search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    150 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை - பிரதமர் பெருமிதம்

    கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் 2-வது வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவில் 150 கோடி கொரோனா தடுப்பூசிகள் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளோம்.

    கொரோனாவை கட்டுப்படுத்த 150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.

    சாதனை படைத்த நாட்டின் விஞ்ஞானிகள், தடுப்பூசி உற்பத்தியாளர்கள், சுகாதாரத் துறையினருக்கு நன்றி. 

    5 நாட்களில் 15 - 17 வயதுடைய 1.5 கோடி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    18 வயதுக்கு மேற்பட்ட 90 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

    நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார். 

    Next Story
    ×