search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல்காந்தியை கிண்டல் செய்த ரஷிய செஸ் வீரர் காஸ்பரோவ்
    X

    ராகுல்காந்தியை கிண்டல் செய்த ரஷிய செஸ் வீரர் காஸ்பரோவ்

    • காஸ்பரோவ் கிண்டலாக எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
    • சவால் விடுவதற்கு முன்பு ரேபரேலியில் வெற்றி பெற வேண்டும்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி 2 தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் களத்தில் நிற்கும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்து விட்டது. உத்தரபிர தேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் அவர் போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    ராகுல்காந்திக்கு பிடித்த செஸ் வீரர் ரஷியாவை சேர்ந்த கேரி காஸ்பரோவ் ஆவார். முன்னாள் உலக சாம்பியனான அவர் 2005-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது ராகுல்காந்தி தனது செல்போனில் செஸ் விளையாடும் வீடியோவை காங்கிரஸ் கட்சி சமீபத்தில் வெளியிட்டது. வீடியோவில் காஸ்பரோவ் தனக்கு விருப்பமான செஸ் வீரர் என்று அவர் தெரிவித்தார்.

    மேலும் விளையாட்டுக்கும், அரசியலுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை குறிப்பிட்டார். அந்த வீடியோவில் அரசியல் வாதிகளில் தன்னை சிறந்த செஸ் வீரர் என்று ராகுல்காந்தி தெரிவித்து இருந்தார்.

    ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு ராகுல் காந்தியின் செஸ் ஆர்வம் குறித்து காஸ்பரோவ் கிண்டலாக எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பாரம்பரியமான நீங்கள் (ராகுல்காந்தி) முதல் இடத்துக்கு சவால் விடுவதற்கு முன்பு ரேபரேலியில் வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு காஸ்பரோவ் கிண்டலாக தெரிவித்தார். அவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக விமர்சித்தார். தனது நாட்டை விட்டு வெளியேறி அவர் குரோஷியாவில் வசிக்கிறார்.

    ராகுல்காந்தி பற்றி கிண்டலாக காஸ்பரோவ் தெரிவித்த கருத்து வைரலானது. இதை தொடர்ந்து காஸ்பரோவ் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    எனது சிறிய நகைச்சுவை இந்திய அரசியலில் நிபுணத்துவம் பெறாது என்று நான் நம்புகிறேன்.

    ஆனால் 1000 கண்கள் கொண்ட அனைத்தையும் பார்க்கும் அசுரன் என்று நான் ஒருமுறை விவரித்தது போல ஒரு அரசியல்வாதி என், அன்பான விளையாட்டில் ஈடுபடுவதை என்னால் பார்க்க தவற முடியாது.

    இவ்வாறு காஸ்பரோவ் கூறியுள்ளார்.

    சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான குகேஷ் சமீபத்தில் நடந்த கேன்டிடேட் செஸ் போட்டியில் வெற்றி பெற்று உலக போட்டிக்கு தேர்வு பெற்ற போது குகேசை இந்திய பூகம்பம் என்று காஸ்பரோவ் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×