search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜனதாவுக்கு வாருங்கள், தொந்தரவு செய்யமாட்டோம் என்கிறார்கள்: கெஜ்ரிவாலின் அடுத்த குற்றச்சாட்டு
    X

    பா.ஜனதாவுக்கு வாருங்கள், தொந்தரவு செய்யமாட்டோம் என்கிறார்கள்: கெஜ்ரிவாலின் அடுத்த குற்றச்சாட்டு

    • ஏழு எம்.எல்.ஏ.-க்களை இழுக்க குதிரை பேரம் நடைபெற்றதாக பா.ஜனதா மீது குற்றச்சாட்டு.
    • டெல்லி போலீசின் குற்றப்பிரிவு அவருக்கு சம்மன் அனுப்பி விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

    அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் பனிப்போர் நடைபெற்று வருகிறது என்றே சொல்லலாம். மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் கெஜ்ரிவால் அரசுக்கு பல்வேறு தொந்தரவு கொடுத்து வருவதாக மத்திய அரசு மீது கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பா.ஜனதா குதிரை பேரம் பேசுகிறார்கள். எங்களுடைய எம்.எல்.ஏ.-க்கு தலா 25 கோடி ரூபாய் தருவதாக ஏழு பேரிடம் பேரம் பேசப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

    ஆனால், பா.ஜனதா இதை முற்றிலும் மறுத்தது. டெல்லி காவல்துறையில் புகார் அளித்தது. இது தொடர்பாக டெல்லி போலீசாரின் குற்றப்பிரிவு அவருக்கு சம்மன் அனுப்பியது. குதிரை பேரம் பேசப்பட்டதாக தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் டெல்லி ரோஹினியில் பள்ளி கட்டடத்தை அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் எதுவும் நடக்காது. அவர்களுக்கு நான் அடிபணியமாட்டேன். பா.ஜனதாவுக்கு வாருங்கள். உங்களுக்கு தொந்தரவு கொடுக்கமாட்டோம் என்கிறார்கள். ஒருபோதும் அவர்களுடன் சேரமாட்டேன். அவர்களை எங்களை மன்னிக்க நாங்கள் என்ன குற்றம் செய்தோம்.

    நாங்கள் பள்ளிகள், மருத்துவமனைகள், கிளினிக், சாலைகள் முன்னேற்றத்திற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது?

    இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    Next Story
    ×