என் மலர்

  செய்திகள்

  ராகுல் காந்தி
  X
  ராகுல் காந்தி

  ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதாவினர் ‘போலி இந்துக்கள்’: ராகுல் காந்தி கடும் தாக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தங்கள் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜனதாவின் சித்தாந்தத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்த இரண்டில் ஒன்று மட்டுமே நாட்டை ஆள முடியும்.
  புதுடெல்லி :

  மகிளா காங்கிரசின் நிறுவன தினத்தையொட்டி நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவினரை அவர் கடுமையாக தாக்கி பேசினார்.

  இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தங்கள் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜனதாவின் சித்தாந்தத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்த இரண்டில் ஒன்று மட்டுமே நாட்டை ஆள முடியும். அவர்கள் (ஆர்.எஸ்.எஸ்-பா.ஜனதாவினர்) போலி இந்துக்கள். இந்து மதத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் மத தரகர்கள். ஆனால் அவர்கள் இந்துக்கள் அல்ல’ என்று சாடினார்.

  லட்சுமி தேவி, ஒருவரின் குறிக்கோள்களை அடைய உதவும் சக்தியையும், துர்கா தேவி பாதுகாக்கும் சக்தியையும் குறிப்பதாக கூறிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது இந்த சக்திகளை வலுப்படுத்தியதாகவும், ஆனால் பா.ஜனதா ஆட்சியில் இந்த சக்திகளை வலுவிழக்க செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
  Next Story
  ×