search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நரேந்திர மோடி
    X
    நரேந்திர மோடி

    சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரதமர் மோடி புகைப்படம்

    பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பிரதமர் நரேந்திர மோடி ஒரு குழுவினருடன் அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படத்தில் பிரதமர் மோடி அருகில் இருப்பவர்கள் பிரதமர் அலுவலக ஊழியர்கள் என கூறப்படுகிறது. மேலும் ஊழியர்களில் அலுவலக உதவியாளர்களும் இருப்பதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    `இந்திய பிரதமர் தனது அலுவலக ஊழியர்களுடன் படிக்கட்டில் அமர்ந்து இருக்கிறார். இவர்களில் நான்கு பேர் அலுவலக உதவியாளர்கள் ஆவர். இவர் புகழ் பெற்ற உலக தலைவர் மட்டுமின்றி கர்ம யோகி ஆவார். இதில் உள்ள தகவல், அனைவரும் ஒன்றாக அமர்வோம், ஒன்றாக பணியாற்றுவோம், ஜெய் ஹிந்த்.' எனும் தகவலுடன் வைரல் படம் பகிரப்பட்டு வருகிறது.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், பிரதமர் மோடியுடன் அமர்ந்து இருப்பவர்கள் பாஜக குஜராத் அலுவலக ஊழியர்கள் ஆவர். உண்மையில் இந்த புகைப்படம் 2014 பிப்ரவரி மாதத்தில் எடுக்கப்பட்டது ஆகும். நரேந்திர மோடி பிரதமராக 2014 மே மாதத்தில் பதிவேற்றார்.

    அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் பிரதமர் மோடியுடன் இருப்பவர்கள் அவரது அலுவலக ஊழியர்கள் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×