search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    மத்திய அரசு ஆணவத்தை விடுத்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் - ராகுல் காந்தி

    மத்திய அரசு ஆணவத்தை விடுத்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லி எல்லையில் 41-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட 7 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

    தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. விவசாயிகள் அமைத்துள்ள தற்காலிக கூடாரங்களுக்குள் மழை நீர் புகுந்தது. மழை தொடர்ந்து பெய்துவருவதாலும், கடுமையான குளிராலும் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
                   
    இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது:

    மோடி அரசின் ஆணவமும், அக்கறையின்மையும் 60 விவசாயிகளின் உயிரைப் பறித்திருக்கிறது. விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்பதற்குப் பதிலாக, கண்ணீர்புகை குண்டுகளால் அவர்களை அரசு தாக்கிக் கொண்டிருக்கிறது. தங்களின் நட்புக்குரிய தொழில் முதலாளிகளின் நலன்களைக் காக்கவே இதுபோன்ற மிருகத்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. அரசாங்கம் ஆணவத்தை விடுத்து, விவசாயத்துக்கு எதிரான புதிய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×