search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் நடை பயணம்: மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் புறக்கணிப்பு- இந்தியா கூட்டணியில் தொடரும் சலசலப்பு
    X

    ராகுல் நடை பயணம்: மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் புறக்கணிப்பு- இந்தியா கூட்டணியில் தொடரும் சலசலப்பு

    • யாத்திரைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததாக காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.
    • விரைவில் மேற்கு வங்காளம், பீகார், உத்தர பிரதேச மாநிலங்களில் நடக்க உள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து, காஷ்மீர் வரை பாத யாத்திரை நடத்தினார்.

    அந்த யாத்திரைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததாக காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள். இதையடுத்து ராகுலை மீண்டும் நடை பயணம் செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர்.

    அதை ஏற்று ராகுல் மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி நடை பயணத்தை தொடங்கி உள்ளார். தற்போது வடகிழக்கு மாநிலங்களில் அவர் யாத்திரை மேற்கொண்டுள்ளார். விரைவில் மேற்கு வங்காளம், பீகார், உத்தர பிரதேச மாநிலங்களில் நடக்க உள்ளார்.

    இந்த யாத்திரையில் பங்கேற்குமாறு இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    ராகுலின் யாத்திரையில் பங்கேற்க மாட்டேன் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் மட்டுமே கொடுக்கப்படும். அதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் காங்கிரஸ் அழைப்பை பரிசீலனை செய்வேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

    அதுபோல உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவும் ராகுலின் நடை பயணத்தை புறக்கணிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. ராகுல் நடைபயணம் வரும்போது சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் யாரும் அதில் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று அகிலேஷ் அறிவித்துள்ளார்.

    இது காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை அதிகரிக்க செய்துள்ளது. இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×