search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் இருவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்
    X

    கர்நாடகாவில் முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் இருவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்

    • மலிகாய்யா கட்டேதார் ஆறு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
    • சாரதா மோகன் ஷெட்டி இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

    கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    கட்டேதார் கலபுரகி மாவட்டத்தின் அஃப்ஜல்புர் தொகுதியில் இருந்து ஆறு முறை எம்.எல்.ஏ.-க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கர்நாடகா மாநில முன்னாள் மந்திரியும் ஆவார்.

    கலபுரகி மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் சொந்த மாவட்டம் ஆகும். கார்கே 2009 மற்றும் 2014 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். கடந்த 2019 தேர்தலில் தோல்வியடைந்தார். கார்கேயின் மருமகன் ராதாகிருஷ்ணா டோட்டாமணி கலபுரகி (குல்பர்கா) தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்த மாதம் தொடக்கத்தில் கட்டேதார் சகோதரர் நிதின் வெங்கையா கட்டேதார் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இதனால் மலிகய்யா கட்டேதார் அதிருப்தி அடைந்தார். இந்த நிலையில் பா.ஜனதாவில் இருந்து விலகியுள்ளார்.

    கடந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது அஃப்ஜல்புர் தொகுதியில் எம்.ஒய். பாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மலிகய்யா கட்டேதார் 3-வது இடம் பிடித்தார். அவரது சகோதரர் நிதின் சுயேட்சையாக போட்டியிட்டு 2-வது இடம் பிடித்தார்.

    மலிகாய்யா முதலில் காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார். பின்னர் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். அவரது சகோதரர் பா.ஜனதா கட்சியில் இணைந்த விவகாரத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் எடியூரப்பா மற்றும் அவரது மகன் விஜயேந்திரா ஆகியோரை விமர்சித்திருந்தார்.

    கார்கேயின் மகனும், கர்நாடகா மாநில மந்திரியுமான பிரியங்க் கார்கே, கட்டேதார் காங்கிரஸ் கட்சியில் இணைய முக்கிய காரணமாக இருந்தார் எனக் கூறப்படுகிறது.

    சாரதா மோகன் ஷெட்டி உத்தாரா கன்னடா மாவட்டத்தின் கும்தா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் 2013 மற்றும் 2018-ல் எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 தேர்தலின்போது போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பா.ஜனதா கட்சியில் இணைந்தார்.

    கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், பிரியங்க் கார்கே ஆகியோர் இருவரையும் வரவேற்றுள்ளனர்.

    Next Story
    ×