என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • வங்கதேச மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது.
    • இந்த போட்டி தொடர் திடீரென மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    டாக்கா:

    வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (டிசம்பர்) இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது.

    இந்த நிலையில் இந்த போட்டி தொடர் திடீரென மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்து இருக்கும் வங்கதேச கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் இருந்து எதுவும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இந்தியா, வங்கதேசம் இடையே சமீபகாலமாக நிலவும் அரசியல் பதற்றமே கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி கடந்த ஆகஸ்டு மாதம் வங்கதேசம் சென்று ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் விளையாட இருந்தது. அந்த போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோடப்பட்டது நினைவிருக்கலாம்.

    • 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை முஷ்பிகுர் ரஹீம் படைத்துள்ளார்.
    • 100 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய 8-வது விக்கெட் கீப்பர் என்ற சாதனை பட்டியலில் முஷ்பிகுர் ரஹீம் இணைந்துள்ளார்.

    அயர்லாந்து கிரிக்கெ அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

    இதில் முதலில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி வங்கதேசம் அணி விளையாடி வருகிறது.

    இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் வங்கதேச அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை முஷ்பிகுர் ரஹீம் படைத்துள்ளார்.

    மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய 8-வது விக்கெட் கீப்பர் என்ற சாதனை பட்டியலில் முஷ்பிகுர் ரஹீம் இணைந்துள்ளார். இந்திய ஜாம்பவான் எம்.எஸ். தோனி (90 டெஸ்ட்) மற்றும் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் (96 டெஸ்ட்) போன்றோரால் கூட இந்த மைல்கல்லை எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    100+ டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விக்கெட் கீப்பர்கள்:

    மார்க் பௌச்சர் (தென் ஆப்பிரிக்கா) - 147 டெஸ்ட்கள்

    அலெக் ஸ்டீவர்ட் (இங்கிலாந்து) - 133 டெஸ்ட்கள்

    குமார் சங்கக்காரா (இலங்கை) - 134 டெஸ்ட்கள்

    ஏபி டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) - 114 டெஸ்ட்கள்

    இயான் ஹீலி (ஆஸ்திரேலியா) - 119 டெஸ்ட்கள்

    பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து) - 101 டெஸ்ட்கள்

    ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து) - 100 டெஸ்ட்கள்

    முஷ்பிகுர் ரஹீம் (வங்கதேசம்) - 100 டெஸ்ட்கள்*

    • சுப்மன் கில் ஆடுவது சந்தேகமாகியுள்ளதால் ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார்.
    • இடக்கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் வலது காலில் காலுறை இன்றி வலை பயிற்சியில் ஈடுபட்டார்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வருகிற 22-ந்தேதி கவுகாத்தியில் தொடங்கும் 2-வது டெஸ்டில், கழுத்துவலியால் அவதிப்படும் இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆடுவது சந்தேகமாகியுள்ளதால் அதை கவனத்தில் கொண்டு அணியில் கூடுதலாக ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே, 2-வது டெஸ்டுக்கு புறப்படுவதற்கு முன்பாக கொல்கத்தாவில் இந்திய வீரர்கள் நேற்று பயிற்சி மேற்கொண்டனர். இதில் சாய் சுதர்சன், துருவ் ஜூரெல் ஆகியோர் ஒற்றைக்காலில் மட்டும் காலுறை (பேடு) கட்டிக் கொண்டு சுழற்பந்து வீச்சு யுக்தியை திறம்பட சமாளிப்பதற்கான பயிற்சி எடுத்தனர். இது கொஞ்சம் ஆபத்தான பழங்கால பயிற்சி முறையாகும். பந்து நேராக காலில் தாக்கினால் எலும்பு முறிவு கூட ஏற்படலாம்.

    இடக்கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் வலது காலில் காலுறை இன்றி வலை பயிற்சியில் ஈடுபட்டார். முன்னங்காலை எடுத்து வைத்து பந்தை தடுப்பதை காட்டிலும் பேட்டை அதிகமாக பயன்படுத்துவதற்கு இந்த பயிற்சி முறை வழிவகுக்கும். அத்துடன் கிரீசுக்கு வெளியே வந்து சுழற்பந்தை அடித்து ஆடுவதற்கும் ஊக்குவிக்கும். அவர்களின் வித்தியாசமான பயிற்சியை கம்பீர் உன்னிப்பாக கவனித்தார்.

    • கவுதம் கம்பீர் தலைமயில் இந்திய மண்ணில் இந்திய டெஸ்ட் அணி மோசமாக விளையாடி வருகிறது.
    • 6 போட்டிகளில் நான்கில் தோல்வியை சந்தித்துள்ளது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதற்கு ஆடுகளம் மிகவும் மோசமான அமைக்கப்பட்டதுதான் காரணம் என விமர்சனம் எழுந்தது. மேலும், இவ்வாறுதான் ஆடுகளம் அமைக்க வேண்டும் என்ற கம்பீர் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் போட்டி தொடங்குவதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக இருந்தே தண்ணீர் தெளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

    கம்பீர் ஆடுகளம் குறித்து குறை கூறவில்லை. இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

    கம்பீர் தலைமையில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 0-3 எனத் தோல்வியடைந்துள்ளது. தற்போது தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. 6 போட்டிகளில் 4-ல் தோல்வியை சந்தித்துள்ளது.

    இந்த நிலையில் டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் நீக்கப்பட வேண்டுமா? என கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு கங்குலி "தற்போதைய நிலையில் கவுதம் கம்பீரை நீக்குவதற்கான கேள்வி இல்லை. இங்கிலாந்தில் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. அதேபோல் இந்தாவிலும் சிறப்பாக விளையாடும் என் முழு நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றார்.

    • தோனி மனைவி சாக்ஷி தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
    • தோனி இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் இந்திய அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். மேலும் சிஎஸ்கே மூலமும் பல ரசிகர்களை அவர் கவர்ந்துள்ளார்.

    அவர் இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இம்பேக்ட் பிளேயராக களம் இறங்குவார் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் எம்.எஸ். தோனி மனைவி சாக்ஷி தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு தோனி கேக் கொடுக்கும் புகைப்படத்தை சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து நம் தலைவன் தலைவிக்கு பிறந்தநாள் விசில்கள் என தலைப்பிட்டுள்ளது. 

    • இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நவம்பர் 30-ந் தேதி தொடங்குகிறது.
    • காயத்தில் இருந்து குணமடைந்த ஹர்திக் பாண்ட்யா வலை பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. அந்த தொடர் நவம்பர் 30-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் அந்த தொடரில் இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விளையாட தயாராகி வருகிறார். இவர் நடப்பு ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது காயமடைந்தார். சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இறுதிப்போட்டியில் விலகினார். இருப்பினும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

    காயத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் விளையாடவில்லை. தற்போது காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா, வரும் 26-ம் தேதி தொடங்கவுள்ள சயத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் பரோடா அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த தொடருக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கும் தயாராகும் வகையில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்தார்.
    • இந்த நிகழ்ச்சியில் டிம் குக், எலான் மஸ்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்தார். அப்போது, சவுதி அரேபியா பட்டத்து இளவரசருக்கு விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    இதில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் கலந்து கொண்டார். சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இவரை அழைத்துச் சென்றுள்ளார்.

    இந்த விருந்தில் கலந்து கொண்டதற்காக ரொனால்டோவிற்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார். மேலும், தன்னுடைய மகன் பரோன் தங்களுடைய மிகப்பெரிய ரசிகர். vனத் தெரிவித்தார்.

    இந்த விருந்து நிகழ்ச்சியல் ஆப்பிள் சிஇஓ டிம் குக், டெஸ்டா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கடந்த 2022-ம் ஆண்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியா லீக்கில் உள்ள அல்-நாசர் கிளப்பில் விளையாட ஒப்பந்தம் ஆனார். அதில் இருந்து சவுதி கால்பந்து லீக்கின் முகமாக அறியப்படுகிறார். 40 வயதான போர்ச்சுக்கலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனல்டோ, அல்-நாசர் கிளப் உடனான ஒப்பந்தத்தை மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்துள்ளார்.

    • இதுவரை 42 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரியவந்துள்ளது.
    • இன்னும் 6 அணிகள் தகுதி பெற வேண்டும்.

    செவில்லே:

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.

    போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்ற 45 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.

    நேற்று ஒரே நாளில் முன்னாள் உலக சாம்பியன் ஸ்பெயின், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து உள்பட 8 நாடுகள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்றன.

    ஐரோப்பா கண்டத்தில் 'இ' பிரிவில் நடந்த தகுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின்-துருக்கி அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இதன் மூலம் ஸ்பெயின் அணி 16 புள்ளிகளுடன் அந்த பிரிவில் முதல் இடத்தை பிடித்து தகுதிப்பெற்றது.

    2010-ம் ஆண்டு உலக சாம்பியனான ஸ்பெயின் தொடர்ச்சியாக 13-வது முறை உலக கோப்பையில் ஆடும் வாய்ப்பை பெற்றது. ஒட்டுமொத்தமாக 17-வது தடவையாக தகுதி பெற்றுள்ளது.

    'ஜே' பிரிவில் நடந்த ஆட்டத்தில் பெல்ஜியம் 7-0 என்ற கோல் கணக்கில் லிச்சென்ஸ் டீன் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 18 புள்ளியுடன் தகுதிபெற்றது. தொடர்ந்து 4-வது தடவையாகவும், ஒட்டு மொத்தத்தில் 15-வது முறையாகவும் உலக கோப்பையில் ஆட உள்ளது. 2018-ல் 3-வது இடத்தை பிடித்ததே அந்த அணியின் சிறந்த நிலையாகும்.

    'எச்' பிரிவில் முதல் இடத்தை பிடித்து ஆஸ்திரியா 8-வது முறையாக உலக கோப்பைக்கு தகுதிபெற்றது. 1954-ம் ஆண்டு 3-வது இடத்தை பிடித்ததே ஆஸ்திரியாவின் சிறந்த நிலையாகும். 28 ஆண்டுக்கு பிறகு உலக கோப்பையில் ஆடுகிறது. 'பி' பிரிவில் இருந்து சுவிட்சர்லாந்தும் (13-வது தடவை), 'சி'பிரிவில் இருந்து ஸ்காட்லாந்தும் (9-வது தடவை) தகுதிபெற்றன.

    வடஅமெரிக்க கண்டத்தில் இருந்து பனாமா, ஹைதி (2-வது முறை) உலக கோப்பைக்கு தகுதிபெற்றன. 52 ஆண்டுகளுக்கு பிறகு ஹைதி உலக கோப்பையில் ஆட உள்ளது. இதேபோல அங்கிருந்து முதல் முறையாக குராசா நாடு தகுதிபெற்றது.

    உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற நாடுகள் வருமாறு:-

    ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெ கிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உரு குவே, கொலம்பியா, பரா குவே, மொராக்கோ, துனி சியா, எகிப்து, அல்ஜீரியா, கானா மற்றும் குட்டி நாடான கேப்வெர்டே, இங்கிலாந்து, கத்தார், தென்ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐவேரி கோஸ்ட், செனகல், பிரான்ஸ், குரோஷியா,போர்ச்சுக்கல், நார்வே, ஜெர்மனி, நெதர் லாந்து, பெல்ஜியம், ஆஸ்தி ரியா, சுவிட்சர்லாந்து. ஸ்பெ யின், ஸ்காட்லாந்து, பனாமா, ஹைதி, குராசா.

    3 நாடுகள் நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்றில் இருந்து செல்லும் 39 அணிகள் என இதுவரை 42 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரியவந்துள்ளது. இன்னும் 6 அணிகள் தகுதி பெற வேண்டும்.

    • எனது செயல்பாடு நன்றாகவே இருந்தது.
    • பதக்கமேடையில் ஏற முடியாமல் போய் விட்டது.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், எகிப்தில் நடந்த உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தோல்வியை தழுவினார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் மனு பாக்கர் பேசுகையில்,

    'உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்வதே எனது இலக்காக இருந்தது. எனது செயல்பாடு நன்றாகவே இருந்தது. ஓரளவு நல்ல ஸ்கோர் எடுத்தேன். ஆனாலும் பதக்கமேடையில் ஏற முடியாமல் போய் விட்டது. சக வீராங்கனை இஷா சிங் பதக்கம் வென்றார்.

    விளையாட்டில் நீங்கள் ஒவ்வொரு நாளும் பதக்கம் வெல்ல முடியாது. சில சமயம் தோல்விகளும் வரும். என்னை பொறுத்தவரை நான் தான் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதில்லை. இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க வேண்டும். அதை யார் வென்றாலும் உற்சாகப்படுத்துவேன்' என்றார்.

    • ஜிம்பாப்வேவுக்கு எதிரான இன்றைய போட்டியில் பாபர் அசாம் டக்அவுட் ஆனார்.
    • இது அவரின் 9வது டி20 டக்அவுட் ஆகும்.

    பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே- பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

    முதலில் விளையாடிய ஜிம்பாப்வே 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. சாஹிப்சதா பர்ஹான் (16) ஆட்டமிழந்ததும், பாபர் அசாம் களம் இறங்கினர். இவர் 3 பந்துகளை சந்தித்த நிலையில் எவன்ஸ் பந்தில் டக்அவுட் ஆனார்.

    டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாமின் 9ஆவது டக் இதுவாகும். இதன் மூலம் அதிக முறை டக்அவுட் ஆன பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஷாகித் அப்ரிடியை பின்னுக்குத் தள்ளி 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் ஜாலி- காயத்ரி ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்தது.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.

    பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, இந்தோனேசியாவின் குசுமா- பிஸ்பிதா சாரி ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இந்தோனேசிய ஜோடி 21-10, 21-14 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

    இதன்மூலம் ஜாலி-கோபிசந்த் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    • டாஸ் வென்ற கர்நாடக அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 547 ரன்கள் குவித்தது.

    பெங்களூரு:

    ரஞ்சி டிராபி தொடரின் 5-வது சுற்று போட்டி நடந்து வருகிறது. கர்நாடகாவின் ஹூப்ளியில் கர்நாடகா, சண்டிகர் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கர்நாடக அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 547 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ஸ்மரண் ரவிச்சந்திரன் சிறப்பாக ஆடி இரட்டை சதம் கடந்து 227 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட நிலையில் கருண் நாயர் 95 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயாஸ் கோபால் 62 ரன்னும், ஷிகர் ஷெட்டி 59 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதையடுத்து ஆடிய சண்டிகர் அணி முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் மனன் வோரா பொறுப்புடன் ஆடி சதமடித்து 106 ரன் எடுத்தார்.

    கர்நாடக அணிச் ஆர்பில் ஷ்ரேயாஸ் கோபால் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    பாலோ ஆன் பெற்ற சண்டிகர் அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. கர்நாடக அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    இறுதியில், சண்டிகர் 2வது இன்னிங்சில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 185 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடக அணி அபார வெற்றி பெற்றது.

    கர்நாடக அணியின் ஷ்ரேயாஸ் கோபால் இரு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்தினார். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    ×