search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    INDIA கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பேன்: அரவிந்த் கெஜ்ரிவால்
    X

    INDIA கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பேன்: அரவிந்த் கெஜ்ரிவால்

    • ஒருங்கிணைப்பு குழு, ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு நடைபெற வாய்ப்பு
    • மாநிலத்தில் நேருக்குநேர் மோதும் சூழல் குறித்து ஆராய்தல்

    டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மும்பையில் வருகிற 31-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 1-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில் ''நான் மும்பைக்குச் செல்வேன். அங்கு நடப்பதை தங்களிடம் தெரிவிப்பேன்'' என பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.

    மும்பையில் நடைபெற இருக்கும் இருநாள் கூட்டம், கர்நாடகாவில் நடைபெற்றதுபோல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்நாள் அனைத்து தலைவர்களும் மும்பை செல்வார்கள். இரண்டாவது நாள் எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்து முடிவு எடுப்பார்கள்.

    இந்த கூட்டத்தில் மாநிலத்தில் நேருக்குநேர் மோதும் சூழ்நிலை குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தை உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் நடத்துகின்றன. இந்த கூட்டத்தில் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு, ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

    Next Story
    ×