search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    ‘இதற்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்’- தேர்தல் கமிஷன் நோட்டீஸ் பற்றி மம்தா பானர்ஜி கருத்து

    “பா.ஜ.க.வுக்காக மத்திய படையினர் வேலை செய்வதை நிறுத்தும் வரையில் நான் இப்படித்தான் பேசுவேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு தேர்தல் நடத்தை விதிகள் மீறல் தொடர்பாக தேர்தல் கமிஷன் 2 நோட்டீஸ்களை அனுப்பி உள்ளது. இதற்கு பதில் அளிக்கிற வகையில், ஜமால்பூர் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா ஆவேசமாக பேசினார். 

    அப்போது அவர் கூறுகையில், “பா.ஜ.க.வுக்காக மத்திய படையினர் வேலை செய்வதை நிறுத்தும் வரையில் நான் இப்படித்தான் பேசுவேன். அவர்கள் எப்போது அதை நிறுத்துகிறார்களோ, அப்போது நான் அவர்களுக்கு ‘சல்யூட்’ அடிப்பேன். விளக்கம் கேட்டு நீங்கள் (தேர்தல் கமிஷன்) அனுப்பிய நோட்டீஸ்களுக்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். 
    பிரதமர் மோடி.
    நீங்கள் பா.ஜ.க. தூண்டுதலின் பேரில் செயல்படுகிறீர்கள். வாக்குப்பதிவு நாளில் பிரதமர் பிரசாரம் செய்கிறாரே, இது தேர்தல் நடத்தைவிதிகள் மீறல் இல்லையா?” என குறிப்பிட்டார்.
    Next Story
    ×