search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முதல்-மந்திரி பசவராஜ்
    X
    முதல்-மந்திரி பசவராஜ்

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு- முதல்-மந்திரி பசவராஜ் அறிவிப்பு

    மத்திய அரசிடம் முறையான அனுமதி பெற்று இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக இருக்கிறது” என அறிவித்தார்.

    பெங்களூர்:

    மேகதாதுவில் ரூ.9 ஆயிரம் கோடியில் 66 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணை கட்ட முடிவு எடுக்கப்பட்டது.

    இதன்மூலம் பெங்களூரு, மைசூர், மாண்டியா ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூட்டுகுடிநீர் திட்டமும், மின்சார தேவையை பூர்த்தி செய்ய நீர்மின் உற்பத்தி நிலையமும் அமைக்கப்படும் என கர்நாடகா அறிவித்தது.

    ஆனால் இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என மத்திய அரசிடம் தமிழக அரசு முறையிட்டது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது.

    இந்த நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சட்டப் பேரவையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர், “மேகதாதுவில் அணை கட்டுவதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    மத்திய அரசிடம் முறையான அனுமதி பெற்று இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக இருக்கிறது” என அறிவித்தார்.

    இந்த அறிவிப்பை விவசாய அமைப்பினர் வரவேற்றுள்ளனர். அதேவேளையில் தமிழக விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு, மேகதாது திட்டத்தை தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    இதையும் படியுங்கள்... மக்கள் பிரதிநிதிகள் பொது வாழ்க்கையில் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்: வெங்கையா நாயுடு

    Next Story
    ×