என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    தென் ஆப்பிரிக்கா தொடருக்கு ரெடி.. தீவிர பயிற்சியில் ஹர்திக் பாண்ட்யா
    X

    தென் ஆப்பிரிக்கா தொடருக்கு ரெடி.. தீவிர பயிற்சியில் ஹர்திக் பாண்ட்யா

    • இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நவம்பர் 30-ந் தேதி தொடங்குகிறது.
    • காயத்தில் இருந்து குணமடைந்த ஹர்திக் பாண்ட்யா வலை பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. அந்த தொடர் நவம்பர் 30-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் அந்த தொடரில் இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விளையாட தயாராகி வருகிறார். இவர் நடப்பு ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது காயமடைந்தார். சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இறுதிப்போட்டியில் விலகினார். இருப்பினும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

    காயத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் விளையாடவில்லை. தற்போது காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா, வரும் 26-ம் தேதி தொடங்கவுள்ள சயத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் பரோடா அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த தொடருக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கும் தயாராகும் வகையில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×