    Next Story
    ×