search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி ராகுல் காந்தி
    X
    பிரதமர் மோடி ராகுல் காந்தி

    நாடு தழுவிய ஊரடங்கு தவிர்க்க முடியாததாகி விட்டது: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

    கடந்த ஆண்டு ஊரடங்கு சமயத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டம் மீண்டும் ஏற்படுவதை தவிர்க்க நலிந்த மக்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும். உணவு ஆதாரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
    புதுடெல்லி :

    பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    உங்கள் அரசுக்கு கொரோனா பிரச்சினையிலும், தடுப்பூசி போடுவதிலும் தெளிவான கொள்கை எதுவும் இல்லை. கொரோனா பெரிதாக பரவிக்கொண்டிருக்கும்போதே, அவசரப்பட்டு வெற்றியை அறிவிப்பதில்தான் ஆர்வமாக இருக்கிறது. இவையெல்லாம் இந்தியாவை ஒரு ஆபத்தான கட்டத்தில் நிறுத்தி உள்ளன. கொரோனா, வெடித்து பரவி வருகிறது.

    ஒட்டுமொத்த அரசு எந்திரங்களும் முடங்கும் நிலையில் உள்ளன. மத்திய அரசின் தவறுகள், மற்றொரு நாடு தழுவிய ஊரடங்கை கொண்டுவருவதை ஏறக்குறைய தவிர்க்க முடியாததாக்கி விட்டன.

    நாட்டு மக்களும் ஊரடங்கை எதிர்கொள்ள தயாராகி விட்டனர். கடந்த ஆண்டு ஊரடங்கு சமயத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டம் மீண்டும் ஏற்படுவதை தவிர்க்க நலிந்த மக்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும். உணவு ஆதாரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். போக்குவரத்து வசதி தேவைப்படுபவர்களுக்கு அதை செய்துதர வேண்டும்.

    இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.
    Next Story
    ×