என் மலர்

  செய்திகள்

  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரோகித் சர்மா குறித்து மனைவி பெருமிதம்
  X

  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரோகித் சர்மா குறித்து மனைவி பெருமிதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நான் அறிந்த மனவலிமை மிக்க வீரர் நீங்கள் தான். உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் என்று ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  மும்பை :

  10-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் புனே சூப்பர் ஜெயன்ட்டை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் ஐ.பி.எல். கோப்பையை 3 முறை வென்றுத்தந்த முதல் கேப்டன் என்ற மகத்தான சாதனையை மும்பை கேப்டன் ரோகித் சர்மா படைத்தார். இந்த ஆட்டத்தை ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தேவும், பரபரப்போடு கண்டுகளித்தார். ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு முன்பாக காயத்தால் அவதிப்பட்ட ரோகித் சர்மா அதில் இருந்து மீண்டு சாதித்து இருக்கிறார்.  இதை குறிப்பிட்டு ரோகித்சர்மாவின் மனைவி ரித்திகா டுவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘வாழ்த்துகள். உங்களது அணி (ரோகித் சர்மா) மீண்டும் ஒரு முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றதற்காக மட்டுமல்ல. கடந்த 6 மாத கடினமான காலக்கட்டத்தில் நீங்கள் அடைந்த வேதனைகளை நான் அறிவேன். அதில் இருந்து முன் எப்போதையும் விட வேகமாகவும், வலுவாகவும், மனஉறுதி மிக்கவராகவும் மீண்டு வந்து இருக்கிறீர்கள். அதற்கு வாழ்த்துகள். நான் அறிந்த மனவலிமை மிக்க வீரர் நீங்கள் தான். உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். கோப்பையை வென்றுத்தந்த சக வீரர்களுக்கும் வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.
  Next Story
  ×