search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் தொடரில் ஸ்மித் பங்கேற்பாரா? - சுக்லா பதில்
    X

    ஐபிஎல் தொடரில் ஸ்மித் பங்கேற்பாரா? - சுக்லா பதில்

    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியுள்ள ஸ்மித், ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்பது குறித்து ஐபிஎல் சேர்மன் பதில் அளித்துள்ளார். #IPL2018
    தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் நியூலேண்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து கொண்டிருந்தது.

    அப்போது பீல்டிங் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலியா தொடக்க பேட்ஸ்மேன் பான்கிராப்ட், பையில் இருந்து ஒரு பொருளை எடுத்து பந்தின் மீது தேய்த்தார். இது கேமராவில் தெளிவாக தெரிந்தது. இதுகுறித்து நடுவர் அழைத்து பானிகிராப்ட் இடம் விசாரித்தார். நடுவர் அழைத்ததும் அந்த பொருளை பேன்ட்-ஐ அவிழ்த்து டிரவுசரில் போட்டார்.

    பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்துவதற்கான அந்த பொருளை பயன்படுத்தினார் என்று சராமரியாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பத்திரிகையாளரை சந்தித்தார். அப்போது பந்தை சேதப்படுத்தியதை ஒப்புக் கொண்டார். அத்துடன் தனக்கு இது தெரியும் என்றார்.

    இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சியடைந்தது. ஆஸ்திரேலியா பிரதமர் தனது வருத்தத்தை தெரிவித்தார். அத்துடன் கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித்தை நீக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இந்நிலையில் கேப்டன் ஸ்மித் மற்றும் துணைக் கேப்டன் டேவிட் வார்னர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டனர். இதனால் இருவரும் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

    கேப்டனாக இருந்த ஸ்மித், தவளை ஒப்புக் கொண்டதால் ஐசிசி அவர் மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறது. இந்த டெஸ்ட் முடிந்த உடன் விசாரணை நடத்தி முடிவு எடுக்கும். இந்த பிரச்சினையால் அடுத்த வாரம் தொடங்கும் ஐபிஎல் தொடரில் ஸ்மித் பங்கேற்க ஏதாவது பிரச்சினை வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.



    ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இதனால் அந்த அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ஸ்மித் பங்கேற்பதற்கு தடை வருமா? என்ற யூகத்திற்கு ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா பதில் அளித்துள்ளார்.

    ஸ்மித் விவகாரம் குறித்து ராஜீவ் சுக்லா கூறுகையில் ‘‘பிசிசிஐ மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐசிசி-யின் அதிகாரப்பூர்வ தண்டனை அறிவிப்பிற்காக காத்திருக்கிறது. தற்போது வரை பிசிசிஐ-யோ, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோ எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.

    ஐசிசியின் தண்டனையின் அளவைப் பொறுத்துதான் நாங்கள் முடிவு எடுப்போம். ஸ்மித் அந்த அணிக்கு முக்கியமானவர். அத்துடன் கேப்டனாகவும் உள்ளார். இதனால்தான் நாங்கள் காத்திருக்கிறோம்.

    ஸ்மித் மற்றும் வார்னரை பதவியில் இருந்து தூக்கியது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் உள்விவகாரம். இதை நாங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ள ஒன்றுமில்லை. நாங்கள் ஐசிசி தண்டனையைத்தான் கருத்துக் கொள்வோம்’’ என்றார். #IPL2018 #RR #SportsNews
    Next Story
    ×